Parthiban Rajasekaran
என் சுயவிவரம்
தொகுபெயர்: இரா. பார்த்திபன்
வயது: 28
கல்வித்தகுதிகள்:
- இளங்கலை வணிகவியல் (B.com), உற்பத்திச் செலவுத் தணிக்கையாளராக்கான (ICWAI) படிப்பை படித்துக்கொண்டிருக்கிறேன்
தொழில்:
- முழுநேரம் - கணக்காளன்
- ஓய்வுநேரம் - 'சமயம், இசை, மொழி வரலாறு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்வது, சேகரிப்பது
உறைவிடம்: வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை, தமிழ்நாடு
பூர்வீகம்: திருமங்கையாழ்வார் வாக்குப்படி "தேனமர் சோலை மாடமாமயிலை திருவல்லிக்கேணி சென்னை, தமிழ்நாடு
விக்கிபீடியாவை 2009 முதலாய் பயன்படுத்துகின்றேன்
விக்கிபீடியனாய்: சூன் 2013 முதலாய்...
ஆர்வங்கள்: தமிழிலக்கியம், மொழியியல், வரலாறு (குறிப்பாய் தென்னிந்திய வரலாறு), வைணவம் மற்றும் மானுடத்தொன்மம்
சில வரிகளில்: ""வாய்ப்புகள் வாய்க்கும் போதெல்லாம் தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், இந்து தர்மம் குறித்த என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை பிறரோடு பகிர்ந்துகொள்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறேன். தமிழையும், பேதமற்ற சமூகத்தையும் இரு கண்களாய் கொண்டு, எல்லா உயிர்களும் நற்கதியடைவதையே குறிக்கோளாய்க்கொண்ட வைணவ புரட்சித்துறவி இராமானுசருக்கும், தமிழும் தேசியமும் தவிர வேறொன்றை நினைக்கத்தெரியா புரட்சிக்கவி பாரதிக்கும் தாசன் என்பதில் அளவில்லா ஆனந்தமும், பெருமையும், அடக்கத்தோடுக்கூடிய சிறிது கர்வமும் கொண்டவன்.
ஆச்சரியம்: தாய்மொழியாம் தமிழைக் கூட படிக்கத்தெரியாமல் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளாக வெளிவரும் என் இளைய தமிழ்த் தலைமுறைகளை காணும்போது ஆச்சரியம் மட்டுமல்ல பெருத்த வருத்தமும்கூட.
மின்னஞ்சல் முகவரி : sriparthiban.2020@gmail.com