பயனர்:Lekha S 2110489/மணல்தொட்டி
நாலடியார்
தொகுநாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
திருக்குறள்:
தொகுதிருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.
திருக்குறளும் நாலடியாரும்:
தொகுநீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்) காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
ஒப்பீட்டு நோக்கில் திருக்குறள், நாலடியார் கூறுவன:
தொகுஅறம் என்பது அன்பின் அடியாகத் தோன்றும் அருளை உணர்த்துவதாகும். அறப் பணிகள் அனைத்தும் அருட்பணிகளே யாகும். அறத்தைச் சான்றோர்கள் இல்லறம் துறவறம் என இரு வகையாக வகுத்துச் சென்றுள்ளனர்.
இல்லறம் என்பது ஒருவன் மனைத்தக்க மாண்புடையாளை மனையாளாகக் கொண்டு நல்லெழுக்க நெறி நின்று அறவோர்க் களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க் கெதிர்தல் போன்ற நல்லறப் பண்புடையாளர்களாய் திகழ்ந்து இனிது வாழ்தலாகும். இல்லறமே அருள்-அறப்பணியின் தொடக்கமாகும். இல்லறம் பேணாதவர் உலகில் அறம் போற்றல் இயலாது என்பது வள்ளுவர் நெறியால் விளங்குகின்றது. இல்லத்தில் அருள் நெறியையும் அதன் பயனாகிய அறப்பணியையும் பயின்றும் தேர்ந்த பின்னரே, பற்றற்ற துறவினை மேற்கொள்ளல் வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் வழியாகும். இல்லறம் பேணாது துறவறம் பூணல் என்பது உலகியலுக்கு ஒவ்வாத ஒன்றாம். பேரின்ப வீட்டுக்கு வழி காட்டும் இல்லறத்தைச் சான்றோர்கள் பெரிதும் மதித்துப் போற்றி வாழ்ந்து சென்றுள்ளனர். இதனையே வள்ளுவரும் "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை" என்றும் "இல்லறம் அல்லது நல்லறமன்று 'என்றும் பலபடப் போற்றியுரைத்துள்ளனர். வள்ளுவரும் முதற்கண் இல்லறத்தை வைத்து பின்னர் துறவறத்தை அமைத்து அறத்துப்பால் இயற்றியுள்ளமையும் இக்கருத்தினை வலியுறுத்து கின்றது.