பயனர்:Parasuraman.p/மணல்தொட்டி
துப்பாக்கி விளையாட்டு வீராங்கனை | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 30 மார்ச்சு 1997 புது தில்லி, இந்தியா[1] | ||||||||||||||||
வசிப்பிடம் | பஞ்ச்குலா, அரியானா, இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி | ||||||||||||||||
பயிற்றுவித்தது | தெயிந்தர் சிங் தில்லான் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||
1 செப்டம்பர் 2019 இற்றைப்படுத்தியது. |
யசாசுவினி சிங் தேசுவால் (Yashaswini Singh Deswal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2019 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும்போட்டி கூட்டமைப்பு போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தேசுவால் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த போட்டியில் இந்தியா பங்கேற்கும் தகுதியைப் பெற்றது.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதேசுவால் 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 அன்று புது தில்லியில் பிறந்தார். இவரது தந்தை எசு.எசு.தேசுவால் ஓர் இந்தியக் காவல் பணி அலுவலராவார். இந்தியா-திபெத் எல்லை காவல்துறை பொது இயக்குநராக இவர் பணிபுரிந்தார். தாய் சரோச் தேசுவால் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டத்தில் முதன்மை வருமான வரி தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் தேசுவால் படித்துக் கொண்டிருந்தார். [2]
தொழில் முறை சாதனைகள்
தொகு- தேசுவால் 2012 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில் சீனாவின் நாங்கிங் நகரில் நடைபெற்ற கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார். அங்கு 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் விளையாட்டின் இறுதிப் போட்டிவரை முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
- 2016 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் சுகில் நகரில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு இளையோர் உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் மற்றும் குழு என இரண்டு பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- அசர்பைசானின் குவாபாலா நகரில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடும் குழுப் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் அக்குழுவினருக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.
- 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அணி நிகழ்வில் தங்கப் பதக்கத்தையும், தனிநபர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தேசுவால் பெற்றார்.
- 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு போட்டியில் இளையோர் உலக சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். புள்ளிகள் கணக்கில் அதுவரையில் எட்டியிருந்த சாதனை புள்ளிகளை சமன் செய்தார்.[2][3]
- 2019 ஆம் ஆண்டு இரியோ டி செனிரோவில் நடைபெற்ற 2019 பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டியில் தேசுவால் தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் இவர் முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஒலினா கோசுடெவிச்சை தோற்கடித்தார். [4]
= மேற்கோள்கள்
தொகு- ↑ "Yashaswini Singh DESWAL". ISSF. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ 2.0 2.1 Sharma, Nitin (1 September 2019). "Panchkula shooter Yashaswini Singh Deswal grabs gold, Olympic quota". The Indian Express. https://indianexpress.com/article/sports/sport-others/panchkula-shooter-yashaswini-singh-deswal-grabs-gold-olympic-quota-5955614/.
- ↑ "India’s Deswal equals Junior World Record, secures India’s second Gold in Suhl". ISSF. 25 June 2017. https://www.issf-sports.org/news.ashx?personissfid=SHINDW3003199701&newsid=2849.
- ↑ "Yashaswini Deswal Shoots Down Gold, Secures 9th Olympic Quota For India". NDTV. 1 September 2019. https://sports.ndtv.com/shooting/yashaswini-deswal-shoots-down-gold-secures-9th-olympic-quota-for-india-2093715.
2. மனு பாக்கர்
தொகுகீழுள்ளதை மேம்படுத்த ஒட்ட வேண்டும். உதவிக்கு அழைக்கவும்.
வாழ்வும் குடும்பப் பின்னணியும்
தொகுமனு பாக்கர் அரியாணா மாநிலத்தின் யாச்சர் மாவட்டத்தில் உள்ள கோரியா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கப்பற்படை பொறியாளராகவும் இவரது தாய் பள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர். இந்த இளம் வீராங்கனை இயல்பாகவே விளையாட்டுகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் குத்துச்சண்டை, தடகளம் , சறுக்கு விளையாட்டு, ஜுடோ கராத்தே போன்ற பல விளையாட்டுகளை கற்றுக் கொண்டிருக்கிறார்.
பாக்கர் தனது சிறு வயதிலேயே பல சவால்களை எதிர்கொண்டார். பொதுமக்கள் பயணிக்கக்கூடிய வாகனங்களிலேயே தனது உரிமம் பெற்ற துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியிருந்தது. 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் அவர் துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. இதனால் பாக்கரின் தந்தை மகளுக்கு உதவுவதற்காக தனது வேலையை விட்டுவிட்டு, அவரை போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க, உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் செல்வார். [1]
துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் பாக்கருக்கு விலையுயர்ந்த துப்பாக்கிகள் தேவைப்பட்டன. அதற்கு அவரின் குடும்பமே முழு ஆதரவையும் அளித்ததாக பாக்கர் குறிப்பிடுகிறார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு பிறகு இந்திய தேசிய துப்பாக்கிச் சுடு சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தலைமையில் இளைஞர்களுக்கான துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் இந்திய அரசு முதலீடு செய்தது. இத்திட்டத்திலும் அவர் பயனடைந்தார்.
இத்திட்டத்தின் மூலம் திறன் வாய்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர்களாக இருந்தவர்கள், இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர்களாக நியமிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் ஏஸ் ஷூட்டிங் சாம்பியன்களில் ஒருவரான ஜஸ்பால் ராணா, பாக்கருக்கு பயிற்சியாளராக இருந்தார். [3]
தொழில்முறை சாதனைகள்
தொகுமனு பாக்கர் 2017ஆம் ஆண்டு, கேரளாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்று தேசிய சாதனையை முறியடித்தார். மேலும் 2017 ஆசிய இளையோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். [5]
2018ஆம் ஆண்டு மெக்சிகோவின் குவாடலஜாராவில் உலகக் கோப்பைக்கான சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், பாக்கர் இரண்டு முறை சாம்பியனான அலெஜாண்ட்ராவை தோற்கடித்தார். இந்த வெற்றி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இளைய இந்தியர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்தது.[2]
மேலும் 2018ல் ISSF இளையோருக்கான உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். [3]
அதே ஆண்டு, மனு பாக்கர் தனது 16 வயதில் காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். [6]
மேலும் தனது மதிப்பெண்களுடன் காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையையும் அவர் படைத்தார். 2019ஆம் ஆண்டு மே மாதம், முனிச் ISSF உலகக் கோப்பையில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதி பெற்றார். [4]
ஆகஸ்ட் 2020ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனு பாக்கருக்கு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பித்தார். [7]
மேற்சான்றுகள்
https://www.bbc.com/hindi/sport-43299203 (1)
All you need to know about Manu Bhaker, India’s 16-year-old shooting phenomenon[2]
Young Guns: How India’s investment in a junior shooting system post 2012 is striking gold[3]
Manu Bhaker clinches Tokyo Olympics quota in 10m air pistol[4]
https://www.bbc.com/tamil/sport-55977681 [5]
https://www.issf-sports.org/athletes/athlete.ashx?personissfid=SHINDW1802200201 (6)
https://www.hindustantimes.com/other-sports/national-sports-awards-live-updates-virtual-ceremony-begins/story-XUdBnaOgA2axsFo1OnNfOP.html (7)
பிறப்பு: பிப்ரவரி 18, 2002
கோரியா கிராமம், ஜாஜ்ஜர், ஹரியானா
நாடு: இந்தியா
விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதல்
உலகக் கோப்பையில் 8 தங்கப் பதக்கங்கள்
யூத் ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 1 வெள்ளி பதக்கம்
காமன்வெல்த் போட்டியில் 1 தங்கப் பதக்கம்
ஆசிய ஷூட்டிங் சியர் உலகக் கோப்பையில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம்
மதிப்புரை: