பயனர்:Shanmugamp7/WCI2016 report
அனைவருக்கும் வணக்கம், ஆகஸ்ட் 5-7 வரை சண்டிகரில் நடந்த இந்திய விக்கி மாநாட்டுக்கு சென்றிருந்தேன், அது குறித்த ஒரு சிறு அறிக்கை/அனுபவப் பகிர்வு :-
ஆகஸ்ட் 4 ஆம் காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பினோம், அன்று மதியம் இரண்டு மணியளவில் சண்டிகர் விமான நிலையத்தை சென்றடைந்தோம். அதன் பிறகு நிகழ்வு நடக்குமிடமான சண்டிகர் கல்லூரிகள் குழுவிற்கு (Chandigarh Group of Colleges) சென்றடைந்தோம். அங்கு கல்லூரி விடுதியில் ஏற்பட்ட சில எதிர்பாராத சிக்கல்களால் சிறிது அலைக்கழிப்பிற்குப் பிறகு ஒரு நல்ல விடுதியில் (Hotel) தங்க வைக்கப்பட்டோம், இறுதி நேரத்தில் நேர்ந்த நிர்வாகச் சிக்கலை களைய அயராது பாடுபட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நன்றிகள்.
தமிழ் விக்கியிலிருந்து பாலாஜி , பாலா , தகவலுழவன் , நந்தினி, நீச்சல்காரன், இரவி , தமிழ்ப்பரிதி , சீனிவாசன் , தமிழ்க்குரிசில் , பயனர்:கி.மூர்த்தி, ஹிபயத்துல்லா ஆகியோர் வந்திருந்தனர்.
இனி நிகழ்விற்கு வருவோம், 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா ஆரம்பித்தது. சரியான தகவல் பெறாததால் நாங்கள் சிறிது தாமதமாக செல்ல நேர்ந்தது. சிறப்பு விருந்தினர்கள் உரை மற்றும் சிறு கலை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா 12 மணியளவில் நிறைவுற்றது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அமர்வுகளும் பயிலரங்குகளும் தொடங்கின. முதலில் நிகழ்வு பற்றி சரியாக கவனியாமல் Various_Tech_Opportunities_with_Wikimedia என்ற நிகழ்விற்கு, அது கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கானது என்பதறியாமல் சென்றேன் :P. இருந்தாலும் அதன் பிறகு சந்தித்த சில கல்லூரி மாணவர்களுக்கு GSoc பற்றி கூற இந்நிகழ்வு உதவியாக இருந்தது. இரண்டாவதாக மீடியாவிக்கி மென்பொருளை கணினியில் நிறுவது மற்றும் அதற்குரிய நீட்சிகளை நிறுவது குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டேன், பிறகு நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் அணைநிலை விக்கியை அணுகுவது குறித்த காட்சியளிப்பிலும் கலந்து கொண்டடேன். இவ்விரண்டும் ஓரளவிற்கு பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற hackathon நிகழ்வில் என்னைப் போன்ற தொடக்க நிலை நிரலாளர்களுக்கான பணிகள் அவ்வளவாக இல்லாததால் என்னுடைய முதல் நாள் பங்கு பெறல் இத்துடன் முடிந்தது. இறுதியாக 6 மணிக்கு மேல் நடை பெற்ற கலை நிகழ்ச்சி நிகழ்வில் சண்டிகர் கல்லூரிகள் குழுவினை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி விக்கி மாநாட்டு பங்களிப்பாளர்களை மகிழ்ச்சிப் படுத்தினர். இரவு உணவிற்குப் பிறகு இனிதே விடுதிக்கு பயணித்தோம் :) .
இரண்டாவது நாள் காலை விக்கிமீடியா நிர்வாக இயக்குனர் கேத்தரில் மெகரின் சிறப்புரையுடன் தொடங்கியது. இவ்வுரையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்ப மேம்பாட்டு பயிற்சி குறித்த குறிப்பு இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மீடியாவிக்கி API மற்றும் நீச்சல்காரனின் கூகிள் தொழில்நுட்பம் மூலம் தானியக்கம் குறித்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். மதிய உணவு இடைவேளைக்கும் பிறகு நடைபெற்ற பொதுவகத்திற்கு ஏற்ற படங்ககளை எவ்வாறு நன்றாக எடுப்பது என்ற பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற A_picture_is_worth_a_thousand_words_but_vector_illustrations_are_even_better என்ற பயிலரங்கு இங்ஸ்கேப் மூலம் எவ்வாறு வெக்டர் படங்களை வரைவது என்பதை விளக்கியது. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறுதியாக இரவு நடைபெறவிருந்த நடன இரவு (DJ Night) நிகழ்வு சிலரின் நடத்தை விதி மீறல் தொடர்பாக ரத்து செய்யப்பட்டதால் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரிக்கு நானும் , ஏனைய சில விக்கியர்களும் சேர்ந்து சென்றிருந்தோம். பிறகு இரவு உணவை ஒரு பஞ்சாப் உணவகத்தில் முடித்து விட்டு விடுதிக்கு திரும்பினோம்.
மூன்றவாது நாள் காலை வேளை சீனிவாசனின் பைதான் நிரலில் மீடியாவிக்கி தானியங்கி எழுதுவது குறித்த பயிலரங்குடன் தொடங்கியது. தொடக்க நிலையில் இருந்து தொடங்கிய சீனிவாசனின் பைதான் பாயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய விக்கி மாநாடு குறித்த பின்னூட்டம் வழங்கும் அமர்வில் கலந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்து இறுதி விழாவுடன் இந்திய விக்கி மாநாடு 2016 இனிதே நிறைவுற்றது. மாலை வேளையில் சுக்னா ஏரிக்கு அனைவரும் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டோம், நாங்கள் ஏற்கனவே அதனை பார்த்து விட்டதால் அருகாமையில் அமைந்துள்ள பாறைப் பூங்காவிற்கும் , திறந்த கை நினைவுச் சின்னம், பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் , சட்டமன்றம் அமைந்துள்ள இடந்திற்கும் சென்று அவற்றை கண்டு களித்தோம். பிறகு சண்டிகர் வர்த்தக மையமான பகுதி 17க்கு சென்று இரவு உணைவை முடித்து விட்டு விடுதிக்கு திரும்பினோம். 8 ஆம் தேதி மதியம் சண்டிகரில் இருந்து கிளம்பி மும்பை வழியாக இரவு சென்னை வந்தடைந்தேன் :).
மொத்தத்தில் இந்நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது. இந்நிகழ்விற்கு செல்ல என்னுடைய முதன்மையான காரணம் ஏனைய விக்கிப்பீடியர்களை சந்தித்து அவர்களும் அளவளாவுவது, வந்திருந்த அனைவரையும் சந்திக்க இயலவில்லை எனினும் ஓரளவு பெரும்பாலனர்வகளை சந்திக்க முடிந்தது.
படக்காட்சியகம்
தொகு-
பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றம்
-
சட்டமன்றக் கட்டிடம்
-
திறந்த கை நினைவுச் சின்னம்
-
பாறைப் பூங்கா
-
பாறைப் பூங்கா
-
பாறைப் பூங்கா