பயனர்:SathishKokila/sandbox

மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44-ஆவது பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SathishKokila/sandbox&oldid=3837721" இலிருந்து மீள்விக்கப்பட்டது