பயனர்:Poorani98/மணல்தொட்டி

தீக்சா தாகர்
Diksha Dagar
— குழிப்பந்தாட்டக்காரர் —
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 திசம்பர் 2000 (2000-12-14) (அகவை 23)
அரியானா, இந்தியா
தேசியம்  இந்தியா
பணிவாழ்வு
தொழில்முறையாக மாறியது2019
தற்போதையச் சுற்று(கள்)பெண்கள் ஐரோப்பியக் கோப்பை
தொழில்முறை வெற்றிகள்2
சுற்றுகளில் வெற்றிகள்
மகளிர் ஐரோப்பியச் சுற்று1
பிற1

தீக்சா தாகர் (Diksha Dagar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார்.[1] 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார்.

காது கேளாத இவர் பல தொழில்சாரா குழிப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். வளர்ந்து வரும் ஒந்திய தொழில்சாரா குழிப்பந்து வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[2] 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் தொழில்சாரா குழிப்பந்து வீராங்கனைகள் பட்டியலில் இருந்தார்.[3] தீக்சா தாகர் 2017 ஆம்ம் ஆண்டில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் தனிநபர் குழிப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[4] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றார்.[5][6] 2019 ஆம் ஆண்டு பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை வென்ற அதிதி அசோக்கிற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் கோப்பை குழிப்பந்து பட்டத்தை 18 வயதில் வென்ற இளைய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை தீக்சா தாகர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

திக்சா 14 டிசம்பர் 2000 அன்று செவிப்புலன் பிரச்சினை கொண்டவராகப் பிறந்தார். ஆறு வயதிலிருந்தே செவிப்புலன் கருவிகளை காதில் அணியத் தொடங்கினார்.[7] சகோதரர் யோகேசு தாகருடன் சேர்ந்து ஏழு வயதிலிருந்தே குழிப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். சகோதரர் யோகேசு தாகரும்ம் காது கேளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை நரிந்தர் தாகர் இவர்களைப் பயிற்றுவித்தார்.[8]

சாதனைகள்

தொகு
  1. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற கிழக்கிந்திய பெண்கள் மற்றும் இளையோர் பால்டோ தொடரை வென்றார்.
  2. 2016 ஆம் ஆண்டில் சண்டிகர் பெண்கள் மற்றும் இளையோர் குழிப்பந்தாட்டப் போட்டி, பால்டோ தொடர் சாம்பியன் பட்டம், மேற்கு மற்றும் கிழக்கிந்தியப் பெண்கள் மற்றும் இளையோர் குழிபந்தாட்டப் போட்டி ஆகியவற்றை வென்றார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் முதல் 500 பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற சிறப்பை 2016 ஆம் ஆண்டு பெற்றார்[9]
  3. 2017 ஆம் ஆண்டுல் தெலுங்கானா பெண்கள் மற்றும் இளையோர் சாம்பியன் கோப்பை, வடக்கிந்திய பெண்கள் மற்றும் இளையோர் போட்டி மேற்கு இந்திய பெண்கள் மற்றும் இளையோர் போட்டி ஆகியவற்றை வென்றார்.
  4. 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூர் பெண்கள் தொழில் சாரா திறந்த நிலை சாம்பியன் போட்டியை வென்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Diksha Dagar". www.deaflympics.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  2. Bhaduri, Tushar (13 August 2018). "Diksha Dagar, 17, overcomes disability to pursue golf". The Indian Express. https://indianexpress.com/article/sports/asian-games/overcoming-handicap-17-year-old-diksha-dagar-overcomes-disability-to-purse-golf-5303483/. 
  3. "Diksha Dagar". World Amateur Golf Ranking. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  4. "Indian amateur golfer Diksha Dagar credits dad for her silver win at Deaflympics". Hindustan Times. 28 July 2017. https://www.hindustantimes.com/other-sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-her-silver-win-at-deaflympics/story-ZQUIqD3vOP6UPUVb4f7rfO.html. 
  5. Bhattacharya, Arka (12 August 2018). "Go to US college or turn pro: India's No. 1 amateur golfer Diksha Dagar ponders life beyond Asiad". https://scroll.in/field/890164/go-to-us-college-or-turn-pro-indias-number-one-amateur-diksha-dagar-ponders-life-beyond-asiad. 
  6. "India at Asian Games 2018: Full squad". India Today. 9 August 2018. https://www.indiatoday.in/sports/asian-games-2018/story/india-at-asian-games-2018-full-squad-of-india-1310326-2018-08-09. 
  7. "Dagar Diksha". Asian Games 2018 Jakarta Palembang. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  8. "महिला गोल्फर दीक्षा ने कहा- पिता को जाता है मेरी सफलता का श्रेय" (in Hindi). Zee News Hindi. 12 August 2018. http://zeenews.india.com/hindi/sports/indian-amateur-golfer-diksha-dagar-credits-dad-for-success/432133. 
  9. "Diksha Dagar takes the quiet fairway in quest of sporting dream". Hindustan Times. 9 December 2016. https://m.hindustantimes.com/other-sports/diksha-dagar-takes-the-quiet-fairway-in-quest-of-sporting-dream/story-DCHlWtVnj8ZchybhLrg1BJ.html. 

துத்தி சந்த் ஏற்கனவே உள்ளது. தூத்தி சந்த்

இந்திய தடகள வீராங்கனையான தூத்தி சந்த் (3 ,பிப்ரவரி ,1996) சர்வதேச அளவில் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக முதன்முதலில் தங்கப்பதக்கத்தை வென்றவர் ஆவார்.(1). மேலும் 100 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் தற்போதைய தேசிய சாம்பியன் ஆவார்.([1]2) தூத்தியின் உடலில் ஆண்கள் உடலில் அதிகமாக இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிக அளவில் இருந்ததாகக் கூறி, ஒரு கட்டத்தில் சர்வதேச தடகள வீரர்களுக்கான கூட்டமப்பு, இவர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க, 2016 ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள அவர் தகுதி பெற்றார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட பி.டி உஷாவிற்கு பிறகு, அதாவது 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் போட்டியில் கலந்து கொண்ட முதல் பெண் தூத்தி.

[3] 2018 ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த 100 மீட்டர் மற்றும் 200 மீட்டருக்கான ஆசிய விளையாட்டில், இளம் வயது வீராங்கனையாக, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். (1).2016ஆம் ஆண்டில் இவர் ஒடிஷா அரசாங்கத்தின் கீழுள்ள சுரங்க நிறுவனத்தின் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டார்). [4] 2019 ஆம் ஆண்டில், அவர் ஒருபாலுறவினர் என்பதை முதல் முறையாக வெளிப்படுத்தினார்.[5]   அதன் பிறகு விளையாட்டு உடைகளுக்கான பிரத்தியேக நிறுவனமான பூமா(puma) உடன் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். [6]


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி: 


இவர் ஒடிஷாவில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தின், சகா கோபால்பூர் என்ற கிராமத்தில், ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில், ஏழு பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தார். 2006ஆம் ஆண்டு, தனது குடும்ப ஏழ்மையின் காரணமாக, இவர் தனது சகோதரி சரஸ்வதியுடன் சேர்ந்து அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.(3).

தொழில்முறை வாழ்க்கை:


2012ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான, தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்ததில் மிகவும் புகழ் பெற்றார். . [7]

அதன் தொடர்ச்சியாக ஒடிஷாவின் சிறந்த தடகள வீராங்கனையான இவர், 2013ஆம் ஆண்டு புனேவில் நடந்த 200 மீட்டருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், மூத்த தடகள வீரர்களுக்கான தேசிய போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதிலும் வென்றார் (8). அதே ஆண்டில் இவர் அகில உலக இளம் வீரர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பில், போட்டியின் இறுதி வரை சென்ற முதல் தடகள வீராங்கனையானார். (10)

2014ஆம் ஆண்டு, இவருக்கு சிறந்த தொடக்கமாக அமைந்து, அந்த ஆண்டில் தைவானில் உள்ள தைப்பேயில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200மீட்டர் மற்றும் 4x400 ரிலே நிகழ்வுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஆனால், காமன்வெல்த் போட்டிகளுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட ஹார்மோன் பரிசோதனையில் இவர் தோல்வியடைந்ததால், சர்வதேச தடகள வீரர்களுக்கான கூட்டமப்பு இவர் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்தது. பரிசோதனையில் இவருக்கு டெஸ்டோஸ்டெரோன் சுரப்பிகள்  (ஆண்களுக்கான ஹார்மோன்ஸ்) அதிகம் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலைக்கு ஹைபராண்ட்ரோஜனிசம் என்று பெயர்.(5)(8).

அதனால் இவர் ஜூலை 2015ஆம் ஆண்டு வரை நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்து, அவ்வழக்கில் வெற்றி பெற்றதால், மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.(3).

அதன் பிறகு வலிமை வாய்ந்த வீராங்கனையாக முன்னேற்றம் கண்டு, 2016ஆம் ஆண்டில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய இன்டோர்  தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 60 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று புதிய சாதனையை படைத்தார். தொடர்ந்து கஜகஸ்தானில் நடந்த ஜி கொஸனோவ் நினைவிட சந்திப்பு நிகழ்வில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 11.24 விநாடிகளில் கடந்து  2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

ரியோவில் நடைபெற்ற போட்டியில் இறுதிவரை போராடி தோல்வி கண்டாலும், தளர்ச்சி அடையாது ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 100 மீட்டர் பிரிவில் இவர் வென்ற வெள்ளி, 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி.உஷாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஆசிய வெள்ளிப் பதக்கமாகும்.


2019ஆம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் 100 மீட்டருக்கான பந்தயத்தில் முதன்முதலில் தங்கப் பதக்கத்தை வென்ற பெருமையை பெற்றார் தூத்தி.  2019ஆம் ஆண்டு, 59ஆவது தேசிய ஓப்பன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில், 11.25 வினாடிகளில் 100 மீட்டர் கடந்ததை, இறுதிப்போட்டியில் 11.22 வினாடிகளில் கடந்து முறியடித்தார். (9).

எதிர்கொண்ட சவால்கள்:

இவர் இந்தியாவின், முதல் ஒருபாலின வீராங்கனை ஆவார். 2019ஆம் ஆண்டில் இவர் இதை உலகிற்கு அறிவித்தார். இதற்காக அவரின் குடும்பத்தார் தூத்தியை எதிர்த்தனர். தனது மூத்த சகோதரி தன்னை குடும்பத்தை விட்டு வெளியேற்றுவேன் என மிரட்டியதாகவும் தூத்தி கூறுகிறார்.(5)

செய்து கொண்ட ஒப்பந்தங்கள்:

ஆகஸ்டு, 2019ஆம் ஆண்டு விளையாட்டு உடைகளுக்கான பிரத்தியேகமான நிறுவனமான பூமா உடன்(puma) இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்.(6).


சான்றாதாரங்கள்

https://www.olympicchannel.com/en/athletes/detail/dutee-chand/ [1]

https://sportstar.thehindu.com/athletics/dutee-chand-breaks-national-record-100m-wins-gold-medal-national-open-athletics-championships-ranchi/article29659344.ece [2]

https://timesofindia.indiatimes.com/sports/rio-2016-olympics/india-in-olympics-2016/athletics/Sprinter-Dutee-Chand-set-to-realise-Olympic-dream/articleshow/53461278.cms [3]

https://odishatv.in/odisha-news/body-slider/odisha-govt-gives-appointment-to-sprinters-dutee-chand-srabani-nanda-143219 [4]

https://www.bbc.com/news/world-asia-india-48327918 [5]

https://www.businesstoday.in/latest/trends/puma-signs-two-year-deal-with-sprinter-dutee-chand/story/371367.html [6]

https://www.thehindu.com/sport/athletics/dutee-chand-breaks-100m-record/article3636513.ece [7]

https://www.olympicchannel.com/en/stories/features/detail/dutee-chand-running-india-tokyo-2020-olympics/ [8]

https://sportstar.thehindu.com/athletics/dutee-chand-breaks-national-record-100m-wins-gold-medal-national-open-athletics-championships-ranchi/article29659344.ece [9]

https://www.bbc.com/tamil/sport-55977675 (10)


தனிப்பட்ட விவரம்:


முழுப் பெயர்: தூத்தி சந்த் 

குடியுரிமை : இந்தியர்

பிறப்பு : 3 பிப்ரவரி, 1996.

பிறந்த இடம்: ஜஜ்பூர், ஒடிஷா, இந்தியா.

விளையாட்டு:  தடகளம்

நிகழ்வு: 100 மீட்டர், 200 மீட்டர், 4×100


பதக்கங்கள்:

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி


தங்கம்:  100 மீ, 2019 யூனிவர்சியேட், நேபோலி

தங்கம்:  100 மீ, ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ,தைய்பேய்

தங்கம்:   4x400மீ, ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் , தைய்பேய்

வெள்ளி:  100மீ, 2018 ஆசியப் போட்டிகள், ஜகார்தா. 

வெள்ளி:  200மீ, 2018 ஆசியப் போட்டிகள், ஜகார்தா.

வெள்ளி: 100மீ, 2016 தெற்கு ஆசியப் போட்டிகள், கவுஹாத்தி

வெண்கலம்:200 மீ, 2013 தெற்காசியப் போட்டிகள், புனே

வெண்கலம்: 100 மீ, 2017, தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், புவனேஸ்வர்.

வெண்கலம் :  4x400m மீ, 2017, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், புவனேஸ்வர்.

வெண்கலம் : 200 மீ, 2019, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தோஹா

வெண்கலம்: 60 மீ, ஆசிய இன்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தோஹா.

வெண்கலம்: 200 மீ, தெற்காசிய போட்டிகள், கவுஹாத்தி

  1. Rayan, Stan. "Dutee Chand breaks national record, wins gold at National Championships". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Poorani98/மணல்தொட்டி&oldid=3654119" இலிருந்து மீள்விக்கப்பட்டது