Pallavarayar
Joined 7 பெப்பிரவரி 2012
அருண் பல்லவராயர் என்பது எனது பெயர். அடிப்படையில் அறிவியல் பின்புலத்தைக் கொண்டவனாக இருந்தபோதும் பள்ளி, கல்லூரிக் காலங்களிலிருந்தே என்னை ஒரு இலக்கியவாதியாகவும், எழுத்தாளனாகவுமே அடையாளம் காட்டிக் கொண்டேன். வாசிப்பின் மீது கொண்ட நேசிப்பு என்னை எழுத செய்ததது. எழுத ஆரம்பித்த பின் என் வாசிப்பு தாகம் இன்னும் அதிகரித்ததைப் போல உணருகிறேன்.
கல்வித் தகுதிகள்
தொகு- இளநிலை கணிப்பொறி அறிவியல்
- முதுநிலை கணிப்பொறி மற்றும் தகவல் தொடர்பியல்
- ஆய்வியல் நிறைஞர் பட்டம் - நரம்பு வலைப்பின்னல் மற்றும் செயற்கை நுண்ணறிவு
- இளநிலை சட்டம்
- முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்
- சமஸ்கிருதத்தில் பட்டயம்
- இந்தி மொழியில் சான்றிதழ்
எழுத்துலக அனுபவம்
தொகு- பக்தி நாதம் என்ற ஆன்மீக மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.
- டிஜிட்டல் ஹைவே என்ற தொழில்நுட்ப மாத இதழில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
- தமிழ் கம்ப்யூட்டர் என்ற தொழில்நுட்ப இதழில் ஃப்ரீலான்சராக தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதியுள்ளார்
- மங்கையர் மலர் என்ற மகளிர் மாத இதழில் என்ன கோர்ஸ் எங்கு படிக்கலாம் என்ற பகுதியில் கட்டுரைகள் எழுதியுள்ளார்
- உண்மையின் முகவரி என்ற சமுதாய மாத இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்
- மாற்றத்திற்கான முகவரி என்ற சமுதாய மாத இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்
- பள்ளிவாசல் டுடே என்ற இஸ்லாமிய செய்தி வார இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்
இந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம்
தொகுஇந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
மென்பொருள் வல்லுநர்
தொகுஇவர் மென்பொருள் வல்லுநராக பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். தற்போதும் தனிப்பட்ட முறையில் தமிழ் மொழியினை இணையத்தில் பயன்படுத்துவதற்கான பல கருவிகளை உருவாக்கி வருகிறார்.
படைப்புகள்
தொகுசட்டம்
தொகு- வழக்கறிஞர்கள் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
- நீதிமன்ற அவமதிப்பு சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
- இந்திய சாட்சியச் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடம்
தொகு- ஜாதகம் கணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
- ஜோதிடர்களுக்கான கணிதமுறைகளும் அட்டவணைகளும்
- உபகிரஹ ஸ்புடம் செய்வதற்கான கணிதங்கள்
- பஞ்சாங்கம் கணிக்க கற்றுக் கொள்ளுங்கள்
- ஜோதிடக் கதைகள்
- ஜோதிடப் பழமொழிகள்
நிர்வாகம்
தொகு- பிசினஸ் சூத்திரங்கள்
- அன்றாட வாழ்வில் நிர்வாகத்தை கற்றுக்கொள்ளுங்கள்
பிற
தொகுபணியாற்றிய நிறுவனங்கள்
தொகு- ஹிடாச்சி - ஜப்பான்
- லார்சன் அன்ட் டூப்ரோ - சென்னை
- ஸ்கோப் இன்டர்நேஷனல் - சென்னை
- கேப்ஜெமினி - சென்னை