பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு

A man with beard and long hair is holding a long gun and is standing in front of a very large tree.
1858-9 ஆண்டில், கிரிஸ்லி ஜயண்ட் மரத்தின் முன்பு நிற்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் மாரிப்போசா சோலையின் முதல் பாதுகாவலரான கேலன் கிளார்க்கின் படம்.

சீயரா மிவோக், மோனோ, பாயிட் மற்றும் பிற பூர்வீக அமெரிக்கர்கள் ஆகிய இன மக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவின் மத்திய சீயரா நெவேடா பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பிய அமெரிக்கர்கள் முதலில் அங்கு வந்த போது அது யோசெமிட்டி தேசியப் பூங்கா என மாறியது. அதாவது இப்பெயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஆவனெச்சீ (Ahwahnechee) எனப்படும் மிவோக் மொழி பேசும் பூர்வீக அமெரிக்கர்களின் இனம் என்பதைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் என அழைக்கப்படும் அதிக மக்கள் குடியேற்ற நிகழ்வால், இப்பகுதியில் பூர்வீகரல்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கும் வெள்ளை இனக் குடியேறிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக மாரிப்போசா போர் வெடித்தது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, குடியேறியான ஜேம்ஸ் சேவேஜ் (James Savage) சீஃப் டெனாயா தலைமையேற்று வழிநடத்திய ஆவனெச்சீ இனத்தினரை வெல்ல 1851 ஆம் ஆண்டில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாரிப்போசா படைப்பிரிவை அனுப்பினார். அந்தப் படைப்பிரிவினரின், குறிப்பாக டாக்டர். லஃபாயேட் பன்னலின் (Lafayette Bunnell) விவரிப்புகளினால் யோசெமிட்டி பள்ளத்தாக்கு ஒரு அழகிய அதிசயமான இடமாக பிரபலமானது.

1864 ஆம் ஆண்டில், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் ஜயண்ட் செக்கோயா (Giant Sequoia) மரங்கள் நிறைந்த மாரிப்போசா சோலை ஆகியவற்றின் உரிமை கூட்டிணைய (ஃபெடரல்) அரசாங்கத்திடமிருந்து மாகாண அரசாங்கத்திற்கு மாறியது. யோசெமிட்டி முன்னோடியான கேலன் கிளார்க் (Galen Clark) பூங்காவின் முதல் பாதுகாவலரானார். யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சூழல்கள் மக்களுக்கு உகந்ததாகவும் விரும்பத்தக்கதாகவும் மாற்றப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூங்காவிற்கு செல்லும் வசதி மேம்பட்டது (பூங்காவிற்கு வருவது எளிதானது). இயற்கையியலாளர் ஜான் மயுர் (John Muir) மற்றும் பிறர் இப்பகுதியின் அதீதப் பயன்பாட்டின் ஆபத்தை உணர்ந்தனர். அவர்களின் முயற்சிகள் 1890 ஆம் ஆண்டு யோசெமிட்டி தேசியப் பூங்காவை நிறுவ உதவின. யோசெமிட்டி பள்ளத்தாக்கும் மாரிப்போசா சோலையும் 1906 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவில் சேர்க்கப்பட்டன.

1891 முதல் 1914 ஆம் ஆண்டு வரை தேசியப் பூங்காவின் அதிகாரம் அமெரிக்க ஐக்கிய இராணுவத்திடம் இருந்தது, அதனையடுத்து பூங்காவின் அதிகாரம் படைத்துறை சாரா அமைப்பின் அதிகாரத்தின் கீழ் சிறிது காலம் இருந்தது. 1916 ஆம் ஆண்டில் பூங்காவின் நிர்வாகத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா சேவை கைக்கொண்டது. இக்காலக்கட்டத்தில் பூங்காவில் செய்யப்பட்ட மேம்பாடுள் மக்கள் வருகை அதிகரிப்பதற்கு உதவியது. மயுர் தலைமையிலான பாதுகாப்புவாதிகளும் (Preservationists) சீயரா சங்கமும் 1923 ஆம் ஆண்டு ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கு (Hetch Hetchy Valley) நீர்த்தேக்ககமாக மாறுவதைத் தடுப்பதில் தோல்வியடைந்தன. 1964 ஆம் ஆண்டில், பூங்காவின் 89 சதவீதம் அதி பாதுகாப்புக்குட்பட்ட அடர்வனப் பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பிற பகுதிகள் அடுத்த பூங்காவில் சேர்க்கப்பட்டன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த யோசெமிட்டி ஃபயர்ஃபால் என்னும் பாரம்பரிய சடங்கு நிகழ்வு 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டது. அந்நிகழ்வின் போது, இரவில் பனிப்பாறைப் புள்ளிக்கு (கிளேசியர் பாயிண்ட்) அருகில் செங்குத்துப் பாறையிலிருந்து செஞ்சூடான கட்டைகளைத் தள்ளிவிடுவர். அத்துடன் சேர்த்து பூங்காவின் பாதுகாப்புக்கு ஒவ்வாத பிற செயல்பாடுகளும் கைவிடப்பட்டன.

துவக்கக்கால வரலாறு

தொகு

பூர்வீக அமெரிக்கர்கள்

தொகு

8,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே யோசெமிட்டி பகுதிக்கு மக்கள் சென்றிருக்கக்கூடும்.[1] இப்போது அப்பகுதியில் என்னென்ன தாவரங்களும் விளையாட்டுகளும் உள்ளனவோ அவையே 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் குடியேறத் தொடங்கிய போதும் இருந்தன. சீயரா நெவேடாவின் மேற்குச் சரிவுகளில் அக்கான் பழங்களும் மான்களும் சால்மன் மீன்களும், கிழக்கு சீயரா பகுதியில் பைன்யான் பருப்புகளும் (pinyon nuts) எரிமலைக் கண்ணாடுகளும் (obsidian) இருந்தன.[2] பூர்வீக அமெரிக்க இனக்குழுக்கள் வர்த்தகத்திற்காகவும் திடீர்ச் சோதனைகளுக்காகவும் இந்த இரு பகுதிகளிடையே பயணித்துவந்தனர்.

 
தற்போது யோசெமிட்டி லாட்ஜ் இருக்கும் இடத்தில் 1872 ஆம் ஆண்டு நடைபெற்ற யோசெமிட்டி பயூட் இன மக்களின் திருவிழா [3]

தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்தப் பகுதியின் ஐரோப்பிய அமெரிக்கத் தொடர்புக்கு முந்தைய காலத்தை மூன்று கலாச்சார காலக்கட்டங்களாகப் பிரிக்கின்றனர். கிரேன் ஃபிளாட் காலக்கட்டம் கி.மு. 1000 முதல் 500 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது, இக்காலத்தில் அட்லட்டல் ஆயுதத்தைப் பயன்படுத்தி வேட்டையாடியதும் அரவைக்கற்கள் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கவையாகும்.[4] இக்காலக்கட்டத்தில் வேட்டைக்கான ஆயுதம் கூர்ப்பாறை ஆயுதங்களாக மாறிய முன்னேற்றம் ஏற்பட்டது, மேலும் வில் அம்பு பயன்பாடும் தொடங்கியது.[4] மாரிப்போசா காலக்கட்டமானது 1200 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய அமெரிக்கர்களுடனான தொடர்பு ஏற்பட்ட காலம் வரை நீடிக்கிறது.[4]

மாரிப்போசா காலக்கட்டத்தில் பழங்குடியினருக்கிடையேயான வர்த்தகம் மிகவும் பரவலானது, மேலும் உணவுப்பழக்கமும் தொடர்ந்து மேம்பட்டது. மிவோக், மோனோக்கள் மற்றும் ஷௌஷனீயன் பேசும் பழங்குடியினர் ஆகியோர் வர்த்தகம் செய்வதற்காக இப்பகுதிக்குச் சென்றனர். ஒரு முக்கியமான பாதை மோனோ பாஸ் வழியாகவும் பிளடி கேன்யான் (Bloody Canyon) வழியாகவும் கிழக்கு கலிஃபோர்னியாவிலுள்ள மோனோ ஏரிக்குச் சென்றது.[5]

மாரிப்போசா காலக்கட்டத்திலும் வரலாற்றுக் காலக்கட்டங்களிலும் யோசெமிட்டி பகுதியில் வாழ்ந்துவந்தவர்கள் சீயரா மிவோக்குகளே ஆவர்.[6] மத்திய சீயரா மிவோக்குகள் டுவால்லோமி மற்றும் ஸ்டானிஸ்லாஸ் நதிகளின் வடிகால் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். தெற்கு சீயரா மிவோக்குகள் மெர்சிட் மற்றும் கௌச்சில்லா நதிகளின் வடிகால் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர்.[6]

மிவோக் மொழி பேசும் மக்கள் குழுவினர் அவர்களுக்கு பருப்புகளையும், பெர்ரி பழங்களையும் வேட்டை உணவுகளையும் வழங்கும் இந்தப் பள்ளத்தாக்கை ஆவனீ என அழைத்தனர். இச்சொல்லுக்கு "வாய் பிளந்த இடம்" என அழைத்தனர். இவர்கள் வரலாற்றுக் காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.[7] அவர்கள் தம்மை ஆ-வ-னெ-ச்சீ என அழைத்துக்கொண்டனர். அதற்கு "ஆவனியில் வாழ்பவர்கள்" எனப் பொருளாகும்.[7] ஆவனெச்சீக்கள் சுமார் 1800 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கொள்ளை நோய் தாக்கி பெருமளவில் இறந்தனர். அப்போது அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஆவனெச்சீயின் தலைவரின் மகனான தெனாயாவின் தலைமையில் 200 பேர் மீண்டும் திரும்பி வந்தனர்.[7]

கலிஃபோர்னிய கடற்கரையிலிருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தின் முற்பகுதியில் சீயரா நெவேடா பகுதிக்குச் சென்றனர். அவர்களுடன் அவர்களின் ஸ்பானிய உணவு, தொழில்நுட்பம் மற்றும் ஆடை கலாச்சாரம் ஆகியவை பற்றிய அறிவும் நகர்ந்தது. அப்பகுதியிலுள்ள பிற பழங்குடியினருடன் தமது படைகளைச் சேர்த்து அவர்கள் கடற்கரையிலிருந்த நில வழங்கல் பண்ணைகளைக் கைப்பற்றி குதிரைக்கூட்டங்களை சீயராவிற்கு ஓட்டிச்சென்றனர். அங்கு குதிரை இறைச்சி புதிய முக்கிய உணவாக மாறியது. ஷௌஷனீயன் மொழி பேசும் மொனாச்சீ மக்கள் கடந்த 300–500 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு பாலைவனங்களிலிருந்து தெற்கு சீயராவுக்கு இடம்பெயர்ந்தனர்.[8]

ஐரோப்பிய அமெரிக்கர்கள் பயணம்

தொகு

கலிஃபோர்னியா கடற்கரையில் ஸ்பானிய இயக்கங்கள், பிவெப்லோக்கள் (நகரங்கள்), பிரிசிடியௌன் கள் (கோட்டைகள்) மற்றும் பண்ணைகள் இருப்பினும் ஸ்பானிய தேடலறிஞர்கள் எவரும் சீயரா நெவேடாவிற்குச் செல்லவில்லை.[4] மென்மயிர் வேட்டையாளர் ஜெடேடியா ஸ்மித் (Jedediah Smith) என்பவரின் தலைமையிலான குழுவே முதலில் இந்த மலைகளுக்குச் சென்ற ஐரோப்பிய அமெரிக்கர்களாவர். அவர்கள் 1827 ஆம் ஆண்டு மே மாதத்தில் எப்பெட்ஸ் பாஸ் (Ebbetts Pass) என்னும் பகுதியில் யோசெமிட்டி பகுதியைக் கடந்து சென்றனர்.[4]

 
ஜோசப் வாக்கர், தோராயமாக 1860 ஆம் ஆண்டு. அநேகமாக இவரே யோசெமிட்டி பள்ளத்தாக்கைப் பார்த்த முதல் ஐரோப்பிய அமெரிக்கராக இருக்கக்கூடும்.

மலைவாசியான ஜோசப் ரெட்டெஃபோர்டு வாக்கர் (Joseph Reddeford Walker) என்பவரின் தலைமையிலான ஒரு வேட்டையாடிகளின் குழு 1833 ஆம் ஆண்டின் வசந்தகாலப் பருவத்தில் யோசெமிட்டி பகுதியைக் கண்டிருக்கக்கூடும்.[9] வாக்கர் தனது தரப்பினரை சீயரா நெவேடா பகுதி வழியாக அழைத்துச் சென்ற போது ஒரு பள்ளத்தாக்கின் ஓரத்தைக் கண்டார் ஆனால் அவர் அதில் நுழையவில்லை. அந்தக் குழுவின் ஓர் உறுப்பினரான செனாஸ் லியானர்டு (Zenas Leonard) அவரது இதழில், பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்து வந்த ஓடைகள் "கீழே மழையில் அவை மறைந்துபோகும் வரையிலும், உயரமான ஒரு செங்குத்துப் பாறையிலிருந்து அதே போன்ற மற்றொரு செங்குத்துப் பாறை மீது தொடர்ந்து விழுந்தது" என எழுதியுள்ளார். இந்த உயரமான செங்குத்துப் பாறைகளில் சில எங்களுக்கு ஒரு மைலுக்கும் அதிக உயரமானவையாகத் தோன்றின."[10] அநேகமாக வாக்கர் தரப்பினர் டுவால்லோமி அல்லது ஜயண்ட் செக்கோயாவின் மெர்சிடு சோலைகள் வழியே சென்றிருக்கக்கூடும். அவர்களே ஜயண்ட் மரங்களைப் பார்த்த முதல் பூர்வீகர்களல்லாத மக்களாயினர்,[10] ஆனால் வாக்கர் தரப்பினர் தொடர்பான இதழ்கள் பிலடெல்பியாவில் ஏற்பட்ட அச்சகத் தீ விபத்தில் அழிந்தன.[11]

பூங்கா அமைந்துள்ள சீயரா நெவேடா பகுதி ஐரோப்பிய அமெரிக்க குடியேறிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் பயணிகளுக்கும் ஒரு பௌதிகத் தடையாக இருந்ததாக நெடுங்காலமாகக் கருதப்பட்டது. மலைத்தொடரின் மேற்கு மலைப்பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1848 ஆம் ஆண்டில் இந்தச் சூழ்நிலை மாறியது.[11] கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் என அழைக்கப்படும் அதிக மக்கள் குடியேற்ற நிகழ்வின் விளைவாக, இப்பகுதியிலான பயணமும் வர்த்தகமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. உள்நாட்டு பூர்வீக அமெரிக்கர்கள் சார்ந்திருந்த வளங்கள் அதீதமாகப் பயன்படுத்தப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது, மேலும் புதிதாக வந்தவர்களால் தோன்றிய நோய் பூர்வீக மக்களிடையே விரைவாகப் பரவியது. பூர்வீகக் கலாச்சாரத்தினை முற்றிலுமாக அழிப்பதே மெக்சிக்கோவிலிருந்து 1848 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவைக் கைப்பற்றிய அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தின் கொள்கையாகியது.[12]

முதன் முதலில் 1849 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்றே, யோசெமிட்டி பள்ளத்தாக்கை ஒரு பூர்வீகரல்லாத நபர் கண்டது உறுதிப்படுத்தப்பட்டது. அது வில்லியம் .பி அப்ராம்ஸ் (William P. Abrams) மற்றும் அவரது உடன் சென்றவரும் ஆவர்.[13] அப்ராம்ஸ் சில நிலப்பகுதி அடையாளங்களை துல்லியமாக விவரித்தார், ஆனால் அவரோ அல்லது அவருடன் சென்ற நபரோ பள்ளத்தாக்கில் நுழைந்தனரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. 1850 ஆம் ஆண்டு ஜோசப் (Joseph), வில்லியம் (William) அல்லது நாதன் ஸ்கிரீச் (Nathan Screech) ஆகிய மூன்று சகோதரர்களில் ஒருவரே ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கில் (Hetch Hetchy Valley) நுழைந்த முதல் பூர்வீகரல்லாத நபரானார்.[14] ஜோசப் ஸ்கிரீச் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்து அங்கே வசித்துவந்த பூர்வீக அமெரிக்கர்களிடம் பேசும்போது, புல் மூடிய விதை உணவின் பெயர் என்ன என்று கேட்டபோது அவர்கள் "ஹெட்ச் ஹெட்ச்சி" என்றனர்.[14]

அலெக்சீ டபள்யூ. வான் ஸ்கிமித் (Allexey W. Von Schmidt) என்பவரின் ஆய்வுக் குழுவே முதன்முதலாக, யோசெமிட்டி பகுதியின் வளர்ச்சியடையாத பகுதிக்கு பயணம் செய்வதையே நோக்கமாகக் கொண்டதும் முறையானதுமான பயணத்தை 1855 ஆம் ஆண்டு நிகழ்த்தினர்.[15] ஜியார்ஜ் எம். வீலரின் (George M Wheeler) 100 ஆம் தீர்க்க ரேகையின் மேற்கு அளவீடுகள் (Surveys West of the 100th Meridian) திட்டத்தின் கீழ் லெப்ட்டினெண்ட் மோண்ட்டோகோமரீ மேக்கம் (Lieutenant Montgomery Macomb) என்பவர் இடவிளக்கியல் அளவீட்டு செயல்பாடுகளை நிகழ்த்தினார். அவை 1870களின் பிற்பகுதியிலும் 1880களின் தொடக்கத்திலும் முடிவடைந்தன.[16]

மாரிப்போசா போரும் கொடையும்

தொகு
 
மாரிப்போசா படைப்பிரிவு முதலில் இன்ஸ்பிரேஷன் பாயிண்ட்டுக்கு அருகில் யோசெமிட்டி பள்ளத்தாக்கைப் பார்த்தது.2003 ஆம் ஆண்டின் புகைப்படம்.

மெர்சிட் நதி, யோசெமிட்டி பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியின் 10 மைல்கள் (16 km), [12] ஆகியவற்றில் அமைந்திருந்த ஜேம்ஸ் சேவேஜின் (James Savage) வர்த்தக முகாம் 1850 ஆம் ஆண்டு டிசம்பரில் பூர்வீக அமெரிக்கர்களால் தாக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மலைப்பகுதிகளுக்கு துரத்தியடிக்கப்பட்டனர்.[12] கலிஃபோர்னிய ஆளுநருக்கு இந்த தாக்குதலையும் பிற தாக்குதல்களையும் நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு ஆணையினால் 1851 ஆம் ஆண்டு மாரிப்போசா படைப்பிரிவும் மாரிப்போசா போரும் உருவாயின.[17]

சேவேஜ் தலைமையிலான படைப்பிரிவு 1851 ஆம் ஆண்டு சீஃப் டெனாயா தலைமையிலான 200 ஆவனெச்சீ இனத்தவருக்கு எதிராக யோசெமிட்டி பள்ளத்தாக்கில் நுழைந்தது.[18] 1851 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று, 50 முதல் 60 வரையிலான நபர்களைக் கொண்ட பிரிவு, இன்று ஓல்ட் இன்ஸ்பிரேஷன் பாயிண்ட் என அழைக்கப்படும் பகுதியை அடைந்தது. இவ்விடத்திலிருந்துதான் யோசெமிட்டி பள்ளத்தாக்கின் பிரதான அம்சங்களைக் காண முடியும்.[9] முடிவாக சீஃப் டெனாயாவும் அவரது குழுவினரும் கைப்பற்றப்பட்டனர், அவர்களது கிராமம் தீக்கிரையாக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இறக்கும் தருவாயில் இருந்த தாந்திரீகவாதி டெனாயாவிடம் கூறியிருந்த தீர்க்க தரிசனம் இவ்வாறு பலித்தது.[19] ஆவனெச்சீ மக்கள் அவர்களைக் கைப்பற்றிய தலைவரான கேப்டன் ஜான் பௌலிங் (John Bowling) என்பவரின் கீழ் ஃப்ரெனோ ரிவர் ரிசர்வேஷன் (Fresno River Reservation) பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் படைப்பிரிவு 1851 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று கலைக்கப்பட்டது.[20] அந்தப் பகுதியில் வாழ்க்கை நிம்மதியாக இருக்கவில்லை, ஆவனெச்சீ மக்கள் தங்கள் பள்ளத்தாக்கை நினைத்து ஏங்கினர். அப்பகுதி அதிகாரிகள் டெனாயா மற்றும் அவரது குழுவில் சில நபர்களை அவர்களது ஒப்பந்தத்தின் பேரில் மீண்டும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொண்டு அனுமதித்தனர்.[20]

 
டாக்டர். லஃபாயேட் பன்னல் (Lafayette Bunnell) யோசெமிட்டி பள்ளத்தாக்கு உள்ளிட்ட, பூங்காவ்ன் பல பகுதிகளுக்கு பெயரிட்டார்.1880 ஆம் ஆண்டில் வெளிவந்த டிஸ்கவரி ஆஃப் யோசெமிட்டி அண்ட் த இண்டியன் வார் ஆஃப் 1851 விச் லெட் டு தட் ஈவண்ட் (Discovery of the Yosemite, and the Indian War of 1851, which led to that event) என்ற அவரது புத்தகத்திலுள்ள புகைப்படங்கள்.

1852 ஆம் ஆண்டு மே மாதத்தில் எட்டு சுரங்கப் பணியாளர்களின் குழு ஒன்று யோசெமிட்டி பள்ளத்தாக்கில் நுழைந்தது, மேலும் டெனாயாவின் வீரர்கள் அவர்களைத் தாக்கியதில் இரு சுரங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[20] லெப்டினெண்ட் டிரெட்வெல் மூர் (Tredwell Moore) ஆணையின் பேரில் வழக்கமான இராணுவத் துருப்புகள், வெள்ளையர் ஆடைகளில் இருந்த ஆறு ஆவனெச்சீ நபர்களைச் சுட்டுக் கொன்று பழிதீர்த்தனர்.[20]

டெனாயாவின் குழுவினர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி, தங்கள் தாய்வழி பழங்குடியினரான மோனோ இனத்தவரிடம் தஞ்சம் புகுந்தனர். 1853 ஆம் ஆண்டு மத்தியப் பகுதியில், ஆவனெச்சீ மக்கள் பள்ளத்தாக்கிற்குத் திரும்பினர்,[19] ஆனால் அவர்கள் மோனோ மக்களிள் பூர்வீகரல்லாத பண்ணை ஆட்களிடமிருந்து கைப்பற்றி வைத்திருந்த குதிரைகளைத் திருடி, தங்கள் முந்தைய மோனோ இன மக்களின் விருந்தோம்பலுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். அதற்கு பதிலாக, மோனோ மக்கள் டெனாயா உள்ளிட்ட மீதமிருந்த பல ஆவனெச்சீ மக்களைக் கண்டுபிடித்து கொன்றனர்; டெனாயா ஏரிக்கு இறந்த தலைவனின் நினைவாகப் பெயரிடப்பட்டது. மோதல்கள் தணிந்து 1850களின் மத்தியப் பகுதியில் உள்நாட்டு ஐரோப்பிய அமெரிக்க வாசிகள் பூர்வீக அமெரிக்கர்களுக்கு நண்பர்களாகி அவர்கள் இன்றும் யோசெமிட்டி பகுதியில் வாழ்ந்துவருகின்றனர்.

படைப்பிரிவின் உறுப்பினர்கள் பிரிடால்வெயில் புல்வெளியில் முகாமிட்டிருந்த போது, பள்ளத்தாக்கிற்கு பெயர்களை முன்மொழிந்தனர். சேவேஜின் பிரிவில் இணைந்திருந்த படைப்பிரிவு மருத்துவரான டாக்டர். லஃபயாட் பன்னெல் (Lafayette Bunnell), "யோ-செம்-இ-டி" என்ற பெயரை முன்மொழிந்தார். யோசெமிட்டி பள்ளத்தாக்கைப் பார்த்து பயந்த அதைச் சுற்றியுள்ள சீயரா மிவோக் பழங்குடியினர் அப்பள்ளத்தாக்கை அவ்வாறே அழைத்தனர்.[21] சில வட்டார மொழிகள் பேசத் தெரிந்த சேவேஜ் இச்சொல்லை"முழுமையாக வளர்ந்த கிரிஸ்லி கரடி" என மொழிபெயர்த்தார்.[21] இந்தச் சொல்லானது, "கிரிஸ்லி கரடி" எனப் பொருள்படும் இதே போன்ற சொல்லான uzumati அல்லது uhumati ஆகிய சொற்களிலிருந்து வந்திருக்கக்கூடும் அல்லது அவற்றுடன் குழப்பிக்கொள்ளக்கூடும். இது "அவர்கள் கொலைகாரர்கள்" எனப் பொருள்படும் Yohhe'meti என்ற தெற்கு சீயரா மிவோக் சொல்லாகும்.[22][23] அதே பயணத்தில் பன்னெல் பல பிற இடவியல் அம்சங்களுக்கும் பெயரிட்டார்.

அந்தப் பயணத்தைப் பற்றி பன்னெல் ஒரு கட்டுரை எழுதினார், ஆனால் சான் ஃபிரான்சிஸ்கோ செய்தித்தாள் ஆசிரியர் ஒருவர் பள்ளத்தாக்கின் சுவரின் பன்னெல் மதிப்பீடு செய்திருந்த உயரத்தை 1,500- அடிகளிலிருந்து (460 மீ) என பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்ததால் அந்தக் கட்டுரையை அழித்துவிட்டார், உண்மையில் அந்தச் சுவர்கள் பன்னெல் கருதிய உயரத்தை விட இரு மடங்கு உயரம் கொண்டவை.[19] யோசெமிட்டி பள்ளத்தாக்கைப் பற்றி முதலில் வெளியிடப்பட்ட விவரணை லெப்டினெண்ட். டிரெட்வெல் மூர் எழுதியதாகும். அவர் மாரிப்போசா குரானிக்கில் (Mariposa Chronicle) [9] இதழின் 1854 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்றைய வெளியீட்டுக்காக எழுதியிருந்தார், அப்போதே Yosemite என்ற நவீன எழுத்துக்கூட்டு உருவானது. பன்னெல் தனது த டிஸ்கவரி ஆஃப் த யோசெமிட்டி (The Discovery of the Yosemite) என்ற புத்தகத்தில் பள்ளத்தாக்கின் பிரமிப்பூட்டும் அம்சங்களைப் பற்றி விவரித்தார். அப்புத்தகம் 1892 ஆம் ஆண்டு வெளியானது.[24]

கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் முதல் சுற்றுலாப் பயணிகள்

தொகு

1855 ஆம் ஆண்டு, சான்ஃபிரான்சிஸ்கோ எழுத்தாளர் ஜேம்ஸ் மேசன் ஹட்ச்சிங்ஸ் (James Mason Hutchings) மற்றும் ஓவியர் தாமஸ் ஐர்ஸ் (Thomas Ayres) உள்ளிட்ட நாற்பத்தெட்டு இந்தியரல்லாத நபர்கள் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்குச் சென்றனர்.[25]

 
யோசெமிட்டி நீர்வீழ்ச்சி - தாமஸ் ஐரஸ் (Thomas Ayres). காகிதத்தில் மரக்கரி, வெள்ளை சுண்ணக்கட்டி (சாக்) மற்றும் பென்சில் கொண்டு வரைந்தடுஹ் - 1855.

ஹட்ச்சிங்ஸ் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார், அது மாரிப்போசா கெசட் இதழின் 1855 ஆம் ஆண்டு ஜூலை 12 வெளியீட்டில் பதிப்பிக்கப்பட்டது, அய்ர்சின் யோசெமிட்டி அருவியின் ஓவியம் 1855 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியானது; அந்த ஓவியங்களில் நான்கு ஓவியங்கள் 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் தலையங்கத்திலும் ஹட்ச்சிங்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் கலிஃபோர்னியா மேகசினின் தொடக்க வெளியீட்டிலும் வெளியாயின.[26] ஐர்ஸ் மீண்டும் 1856 ஆம் ஆண்டு அப்பகுதிக்குச் சென்று உயர் நிலப் பகுதியில் இருந்த டுவால்லோமி புல்வெளியைப் பார்வையிட்டார்.[18] மிக விவரமாக அவர் படைத்த பிரம்மாண்டமான கலைப்படைப்புகளும் எழுத்து விவரணைகளும் தேசிய அளவில் விநியோகிக்கப்பட்டன. அவரது ஓவியங்களின் கலைக் கண்காட்சி நியூ யார்க் நகரத்தில் நடத்தப்பட்டது. கேரலட்டான் வாட்க்கின்ஸ் 17 கீழ் 22 அங் (43 கீழ் 56 cm) யோசெமிட்டி பற்றிய தனது புகைப்படங்களை 1867 ஆம் ஆண்டு பாரிஸ் சர்வதேச கண்காட்சியில் பார்வைக்கு வைத்தார்.[27]

1859 ஆம் ஆண்டு ஹட்ச்சிங்ஸ் புகைப்படக் கலைஞரான சார்லஸ் லியாண்டர் வீட் (Charles Leander Weed) என்பவரை தன்னுடன் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பள்ளத்தாக்கின் அம்சங்களை முதலில் வீட் புகைப்படமெடுத்தார், அவை சான்ஃபிரான்சிஸ்கோவில் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன.[18] ஹட்ச்சிங்ஸ் தனது இதழில் "த கிரேட் யோசெமிட்டி வேல்லி" (The Great Yo-semite Valley) என்னும் படைப்பை 1859 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான்கு பகுதிகளாக வெளியிட்டார். அவர் அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை சீன்ஸ் ஆஃப் வொண்டர் அண்ட் கியூரியாசிட்டி இன் கலிஃபோர்னியா (Scenes of Wonder and Curiosity in California) என்னும் புத்தகத்தில் மீண்டும் வெளியிட்டார். அதுவே 1870களில் அச்சு வடிவத்தில் இருந்தது.[26][28]

புகைப்படக் கலைஞர் ஆன்சல் ஆடம்ஸ் (Ansel Adams) 1916 ஆம் ஆண்டு முதல் முறையாக யோசெமிட்டி பகுதிக்குச் சென்றார். அவர் எடுத்த பள்ளத்தாக்கின் புகைப்படங்களால் 1920களிலும் 1930களிலும் அவர் பிரபலமானார்.[7] ஆடம்ஸ் தான் எடுத்த யோசெமிட்டி புகைப்படங்களின் அசல்களை யோசெமிட்டி பூங்கா சங்கத்திற்கு எழுதிவைத்துச் சென்றார். இன்றும் பூங்காவிற்கு வருபவர்கள் அவரது அசல் நெகட்டிவ்களிலிருந்து அசல் புகைப்பட அச்சுகளை வாங்கிக்கொள்ளலாம். இன்று அவரது புகைப்படங்கள் விற்கப்படும் ஒளிப்பட நிலையம் (ஸ்டுடியோ) 1902 ஆம் ஆண்டு ஓவியர் ஹேரி கேசி பெஸ்ட் (Harry Cassie Best) என்பவரால் நிறுவப்பட்டதாகும்.[29]

 
யோசெமிட்டி பள்ளத்தாக்கின் புகைப்படம் - ஏ. சி. பில்ஸ்பர்ரி (A. C. Pillsbury) தோராயமாக 1898.

மில்ட்டன் (Milton) மற்றும் ஹௌஸ்ட்டன் மேன் (Houston Mann) ஆகியோர் 1856 ஆம் ஆண்டு மெர்சிட் நதியின் தெற்குக் கிளைக்கு அருகில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்குச் செல்லும் சுங்கச் சாலை ஒன்றைத் திறந்தனர்.[26] மாரிப்போசா மாவட்டம் அந்தச் சாலையை வாங்கும் வரை, அவர்கள் அந்த சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் ஒரு நபருக்கு, அப்போதைய கணிசமான தொகையான இரண்டு டாலர் என்னும் கட்டணத்தை வசூலித்தனர். மாரிப்போசா மாவட்டம் அந்தச் சாலையை வாங்கிய பின்னர் அது கட்டணமற்ற சாலையானது.

1856 ஆம் ஆண்டு குடியேறியான கேலன் கிளார்க் (Galen Clark) வெவேனாவிலிருந்த ஜயண்ட் செக்கோயா (Giant Sequoia) நிறைந்த மாரிப்போசா சோலையைக் கண்டுபிடித்தார். வெவேனா என்பது இப்போது பூங்காவின் தென்மேற்குப் பகுதி உள்ள அழகிய பூர்வீக இடமாகும்.[26] 1857 ஆம் ஆண்டு யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்குச் செல்லும் போக்குவரத்துக்காக கிளார்க் வெவேனா பகுதியில் உள்ள மெர்சிட் நதியின் தென்மேற்கு கிளைக்கு மேலே செல்லும் ஒரு பாலத்தைக் கட்டி முடித்தார். அது பள்ளத்தாக்கிற்குச் செல்ல மேன் சகோதரர்கள் கட்டிய சாலையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இளைப்பாறும் பயன்பட்டது.[30]

அதற்கடுத்து விரைவில் அவ்விடத்தில் லோயர் ஓட்டல் என அழைக்கப்படும் எளிய விடுதிகள் கட்டப்பட்டன. பிறகு அப்பர் ஓட்டல் 1859 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, அது பின்னர் ஹட்ச்சிங்ஸ் ஹௌஸ் எனப் பெயரிடப்பட்டு கடைசியில் சீடர் காட்டேஜ் என அழைக்கப்பட்டது.[31] அருகிலுள்ள பெரிய மரங்களையுடைய சோலைகளுக்குச் செல்பவர்களுக்கும் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு செல்பவர்களுக்கும் வசதியாக 1879 ஆம் ஆண்டு வெவேனா ஹோட்டல் என்னும் சற்று பெரிய உணவு விடுதி கட்டப்பட்டது.[32] ஆரோன் ஹாரிஸ் (Aaron Harris) யோசெமிட்டியில் முதல் முகாமிட வணிகத்தை 1876 ஆம் ஆண்டு திறந்தார்.[33]

மாகாண வழங்கல்

தொகு

மாகாண வழங்கலை உருவாக்கல்

தொகு
 
கட்டடக் கலைஞர் ஃப்ரெட்ரிக் லா ஆம்ஸ்டட் யோசெமிட்டி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். புகைப்படம், தோராயமாக 1860.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலத்தில் யோசெமிட்டிக்கு மக்கள் வருகையும் அதன் மீதான ஆர்வமும் அதிகமாகியது. யுனிட்டேரிய அமைச்சர் தாமஸ் ஸ்டார் கிங் (Thomas Starr King) இந்தப் பள்ளத்தாக்கிற்கு 1860 ஆம் ஆண்டு சென்று குடியிறுப்புகளும் வணிக ரீதியான நடவடிக்கைகளும் அப்பகுதிக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கண்டார்.[31] கிங் எழுதிய ஆறு பயணக் கடிதங்கள் போஸ்ட்டன் ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட் டில் (Boston Evening Transcript) 1860 ஆம் ஆண்டிலும் 1861 ஆம் ஆண்டிலும் வெளியானது. யோசெமிட்டி பகுதியில் பொதுப் பூங்காவை அமைக்கக் கோரிய முதல் நபர் இவரே என தேசிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது.[34] ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) மற்றும் ஜான் கிரீன்லீஃப் விட்டர் (John Greenleaf Whittier) ஆகியோர் கிங் கடிதங்களைப் படித்து அவற்றைப் பற்றியும் அவ்விடத்தின் கட்டுமானக் கலைஞர் ஃபெட்ரிக் லா ஆம்ஸ்டெட் (Frederick Law Olmsted) பற்றியும் கருத்துகளை வழங்கினர், இவை 1863 ஆம் ஆண்டு யொசெமிட்டி பகுதியைப் பார்வையிட எச்சரிக்கையாக அமைந்தன.[34][31]

கிங் மற்றும் ஆம்ஸ்டெட் ஆகியோர் மற்றும் கார்லெட்டான் வாட்கின்சின் (Carleton Watkins) புகைப்படங்கள் மற்றும் கலிஃபோர்னியாவின் நிலவியல் கணக்கெடுப்பு அமைப்பு (Geological Survey of California) 1863 ஆம் ஆண்டு வழங்கிய நிலவியல் தரவுகள் ஆகியவற்றின் அழுத்தத்தால் சட்டமியற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. கலிஃபொர்னியாவின் செனட் உறுப்பினர் ஜான் கான்னஸ் (John Conness) 1864 ஆம் ஆண்டு அமெரிக்க ஒன்றிய செனட் அவையில் பூங்காவிற்கான ஒரு சட்ட ஆணையைக் கொண்டுவந்தார். அதன்படி யோசெமிட்டி பள்ளத்தாக்கும் பெரும் மரங்கள் நிறைந்த மாரிப்போசா சோலையும் கலிஃபோர்னியாவுக்கு வழங்கப்படும்.[35]

அந்த சட்ட ஆணை எளிதாக அமெரிக்க ஒன்றிய சட்ட அவையான காங்கிரசின் இரு அவைகளிலும் தேர்ந்து 1864 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி அதிபர் ஆபிரகாம் லிங்கனால் (Abraham Lincoln) கையெழுத்திடப்பட்டது.[31] யோசெமிட்டி வழங்கல் என அழைக்கப்பட்ட அந்த சலுகை கலிஃபோர்னியாவுக்கு வழங்கப்பட்டு அது "பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் பொழுதுபோக்கிடமாகவும் கேளிக்கைக்கான இடமாகவும்" இருக்கும் என விதிக்கப்பட்டது.[36] 1864 ஆம் ஆண்டு பிரடெரிக் லா ஆம்ஸ்டெட் தலைமையிலான ஓர் ஆணையர் குழு உருவாக்கப்பட்டது. அது அந்தச் சலுகையை நிருவகிக்க ஏற்படுத்தப்பட்டது, ஆனால் 1866 ஆம் ஆண்டு வரை அது நீடிக்கவில்லை.[31]

மாகாண வழங்கலை நிருவகித்தல்

தொகு

அந்த ஆணையர் குழு கேலன் கிளார்க்கை (Galen Clark) அந்தச் சலுகைத் திட்டத்திற்கு முதல் காப்பாளராக நியமித்தது ஆனால் கிளார்க்குக்கோ ஆணையத்திற்கோ குடியேற்றங்களைக் காலி செய்ய அதிகாரம் இருக்கவில்லை. கலிஃபோர்னிய நிலவியல் கணக்கெடுப்பு அமைப்பின் முதல் செயலர் ஜோசியா ஒயிட்னி (Josiah Whitney), அக்காலத்தில் ஒவ்வொரு பாலத்திலும் பாதையிலும் ஊர் தடத்திலும் (டிரெயில்) பார்வையிடத்திலும் வரி வசூலிக்கப்படும் சுற்றுலா வித்தையாக இருந்த நயாகரா அருவிப் பகுதியைப் போலவே யோசெமிட்டி பள்ளத்தாக்கு ஆகிவிடுமென்று வருத்தமுற்றார்.[37]

 
பிரபல நிலவியலாளர் ஜோசியா ஒயிட்னி, 1863. யோசெமிட்டி நயாகரா நீர்வீழ்ச்சியைப் போலவே ஆகிவிடும் என அவர் அஞ்சினார்.

ஹட்ச்சிங்ஸ் மற்றும் குடியேற்றவாசிகளின் ஒரு சிறு குழுவினர் ஆகியோர் பள்ளத்தாக்கு நிலத்தின் 160 ஏக்கர்கள் (65 ha) இன் மீதான சட்டப் பூர்வ வழங்கல் சலுகையைப் பெற முயற்சித்தனர்.[38] ஹட்ச்சிங்ஸ் மற்றும் பிற மூன்று பேரின் நிலங்கள் செல்லுபடியாகாதவை என அறிவிக்கப்பட்டு குடியேற்றவாசிகளுக்கு ஈட்டுத் தொகையாக $60,000 வழங்க மாகாண சட்ட அவை முடிவெடுத்த 1874 ஆம் ஆண்டு வரை இந்தப் பிரச்சினை தீரவில்லை. அந்தத் தொகையில் ஹட்ச்சிங்ஸுக்கு $20,000 கிடைத்தது.[39]

யோசெமிட்டி பள்ளத்தாக்கிலிருந்த நிலைகளும் பூங்காவிற்குச் செல்லும் வசதிகளும் தொடர்ந்து மேம்பட்டன. 1878 ஆம் ஆண்டு, பள்ளத்தாக்கிற்குப் பின்புறமிருந்த சதுப்பு நிலத்தை உலர வைப்பதற்காக, பின் நகர்கின்ற பனிப்பாறை கழிவடையை அகற்ற கிளார்க் டயனமைட்டைப் பயன்படுத்தினார்.[18] முதல் கண்டங்களுக்கிடையேயான ரயில்பாதையை சாக்ரிமெண்ட்டோ (Sacramento) முதல் ஸ்டாக்டன் (Stockton) வரை நீட்டிக்கும் பணி 1869 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகும் 1872 ஆம் ஆண்டு மத்திய பசிபிக் ரயில்பாதை மெர்சிட் (Merced) பகுதி வரை அமைக்கப்பட்ட பிறகும் இப்பகுதியிலான சுற்றுலா வருகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.[40]

மெர்சிட் பகுதியிலிருந்து நீண்ட தொலைவு குதிரைச் சவாரி செய்ய வேண்டிய அவசியம் சுற்றுலாப் பயணிகளுக்கு கடினமானதாகவே இருந்தது. வசதியை மேலும் மேம்படுத்த 1870களின் மத்தியப் பகுதியில் மூன்று ஸ்டேஜ்கோச் சாலைகள் அமைக்கப்பட்டன. அவை கௌட்டர்வில்லி சாலை (ஜூன் 1874), பிக் ஓட் ஃப்ளேக் சாலை (ஜூலை 1874) மற்றும் வேவனோ சாலை (ஜூலை 1875) ஆகியவையாகும்.[41] 1882 ஆம் ஆண்டு ஜான் கான்வே என்பவர் கிளேசியர் பாயிண்ட் வரை ஒரு சாலையை அமைத்து முடித்தார். 1883 ஆம் ஆண்டு கிரேட் சீயரா வேகன் சாலை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது காலத்தில் டுவால்லோமி புல்வெளிக்கு ஓர் ஊர்தடப் பாதை அமைக்கப்பட்டது.[42]

1880 ஆம் ஆண்டு கலிஃபோர்னிய சட்ட அவை கிளார்க் மற்றும் பதவியில் இருந்த ஆணையர்களை அகற்றிவிட்டு ஹட்ச்சிங்சை புதிய பாதுகாவலராக நியமித்தது.[41] பின்னர் 1884 ஆம் ஆண்டு ஹட்ச்சிங்சுக்கு பதிலாக டபள்யூ.இ. டென்னிசன் (W. E. Dennison) பாதுகாவலரானார்.[43] 1889 ஆம் ஆண்டு மீண்டும் கிளார்க் பாதுகாவலராகி 1896 இல் பணி ஓய்வு பெறும் வரை பாதுகாவலராக நீடித்தார்.[44]

1900 ஆம் ஆண்டு ஆலிவர் லிப்பின்காட் (Oliver Lippincott ) முதல் முதலில் யோசெமிட்டி பள்ளத்தாக்குப் பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்றார்.[45] 1907 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் இ.ஐ. போர்ட்டல் (El Portal) பகுதிக்கு அருகில் யோசெமிட்டி பள்ளத்தாக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது. அது "சொர்க்கத்திற்கான சிறு பாதை" என அழைக்கப்பட்டது.[46] மாரிப்போசா சோலை வழியே செல்லும் ஒரு நடை பாதை உட்பட எண்ணற்ற நடை பாதைகளும் குதிரை ஊர் தடங்களும் அகற்றப்பட்டன.

சலுகைகள் பெற்றவர்கள்

தொகு
 
கேம்ப் கர்ரிக்கு முன்பு மதர் கர்ரி, தோராயமாக 1900

1884 ஆம் ஆண்டு யோசெமிட்டியில் முதல் முதலாக திரு ஜான் டெக்னன் மற்றும் அவரது மனைவி ஒரு பேக்கரியையும் கடையையும் அமைத்தனர், அதுவே யோசெமிட்டியின் முதல் சலுகையாகும்.[47] 1916 ஆம் ஆண்டு டெஸ்மாண்ட் பார்க் சர்விஸ் நிறுவனத்திற்கு 20 ஆண்டு சலுகை வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் விடுதிகள், கடைகள், முகாம்கள், பால் பண்ணை, வண்டிக் கொட்டகை (காரஜ்) மற்றும் பிற பூங்கா சேவைகளை நிறுவி வழங்கியது.[48] 1917 ஆம் ஆண்டு டிசம்பரில் டெஸ்மாண்ட் இதன் பெயரை யோசெமிட்டி தேசியப் பூங்கா நிறுவனம் (யோசெமிட்டி நேஷனல் பார்க் கம்பெனி) என மாற்றி, 1920 ஆம் ஆண்டு மீண்டும் ஒழுங்கமைத்தார்.[49]

டேவிட் மற்றும் ஜென்னி கர்ரி ஆகியோர் கர்ரி நிறுவனத்தை 1899 ஆம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் கேம்ப் கர்ரியையும் நிறுவினர் அது இப்போது கர்ரி கிராமம் என அழைக்கப்படுகிறது.[50] கர்ரி நிறுவனங்கள் தயக்கமுடன் இருந்த பூங்கா மேற்பார்வையாளர்களை சலுகைகள் பெற்றவர்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும் அப்பகுதியிலான முன்னேற்றத்தையும் அனுமதிக்க விட்டன.

நேஷனல் பார்க் சர்விஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஒவ்வொரு தேசியப் பூங்காவிலும் சலுகைகள் பெறுபவர்களின் எண்ணிக்கையை வரம்புக்குட்படுத்தினால் நிதியியல் ரீதியாக சிறப்பாக இருக்கும் என நினைத்தனர். கர்ரி நிறுவனமும் அதன் போட்டி நிறுவனமான யோசெமிட்டி நேஷனல் பார்க் நிறுவனமும் ஒன்றாக இணைய வற்புறுத்தப்பட்டு, 1925 ஆண்டு அவை இணைந்து யோசெமிட்டி பார்க் & கர்ரி கம்பெனி (YP&CC) என்றாகியது.[51]

தேசிய பூங்காக்கள்

தொகு

ஜான் மயுரின் தாக்கம்

தொகு

இயற்கையியலாளர் ஜான் மயுர் 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலிஃபோர்னியாவுக்கு வந்த உடனேயே, யோசெமிட்டி பகுதியில் சில ஏற்பாடுகளைச் செய்தார்,[52] அங்கு பேட் டிலானே (Pat Delaney) என்ற உள்ளூர் பண்ணையாளின் ஆடு தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருந்ததைக் கண்டார். மயுரின் பணியமர்த்தலின் மூலம் அப்பகுதியின் தாவரங்கள், பாறைகள் மற்றும் விலங்குகளைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது[52] அவர் தனது அவதானிப்புகளைப் பற்றி விவரிக்கும் அவரது கட்டுரைகள் மற்றும் அறிவியல் வெளியீடுகளால் யோசெமிட்டி பகுதியைப் பிரபலமாக்கியதுடன் அதன் மீதான அறிவியல் ரீதியான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. யோசெமிட்டி பகுதியின் பிரதான நில அமைப்புகள் ஆல்பைன் பனிப் பாறைகளால் உருவானவை எனக் கூறியவர்களில் மயுர் ஒருவராவார். இது ஜோசியா ஒயிட்னி போன்ற அனுபவமிக்க அறிவியலாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தது. அவர்கள் மயுரை தத்துக்குட்டி என்றனர்.[38]

புல்வெளிகளில் மேய்ச்சல் செயல்கள் நடந்தது, ஜயண்ட் செக்கோயா மரங்களை வெட்டும் செயல் மற்றும் பிற சேதம் விளைவிக்கும் செயல்களால் கவலைகொண்டு எச்சரிக்கையான மயுர் விளம்பரப்படுத்துபவர் மற்றும் விஞ்ஞானி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததை மாற்றிமேலும் பாதுகாப்பளிப்பதில் கவனம் செலுத்தினார்.[53] அவர் 1871 ஆம் ஆண்டு, ரால்ப் வேல்டோ எமர்சன் (Ralph Waldo Emerson) போன்ற செல்வாக்கு மிகுந்த நபர்களைத் தன்னுடன் இருந்து ஆதரவளிக்கும்படி வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.[54] மயுர், இந்த மொத்தப் பகுதியும் கூட்டிணைய அரசின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும் என தனது விருந்தினர்களை ஒப்புக்கொள்ளவைக்க முயற்சி செய்தார். 1880களில் இந்த விருந்தினர்களில் சென்ச்சுரி மேகசின் இதழிம் ஆசிரியரான ராபர்ட் அண்டர்வுட் ஜான்சன் (Robert Underwood Johnson) என்பவரைத் தவிர வேறு எவரும் மயுருக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ஜான்சனின் மூலமாக மயுர் தனது எழுத்துகளை தேசிய அளவில் சென்றடையச் செய்ய முடிந்தது. மேலும் அவர் ஒரு திறன் மிக்க காங்கிரஸ் அதிகாரத் தரகரைப் பெற முடிந்தது.[55]

1890 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அன்று எதிர்ப்பில்லா யோசெமிட்டி சட்டத்தின் படி, பள்ளத்தாக்கிற்கு வெளியே இருந்த பகுதியும் செக்கோயா சோலையும் தேசியப் பூங்காவாக மாறியது, அப்போது மயுரின் விருப்பம் பகுதியளவு நிறைவேறியது.[56] அந்தச் சட்டத்தின் படி "அனைத்து மரங்களும், தாதுப் படிவுகளும், இயற்கையான அம்சங்களும் அல்லது அப்பகுதியிலுள்ள விந்தையான அம்சங்களும் அவற்றின் இடத்திலேயே மற்றும் அவை இருக்கும்படியே பாதுகாக்கப்படும்" மற்றும் "எந்த நோக்கமும் இன்றி மீன்களை அழிப்பதோ, விளையாடுவதோ அல்லது வணிக அல்லது இலாப நோக்கத்திற்காக அவற்றைப் பிடிப்பதோ அழிப்பதோ தடை செய்யப்பட்டதாகும்."[57]

யோசெமிட்டி தேசியப் பூங்கா இரண்டு ஆறுகளின் ஓடை வடிகால் பரப்புகளின் மேல் கழிவகற்று அமைப்புகளையும் தன்னுள் சேர்த்தது. மயுரைப் பொறுத்த வரை ஓடை வடிகால் பரப்புகளின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். அவர் "யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சீயரன் நீரூற்றுகளைப் பாதுகாக்காமல் பள்ளத்தாக்கைப் பாதுகாக்க முடியாது" என்பார்.[27] யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் பெரிய மரங்களைக் கொண்ட மாரிப்போசா சோலை ஆகியவற்றின் கட்டுப்பாடு கலிஃபோர்னிய மாகாணத்திடம் இருந்தது. மயுர் மற்றும் பிற 181 பேர் சேர்ந்து சீயரா சங்கத்தை 1892 ஆம் ஆண்டு உருவாக்கினர். அது பள்ளத்தாக்கையும் சோலையையும் தேசியப் பூங்காவில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காகவும் உருவாக்கப்பட்டது.[47]

இராணுவ நிருவாகம்

தொகு

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவைப் போலவே அதற்கு முன்பு யோசெமிட்டி தேசியப் பூங்காவும் முதலில் ஐக்கிய ஒன்றிய இராணுவத்தின் பல பிரிவுகளால் நிர்வகிக்கப்பட்டது. கேப்டன் ஆப்ராம் உட் (Abram Wood) 1891 ஆம் ஆண்டு மே மாதம் 19 அன்று, 4 வது குதிரைப் படைப் பிரிவை புதிய பூங்காவிற்கு கொண்டு சென்று, வெவோனா பகுதியில் கேம்ப் ஏ.இ. உட் என்ற முகாமை அமைத்தார் (இப்போது அது வெவோனா முகாமிடம் (வெவோனா கேம்ப்கிரௌண்ட்) என அழைக்கப்படுகிறது).[58] ஒவ்வொரு கோடைக்காலமும் 150 குதிரைப்படை வீரர்கள் சான் ஃபிரான்சிஸ்கோவின் பிரெசிடோ பகுதியிலிருந்து பூங்காவில் ரோந்துக்காக பயணித்தனர். ஒவ்வொரு ஆண்டும் யோசெமிட்டியின் உயர் புல்வெளிப் பகுதிகளில் தோராயமாக 100,000 ஆடுகள் சட்ட விரோதமாக மேய்சசலுக்கு விடப்படுகின்றன.[55] இராணுவத்திற்கு சட்டவிரோதமாக மேய்ச்சலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் அதிகாரம் இருக்கவில்லை, ஆனால் பல நாட்கள் நடந்து ஆடுகளை ஆபத்துக்குட்படுத்துவதம் மூலம் அவற்றைப் பாதுகாத்தனர். 1890களின் இறுதிப் பகுதியில் ஆடு மேர்ப்பது ஒரு சிக்கலாக இருக்கவில்லை, ஆனால் 1920களில் ஒரே ஒரு மேய்ப்பன் ஆடுகளை பூங்காவில் மேய்த்துக்கொண்டே இருந்தான்.[59]

இராணுவம், அப்பகுதியில் வேட்டையாடுவதையும் கட்டுப்படுத்த முயற்சித்தது. 1896 ஆம் ஆண்டு ஆக்டிவ் சூப்பரிண்டெண்டண்ட் கலோனல் எஸ். பி. எம். யங் என்பவர், எண்ணற்ற விலங்குகளும் மீன்களும் கொல்லப்படுவதைக் கண்டுபிடித்த பிறகு துப்பாக்கிகளுக்கான அனுமதி வழங்குதலை நிறுத்தினார்.[60] 21 ஆம் நூற்றாண்டிலும் வேட்டையாடுதல் என்பது சிக்கலாகவே தொடர்ந்துவருகிறது.[61] 1914 ஆம் ஆண்டு பூங்கா மீதான இராணுவ நிர்வாகம் முடிந்தது.[62]

மாகாணத்தின் சலுகை பாதுகாவலராக இருந்த கேலன் கிளார்க் 1896 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால் யோசெமிட்டி பள்ளத்தாக்கும் பெரிய மரங்களைக் கொண்டிருந்த மாரிப்போசா சோலையும் பாதுகாப்பை இழந்தன.[59] மாகாண சலுகை வழங்கல்களில் முன்னர் இருந்த சிக்கல்கள் இன்னும் மோசமாகி பல புதிய சிக்கல்கள் உருவாயின, ஆனால் குதிரைப்படை மட்டுமே முழுவதுமாக இடத்தைக் கண்காணிக்க முடியவில்லை. மயுரும் சீயரா சங்கமும், ஒருங்கிணைந்த யோசெமிட்டி பூங்கா கோரிக்கைக்காக தொடர்ந்து அரசாங்கத்தையும் செல்வாக்கு மிக்க நபர்களையும் வற்புறுத்தி வந்தனர். சீயரா சங்கம், இந்த தொலைவான யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், 1901 ஆம் ஆண்டு யோசெமிட்டி பகுதிக்கு ஆண்டு தோறும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியது.[63]

ஒருங்கிணைந்த தேசியப் பூங்கா

தொகு
 
1903 ஆம் ஆண்டு கிளாசியர் பாயிண்ட்டில் தியோடார் ரூஸ்வெல்ட்டுடன் ஜான் மயுர்

1903 ஆம் ஆண்டு மே மாதத்தில், அமெரிக்க அதிபர் தியோடார் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) ஜான் மயுருடன் கிளேசியர் பாயிண்ட் அருகே மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.[64] அந்தப் பயணத்தின் போது, மயுர் ரூஸ்வெல்ட்டை பள்ளத்தாக்கு மற்றும் சோலையின் கட்டுப்பாட்டை கலிஃபோர்னியாவிடமிருந்து மாற்றி கூட்டிணைய அரசாங்கத்திடம் ஒப்படைக்க சம்மதிக்கச் செய்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று, மேலே கூறியதைச் செய்யக் கூறும் ஓர் அரசாணையில் ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார். அதன் படி, சூப்பரிண்டெண்டண்ட் தலைமையகம் வெவோனாவிலிருந்து யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாற்றப்பட்டது.[65]

காங்கிரஸ் மற்றும் கலிஃபோர்னிய மாகாணத்திடம் இருந்து இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக 500 சதுர மைல்கள் (1,300 km2) க்கும் மேலாக பூங்காவின் அளவு குறைக்கப்பட்டது,[66] இதனால் டெவில்ஸ் போஸ்ட்பைல் (Devils Postpile) மற்றும் முக்கிய விலங்குகள் போன்றவை இதில் சேராமல் போயின. வெவோனா பகுதியில் மரங்கள் வெட்டப்படுதல் தொடங்கிய போது 1906 ஆம் ஆண்டு பூங்காவின் அளவு மீண்டும் குறைக்கப்பட்டது.[67] செயல் சூப்பரிண்டெண்டட் மேஜர் எச். சி. பென்சன் 1908 ஆம் ஆண்டு "வேட்டையாடுதல் குறையவில்லை. பூங்காவில் ஒவ்வொரு முறை பகுதிகள் குறைக்கப்படும் போதும் வேட்டையாடுதலின் குளிர்கால பொழுதுபோக்கின் மற்றொரு பகுதியைக் குறைத்தது" எனக் கூறினார்.[67] பல்வேறு மாற்றங்களின் காரணமாக பூங்கா அதன் அசல் அளவில் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது.[67]

1930 ஆம் ஆண்டு, டுவால்லோமி மற்றும் மெர்சிட் பெரு மரச் சோலைகள் ஆகியவற்றுக்கிடையேயான பகுதியில் சுமார் 12,000 ஏக்கர்கள் (4,900 ha) பூங்காவில் சேர்க்கப்பட்டது. கூட்டிணைய அரசாங்கம் நிலங்களை வாங்கியதன் மூலமும் அதற்கு ஏற்ப தொழிலதிபர் ஜான் டி. ராக்ஃபெல்லர் வழங்கிய நிதியாலும் இது சாத்தியமானது.[67] 1932 ஆம் ஆண்டு வெவோனா அருகிலுள்ள மற்றொரு 8,765 ஏக்கர்கள் (3,547 ha) பூங்காவில் சேர்க்கப்பட்டது. ராக்ஃபெல்லர் வாங்கிய பகுதிக்கு அருகிலிருந்த கார்ல் இன் பகுதி 1937 மற்றும் 1939 ஆம் ஆண்டு கைக்கொள்ளப்பட்டது.[67]

ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கிற்கான சண்டை

தொகு

சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜேம்ஸ் டி. ஃபெலான் (James D. Phelan) 1900 ஆம் ஆண்டு USGS பொறியாளரான ஜோசப் பி. லிப்பின்காட் (Joseph B. Lippincott) என்பவரை தேசியப் பூங்காவில் யோசெமிட்டி பள்ளத்தாக்கின் வடக்கே அமைந்துள்ள ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கை தனிப்பட்ட முறையில் அளவிடுவதற்காக நியமித்தார்.[68] அவரது அறிக்கையில் ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கில் உள்ள டுவால்லோமி நதி அணையே நகருக்கான சிறந்த குடிநீர் வழங்கும் தேக்ககமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார். டுவால்லோமி நதிக்கான நீர் உரிமைகள் மற்றும் ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கிலும் எலினார் ஏரியிலும் நீர் தேக்ககங்கள் கட்டுவதற்கான உரிமைகள் ஃபெலன் சார்பாக 1901 ஆம் ஆண்டு லிப்பின்காட்டால் பெறப்பட்டன.[68] 1903 ஆம் ஆண்டு இந்த கோரிக்கைகளை உள்துறை தலைவரான ஈத்தன் ஆலன் ஹிட்ச்காக் (Ethan Allen Hitchcock) என்பவர் நிராகரித்தார். ஏனெனில் அவர் "அந்த விண்ணப்பம் பொதுமக்களின் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை" எனக் கருதினார்.[67]

 
ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கு அணையாக மாற்றப்படும் முன்பு. இசாயா வெஸ்ட் டேபர் (Isaiah West Taber) எடுத்த இந்தப் புகைப்படம் 1908 ஆம் ஆண்டு சீயரா சங்கத்தின் தகவலேட்டில் இடம்பெற்றது.

1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பூகம்பத்தால் அந்த நகருக்கு அணை கட்டுவதற்கான உரிமை வழங்கல் பாதித்தது. ஹெட்ச் ஹெட்ச்சிக்கான உரிமைகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு 1908 ஆம் ஆண்டு உள்துறைத் தலைவர் ஜேம்ஸ் ருடால்ஃப் கார்ஃபீல்ட் (James Rudolph Garfield) என்பவரால் வழங்கப்பட்டது. அவர் இவ்வாறு எழுதினார்: "இந்த சேகரிப்புத் தொட்டிகளும் நீரும் அமைப்பதன் மூலம் பெறும் பயன்களில் வீட்டு உபயோகமே முதலாவதானது."[67]

இந்த அணைக்கட்டு விஷயத்தில் தேசிய அளவில் பிரபலமான சண்டை ஏற்பட்டது. மயுர் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை ஆதரிக்கும் நபர்கள் காடுப் பகுதிகளை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிக்கும் நபர்களான கிஃப்பார்டு பின்காட் (Gifford Pinchot) போன்றவர்கள் காட்டுப் பகுதிகளை மனிதர்களுக்குகந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் எனக் கூறினர். ராபர்ட் அண்டர்வுட் ஜான்சனும் சீயரா சங்கமும் இணைந்து பள்ளத்தாக்கில் வெள்ளம் புகும் பாதிப்பைத் தடுப்பதற்காகப் போராடினர். மயுர் இவ்வாறு எழுதினார், "ஹெட்ச் ஹெட்ச்சி அணை! இந்த அணை மக்கள் பயன்படுத்தும் கோவில்களுக்கும் தேவாலயங்களுக்குமே அன்றி மனிதர் உருவாக்கிய புனித ஆலயங்களுக்காக அல்ல."[69] அமெரிக்க வனத் துறையின் இயக்குநரான, பின்காட் தனது நெருங்கிய நண்பரான ரூஸ்வெல்ட்டிற்கு இவ்வாறு எழுதினார், "பெருவாரியான மக்களுக்கு நீர் வழங்கும் வசதியே இந்த அணையினால் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ள சிறந்த பயனாக இருக்கும்."[69]

ரூஸ்வெல்ட்டிற்கு அடுத்து வந்த அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson), 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று ராக்கர் சட்டத்திற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன் படி அணை கட்டும் பணி சட்டப்பூர்வமானது.[59][70] 1923 ஆம் ஆண்டு ஓ'ஷாக்னெஸி அணையின் வெள்ளப்பெருக்கினால் பள்ளத்தாக்கு பாதிப்படைந்ததால் ஹெட்ச் ஹெட்ச்சி நீர்த்தேக்ககம் உருவானது.[54] ராக்கர் சட்டத்தின் மூலம், பூங்காவில் ஹெட்ச் ஹெட்ச்சிக்கு வடமேற்கில் இருந்த எலினார் மற்றும் செர்ரி ஆகிய ஏரிகளில் நீரைச் சேகரித்து வைக்கும் உரிமையும் நகருக்கு கிடைத்தது.[71]

மயுர் இறப்பதற்கு சற்று முன்பு ராக்கர் சட்டத்திலிருந்து "இதற்கு ஈடு செய்யும் வகையில் ஏதாவது நல்லது உடனே நடக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.[72] அணை பற்றிய சண்டை தேசிய அளவில் பிரபலமடைந்ததால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலுவடைந்தது.

நேஷனல் பார்க் சர்விஸ்

தொகு

1916 ஆம் ஆண்டு யோசெமிட்டி தேசியப் பூங்காவின் நிர்வாகம் புதிதாக உருவாகிய நேஷனல் பார்க் சர்விஸ் நிறுவனத்தின் கைக்குச் சென்றது, அப்போது டபள்யூ. பி. லூயிஸ் (W. B. Lewis) பூங்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். தெனாயா மற்றும் மெர்சிட் ஏரிகளுடன் சேர்ந்து டுவால்லோமி புல்வெலிகள் லாட்ஜ் மற்றும் டியோகா பாஸ் சாலை ஆகியவற்றின் பணிகள் அதே ஆண்டு நிறைவுற்றன. அந்தக் கோடைப்பருவத்தின் போது டியோகா பாஸ் சாலையைப் பயன்படுத்தி 600 வாகனங்கள் பூங்காவின் கிழக்குப் பகுதியை அடைய முடிந்தது.[72] 1926 ஆம் ஆண்டு "ஆல் வெதர் ஹைவே" (இப்போது மாகாணத் தடம் 140) திறக்கப்பட்டது. இதனால் ஆண்டு முழுவதும் இங்கு செல்லும் வசதியும் சாதாரண நிலைகளில் பொருள்களை வழங்கும் வசதியும் ஏற்பட்டது.[73]

1933 ஆம் ஆண்டு 0.8-மைல் (1.3 km)-லாங் வெவோனா கால்வார் பணி முடிவடைந்ததால் வெவோனாவிலிருந்து பள்ளத்தாக்கிற்குச் செல்லும் பயண நேரம் மிகவும் குறைந்தது.[74] கால்வாயின் பள்ளத்தாக்குப் பக்கமாக டன்னல் வியூ பகுதியும் அதற்கும் மேல் இன்ஸ்பிரேஷன் பாயிண்ட்டும் அமைந்தன. ஒரு வெள்ள நிகழ்வினால் மரம் வெட்டும் தொழிலும் சுரங்கப் பணிகளும் வெகுவாகக் குறைந்தன. மேலும் யோசெமிட்டி பகுதிக்கு அதிகமாக பேருந்தும் வாகனங்களுமே பயன்படுத்தப்பட்டதால், 1945 ஆம் ஆண்டு யோசெமிட்டி பள்ளத்தாக்கு ரயில்வே வணிகம் ஏற்படுத்த வேண்டிய சூழல் உருவானது.[75] இப்போதுள்ள டியோகா சாலை கலிஃபோர்னிய மாகாணத் தடம் 120 இன் பகுதியாக உள்ளது. அது 1961 ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது.[76]

 
ஆவனீ விடுதி, 2006

1920 ஆம் ஆண்டு யோசெமிட்டியில் தேசியப் பூங்காக்களுக்கான புரிதல் விளக்கத் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கிய ஹெரால்டு சி. பிரியண்ட் (Harold C. Bryant) மற்றும் லோய் ஹோம்ஸ் மில்லர் (Loye Holmes Miller) ஆகியோர் இதற்கான முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.[77] 1921 ஆம் ஆண்டு அர்சனல் எஃப். ஹால் (Ansel F. Hall) பூங்காவின் இயற்கையியலாளராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார்.[78] பூங்காவின் அருங்காட்சியகங்களை புரிதல் விளக்க நிகழ்ச்சிகளுக்கான மக்கள் தொடர்பு அமியங்களாகப் பயன்படுத்தலாம் என்ற ஹாலின் யோசனை பின்னர் அமெரிக்க ஒன்றியத்திலும் சர்வதேச அளவில் பிற பூங்காக்களிலும் மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டது. தேசியப் பூங்கா அமைப்பின் முதல் நிரந்தர அருங்காட்சியகமான யோசெமிட்டி அருங்காட்சியகம் அமைக்கும் பணி 1926 ஆம் ஆண்டு முடிவடைந்தது.[79]

யோசெமிட்டி பள்ளத்தாக்கிலுள்ள ஆவெனீ ஹோட்டல், தேசிய வரலாற்றுச் சின்னமாக உள்ளது. 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த விடுதி,[80] கட்டடக் கலைஞர் கில்பர்ட் ஸ்டேன்லி அண்டர்வுட் (Gilbert Stanley Underwood) என்பவரால் கட்டப்பட்டு பூர்வீக அமெரிக்க பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.[80] பல ஆண்டுகளாக அது ஆன்சல் ஆடம்சின் (Ansel Adams) ஆண்டு விழாவை நடத்தும் இடமாக இருந்து வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது இராணுவ வீரர்களுக்கான மறுவாழ்வு மருத்துவமனையாகப் பயன்பட்டது.

மீட்டலும் பாதுகாத்தலும்

தொகு

1937, 1950, 1955 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் பெரும் வெள்ள நிகழ்வுகளால் யோசெமிட்டி பள்ளத்தாக்கு சூழப்பட்டது.[81] இந்த வெள்ள நிகழ்வுகளின் வெள்ளப் பாய்வு வீதங்கள் வினாடிக்கு 22,000 முதல் 25,000 கன அடி (620 முதல் 700 மீ3) என்ற குறைவான வேகத்தையே கொண்டிருந்தன. இவ்வளவுகள் யோசெமிட்டி பள்ளத்தாக்கிலுள்ள பொஹோனோ பிரிட்ஜ் அளவீடு மையத்தால் எடுக்கப்பட்டன.[81]

1950கள் மற்றும் 1960களின் போது பழைய யோசெமிட்டி கிராமத்திலிருந்த ஆலயத்தைத் தவிர்த்த அனைத்து இடங்களும் வெவோனாவிலிருந்த முந்தைய யோசெமிட்டி வரலாற்று மையத்திற்கு நகர்த்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன.[82] பூங்காவிலிருந்த பிற இடங்களும் வரலாற்று மையத்திற்கு நகர்த்தப்பட்டன. யோசெமிட்டி பள்ளத்தாக்கிலிருந்த மிகப் பழமையான சீடர் காட்டஜ் மற்றும் பிற இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை எனினும் 1941 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டன.[83] இயற்கைக் காட்சி அமைப்புகளைப் பாதுகாப்பதும் மீட்பதுமே முக்கியமாகக் கருதப்பட்டதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு குறைந்த அளவே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.[84]

அமெரிக்க சட்ட அவை 1964 ஆம் ஆண்டு வனப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பூங்காவின் 89 சதவீதப் பகுதியை அதிக பாதுகாப்புக்குரிய வனப் பகுதிக்கு மாற்றியது.[85] இந்தப் பகுதியில் பாதைப் பராமரிப்புப் பகுதிக்கு அப்பால் (மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற அவசர உதவி வாகனங்கள் தவிர) எந்த மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சட்டத்தின் படி, யோசெமிட்டி தேசியப் பூங்காவிற்கு அருகில் ஆன்சல் ஆடம்ஸ் வனப்பகுதியும் ஜான் மயுர் வனப்பகுதியும் அமைக்கப்பட்டன.[86] இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 1906 ஆம் ஆண்டு மாகாண வழங்கல் சலுகையின் போது ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பு பூங்காவிலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளையும் கொண்டிருந்தது.

இரவில் பனிப்பாறைப் புள்ளிக்கு (கிளேசியர் பாயிண்ட்) அருகில் செங்குத்துப் பாறையிலிருந்து செஞ்சூடான கட்டைகளைத் தள்ளிவிடும் நிகழ்வான யோசெமிட்டி ஃபயர்ஃபால் சடங்கு பூங்காவின் மதிப்பைக் கெடுப்பதாக இருப்பதாகக் கூறப்பட்டதால் 1968 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.[87] 1870களில் கேம்ப் கர்ரி நிறுவப்பட்டதிலிருந்து ஃபயர்ஃபால் சடங்கானது இரவில் அரிதாக நடத்தப்பட்டது.[88]

1960களின் பிற்பகுதியிலிருந்து

தொகு

1970 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்க இளைஞர்கள் பலர் பூங்காவில் முகாமிட்ட போது அங்கு ஜூலை 4 ஆம் தேதி ஒரு கலவரம் ஏற்பட்டதால், அமெரிக்க சமூகத்தினரிடையே யோசெமிட்டி பகுதி பற்றி பரபரப்பு ஏற்பட்டது, அப்போது வனத்துறை அதிகாரிகள் ஸ்டோன்மேன் புல்வெளியில் சட்ட விரோதமாக முகாமிட்டிருந்தவர்களை வெளியேற முயற்சித்தனர்.[89] அப்போது கலவரக்காரர்கள் வனத்துறை அதிகாரிகளை கற்கள் கொண்டு தாக்கி, குதிரையிலிருந்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். மீண்டும் அமைதியை நிலைநிறுத்த நேஷனல் கார்டு வீரர்கள் வந்தனர்.

1973 ஆம் ஆண்டு யோசெமிட்டி பூங்காவையும் கர்ரி நிறுவனத்தையும் மியூசிக் கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா (MCA) நிறுவனம் வாங்கியது.[90] 1988 ஆம் ஆண்டு சலுகைகள் பெற்றவர்கள் 500 மில்லியன் டாலர்களை ஈட்டினர், அவர்கள் உரிமைக்காக கூட்டிணைய அரசாங்கத்திற்கு 12.5 மில்லியன் டாலர் செலுத்தினர்.[91] 1992 ஆம் ஆண்டு யோசெமிட்டியின் பிரதான சலுகை பெற்ற நிறுவனமாக டெலவேர் நார்த் கம்பெனிஸ் நிறுவனம் ஆகியது. அந்நிறுவனம் நேஷனல் பார்க் சர்விஸ் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தினால் சலுகைகள் பெற்றவர்களிடமிருந்து பூங்காவுக்கு வரும் வருவாய் 20 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.[92]

1999 ஆம் ஆண்டு பூங்காவிற்கு வெளியே கேரி ஸ்டெயினர் என்பவரால் நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர்.[93] அதே ஆண்டில், கிளேசியர் பாயிண்ட்டின் கிழக்குப் பகுதியில் உருவான பாறைச் சரிவு மெர்சிட் நதியின் ஹேப்பி ஐஸ்லெஸ் பகுதிக்கு அருகே முடிந்தது. இதனால் பல கால்பந்து மைதானங்களின் அளவை விடப் பெரிய சிதகூளப் பகுதி உருவானது.[94] இந்த நிகழ்வுகளை அடுத்து சில காலம் சுற்றுலா தடை செய்யப்பட்டது. ஆனால் விரைவில் பழைய நிலையை அடைந்தது.

மனித பாதிப்புகள்

தொகு

பூங்காவிற்கு மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பார்க் சர்விஸ் நிறுவனம் 1980 ஆம் ஆண்டு சில திட்டங்களைச் செயல்படுத்தியது. 1990 ஆம் ஆண்டின் பொது நிர்வாகத் திட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகள் இடம்பெற்றன: திடீரென ஏற்பட்ட குடியேற்றங்களில் 17 சதவீதத்தைக் குறைப்பது, பணியாளர்களின் வீட்டு வசதிக் குடியிருப்புகளை 68 சதவீதம் குறைத்தல் மற்றும் கோல்ஃப் மற்றும் டென்னிஸ் ஆட்டக்களங்களை அகற்றுத[95]. இருப்பினும் 1990களின் பிற்பகுதியில் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் 1,300 கட்டடங்கள் இருந்தன. மேலும் பள்ளத்தாக்கின் நிலப்பகுதியின் 17 ஏக்கர்கள் (6.9 ha) வாகன நிறுத்திமிடங்களால் சூழப்பட்டிருந்தன.[96] திட்டத்தின் குறிக்கோள்கள் அடையப்படவில்லை, ஆனால் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யோசெமிட்டி பள்ளத்தாக்கிலிருந்த பூங்கா அகக் கட்டமைப்புகள் அழிந்தன.[97] பின்னர் 250 க்கும் மேற்பட்ட பிற நடவடிக்கைகளின் மீதும் பொது நிர்வாகத் திட்டத்தினைச் செயல்படுத்த யோசெமிட்டி பள்ளத்தாக்குத் திட்டம் நிறுவப்பட்டது.[98]

காடுகளும் புல்வெளிகளும்

தொகு

ஆவனெச்சி மற்றும் பிற பூர்வீக இனக்குழுவினர் யோசெமிட்டி பகுதியின் சூழலை மாற்றினர். அக்கான் பழங்களைக் கொண்டிருக்கும் கருப்பு கருவாலி மரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பள்ளத்தாக்கின் நிலப்பகுதிகள் பல ஒவ்வொரு ஆண்டும் தீவைக்கப்பட்டன.[99] இந்தத் தீவைப்புகளால் காடு திறந்த வெளியாக இருந்தது. இதனால் புதர்களில் மறைந்துகொள்ளும் சட்ட விரோத நிகழ்வுகள் குறைந்தன, திறந்த வெளிப் பகுதிகளால் புல்வெளிகளை விரிவாக்குவதும் பராமரிப்பதும் எளிதானது.

பழைய பூங்கா பாதுகாவலர்கள் ஆண்டு தோறும் பருவகாலங்களில் நீர் தேங்கும் குட்டைகளை அகற்றி வறட்சியாக்கினர். இதனால் புல்வெளிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைந்தது. பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளிகளின் பரப்பு 1860களில் 750 ஏக்கர்கள் (300 ha) ஆகவும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 340 ஏக்கர்கள் (140 ha) ஆகவும் இருந்தது.[54] மீதமிருக்கும் புல்வெளிகள் மனிதர்களைக் கொண்டு மரங்களையும் புதர்ச்செடிகளையும் அகற்றுவதன் மூலம் பராமரிக்கப்படுகின்றன. பார்க் சர்விஸ் நிறுவனம் புல்வெளிகளில் வாகனம் ஓட்டுவதையும் முகாம் அமைப்பதையும் தடை செய்தது. இவை 1910கள் முதல் 1930கள்[96] வரை பொதுவான வழக்கமாக இருந்தன. மேலும் அதன் பிறகு கால்நடைகளும் குதிரைகளும் பூங்காவில் உலாவ அனுமதிக்கப்படவில்லை.

காட்டுத் தீக்கட்டுப்பாட்டினால் பாண்டரோசா பைன் (ponderosa pine) மற்றும் இன்சென்ஸ் சீடர் (incense cedar) போன்ற இளம் ஊசியிலை மரங்கள் வளர்ச்சி அதிகமாகியது, வளர்ந்த ஊசியிலை மரங்கள் இளம் கருப்பு கருவாலி மரங்களை வளர்க்க அவற்றின் நிழல் உதவியாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டில், காட்டுத் தீக்கட்டுப்பாடு மற்றும் குட்டைகளை வறட்சியாக்கியதால் ஏற்பட்ட நிலத்தடி நீர்மட்டக் குறைவு ஆகியவற்றால், முன்னர் கலந்துபட்ட வகைகளைச் சேர்ந்த திறந்த ஊசியிலை கருவாலி கானகங்கள் வளர்ந்திருந்த இடத்தில் அடர்ந்த ஊசியிலைக் காடுகள் உருவாயின.[100] காட்டுத் தீக்கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு பதிலாக தீ நிர்வாகத் திட்டம் நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு ஆண்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவு தீமூட்டுதலை பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை இருந்தது. குறிப்பாக ஜயண்ட் செக்கோயா சோலைகளுக்கு தீயானது மிக முக்கியமாகும். அவை தீ படாத மண்ணில் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இக்காலத்தில் இப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டன. முதல் உலகப்போருக்கும் 1930 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து லட்சம் மரப்பருமனளவுக்கும் மேலான மரங்கள் வீழ்ந்தன. அப்போது ஜான் டி.ராக்ஃபெல்லர், ஜூனியர் (John D. Rockefeller, Jr.) மற்றும் கூட்டிணைய அரசாங்கம் இணைந்து யோசெமிட்டி லம்பார் கம்பெனியை வாங்கின.[72]

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தொகு
 
1918 ஆம் ஆண்டு வெவோனா மரம். 1881 ஆம் ஆண்டு கால்வாய் வெட்டப்பட்டது, இம்மரம் 1969 ஆம் ஆண்டு வீழ்ந்தது. அதன் வயது 2,300 ஆண்டுகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

மயுர் மற்றும் சீயரா சங்கம் இணைந்து தொடக்கத்தில் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். மலைகளுக்குச் செல்வது என்பது நமது வீட்டுக்குத் திரும்புவது என்பதால், சில காலங்களில் "அதிக ஆர்வமின்றி" வந்த சுற்றுலாப் பயணிகளும் மொத்தத்தில் "நாம் மீண்டும் இயற்கையை நோக்கித் திரும்புகிறோம் என்ற நம்பிக்கைக்கான அடையாளமாகத் திகழ்கின்றனர்" என மயுர் எழுதினார்.[96]

1900 ஆம் ஆண்டிலேயே யோசெமிட்டி பகுதியில் முதல் வாகனம் உள் நுழைந்தது, ஆனால் 1913 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கார்கள் அனுமதிக்கப்படும் வரை கார்களின் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கவில்லை.[72] அடுத்த ஆண்டு பூங்காவிற்கு 127 கார்கள் வந்தன.[54]

பூங்காவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை 1914 ஆம் ஆண்டில் 15,154 என்பதிலிருந்து 1918 ஆம் ஆண்டில் 35,527 என அதிகரித்தது, பின்னர் 1929 ஆம் ஆண்டில் 461,000 என்ற எண்ணிக்கையை அடைந்தது.[96] 1946 ஆம் ஆண்டு பூங்காவிற்கு ஒரு மில்லியனில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், 1954 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்களும், 1966 ஆம் ஆண்டு இரண்டு மில்லியன் மக்களும்1980களில் மூன்று மில்லியன் மக்களும் 1990களில் நான்கு மில்லியன் மக்களும் வருகை தந்தனர்.[101]

பொழுதுபோக்கு செயல்பாடுகள்

தொகு

யோசெமிட்டி பள்ளத்தாக்கின் நிலப்பகுதியிலிருந்து 4,737 அடிகள் (1,444 m) உயரத்திற்கு எழும்பியிருக்கும் ஹாஃப் டூம் என்பது முக்கியமான மற்றும் சின்னமான கிரானைட் குவிமாடமாகும். 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று அதன் மீது முதல் முதலில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கான ஸ்காட்லாந்தின் கொல்லரான ஜார்ஜ் சி. ஆண்டர்சன் (George C. Anderson) என்பவர் ஏறினார்.[102] ஆண்டர்சன் பயன்படுத்திய அந்தக் கயிறை அதன் பிறகு, 61 வயது கேலன் கிளார்க், ஒரு பெண்மணி ஆகியோர் உள்ளிட்ட ஆறு பேர் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் அந்த குவிமாடத்தின் கடைசி 975 அடிகள் (297 m) ஐ அளவிடுவதற்காக ஏறினர். ஆண்டர்சனின் கயிறு பின்னர் பல முறை பழுதுபார்க்கப்பட்டு இறுதியில் அதற்குப் பதிலாக 1919 ஆம் ஆண்டு சீயரா சங்கம் படிவழி ஒன்றைக் கட்டியது.[103]

கேம்ப் 4 என பிரபலமான சன்னிசைடு வாக்-இன் முகாமிடம் 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[104] 1950களில் யோசெமிட்டியின் பாறை விளிம்புகளின் பரிமாணங்களை அளவிடத் தொடங்கிய பாறையேறுபவர்கள் இங்கே முகாமிட்டிருந்தனர்.[105] 1997 ஆம் ஆண்டு யோசெமிட்டி பள்ளத்தாக்கில் ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கால் பள்ளத்தாக்கில் இருந்த பணியாளர் குடியிருப்புகள் அழிந்தன. பார்க் சர்விஸ் நிறுவனம் கேம்ப் 4 க்கு அருகே ஓய்வுக் கூடங்களைக் கட்ட விரும்பியது, ஆனால் டாம் ஃப்ராஸ்ட் (Tom Frost), அமெரிக்கன் ஆல்பைன் கிளப் மற்றும் சிலர் சேர்ந்து அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமலாக்கினர். கேம்ப் 4 பாறையேற்றம் என்பதை ஒரு விளையாட்டாக மேம்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்ததால், 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று வரலாற்று முக்கிய இடங்களுக்கான தேசிய பதிவகத்தில் [106] கேம்ப் 4 பட்டியலிடப்பட்டது.[107]

பேட்ஜர் பாஸ் ஸ்கை ஏரியா 1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[108] 9-துளைகளைக் கொண்ட வெவோனா கோல்ஃப் மைதானம் 1918 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெவோனா விடுதிக்கு அருகில் திறக்கப்பட்டது.[109] பின்னாளில் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் இருந்த ஆவனே ஹோட்டலுக்கு அருகில் ஒரு கோல்ஃப் மைதானம் கட்டப்பட்டது, ஆனால் 1981 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டு புல்வெளியாக மாற்றப்பட்டது.[110]

அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் வந்தடைந்த இனங்கள்

தொகு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பூங்கா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகள் மற்றும் வியாதிகளினால் தாக்கம் ஏற்பட்டது. கேலன் கிளார்க் 1890களின் நடுப்பகுதியில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிலிருந்த பூர்வீகமான புற்கள் மற்றும் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை முக்கால் பாகம் குறைந்துவிட்டிருந்ததைக் கவனித்தார்.[100]

ஊசியிலை மரங்களைத் தாக்கும் வெண்பைன் வெடிப்புத்துரு நோய் என்ற பூஞ்சை வகை நோய் தற்செயலாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1910 ஆம் ஆண்டு அறிமுகமாகி அது 1920களில் கலிஃபோர்னியாவுக்குப் பரவியது.[111] அதிலிருந்து யோசெமிட்டி பகுதியிலிருந்த பல சுகர் பைன் மரங்களை இந்நோய் தாக்கியது.[112] பூஞ்சைகளைக் கொண்டுவரும் ரைப்ஸ் இனத் தாவரங்களை அகற்றுவதன் மூலம் பூஞ்சைகளால் ஏற்படும் அழிவைத் தடுக்க முடிந்தது.[113]

மீன்பிடித்தலை ஊக்குவிப்பதற்காக யோசெமிட்டி ஓடைகளிலும் ஏரிகளிலும் டிரௌட் மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்ட மீனினங்களுக்காக, தவளைக்குஞ்சுகளை வேட்டை இரையாகப் பயன்படுத்தியதால் தவளைகள் எண்ணிக்கை குறைந்தது.[114] ஏரிகள் மற்றும் ஓடைகளும் அதன் பிறகு பூங்காவில் தேக்ககப்படுத்தப்படவில்லை.

தற்போதுள்ள பூங்கா நிர்வாகிகள், நச்சுத்தன்மையுள்ள களைகளின் ஊடுருவும் தாவர இனங்களில் அதிக முன்னுரிமையளிக்க வேண்டிய ஒன்பது வகைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர், அவை: யெல்லோ ஸ்டார்-திஸ்டில் (சென்ச்சாரியா சால்ஸ்டிட்டியாலிஸ் (Centaurea solstitialis)); ஸ்பாட்டட் நேப்வீட்ஸ் (சென்ச்சாரியா மாக்குலோசா (Centaurea maculosa) ); ஹிமாலயன் பிளாக்பெர்ரி (ரூபஸ் ஆர்மெனியாக்கஸ் (Rubus armeniacus) ); புல் திஸ்ட்டில் (சிர்சியம் வல்காரே (Cirsium vulgare)); வெல்வெட் கிராஸ் (ஹால்கஸ் லெனாட்டஸ் (Holcus lanatus)); சீட் கிராஸ் (புரோமஸ் டெக்ட்டோரியம் (Bromus tectorum)); ஃப்ரெஞ்ச் புரூம் (ஜெனிஸ்ட்டா மோன்ஸ்பெஸ்ஸுலானா (Genista monspessulana)); இத்தாலியன் திஸ்ட்டில் (கார்டஸ் பைக்னோசெஃபாலஸ் (Carduus pycnocephalus)) மற்றும் பெரன்னியல் பெப்பர்வீட் (லெப்பிடியம் லேட்டிஃபோலியம் (Lepidium latifolium)).[115] 2008 ஆம் ஆண்டில், மிகவும் அச்சுறுத்தலான களைத் தாவரங்களை அகற்றும் மனிதச் செயலுக்கு உதவியாகவும் விரிவுபடுத்தவும், பூங்காவில் கிளைஃபோசேட் (glyphosate) மற்றும் அமினோபைரலிட் (aminopyralid) ஆகிய களைக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன.[115]

வனவாழ்க்கை

தொகு
 
கலிஃபோர்னியாவின் முதல் கொடியில் பிரௌன் கரடியின் துணை இனங்களின் உருவம் காணப்பட்டது. அவை யோசெமிட்டிப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவை. ஆனால் இப்போது அவை அழிந்துவிட்டன. 1890 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் 1906 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட முதல் கரடிக் கொடியைக் காண்பிக்கிறது.

மிவோக் புராணங்களில் அதிகமாக இடம்பெற்றுள்ள, கிரீஸ்லிக்கள் எனவும் அழைக்கப்படும் பிரௌன் கரடிகள் 1920களில் அப்பகுதியில் இல்லாமல் அழிந்து விட்டன. அதுவரை அவையே முக்கியமான வேட்டையாடிகளாக இருந்தன.[116] சார்லஸ் நால் (Charles Nahl) வரைந்த, யோசெமிட்டி கிரிஸ்லியைச் சித்தரிக்கும் ஒரு மாதிரிச் சித்திரம் கலிஃபோர்னியாவின் கொடியை அலங்கரிக்கிறது.

1930களில் கருப்புக் கரடிகள் மிக முக்கியமான விலங்குகளாக இருந்தன. ஆனால் 1929 ஆம் ஆண்டில் மட்டும் 81 பேர் கரடியினால் காயமேற்பட்டு சிகிச்சைக்கு வந்திருந்தனர்.[117] பூங்காவின் பிற பகுதிக்கு மாற்றப்படும் முன்பு, ஆபத்தான கரடிகள் வெள்ளை வண்ணத்தால் குறிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து தாக்கும் கரடிகள் கொல்லப்பட்டன. கரடி உணவுக் காட்சிகள் 1940 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன. ஆனால் பார்க் சர்விஸ் நிறுவனம் முகாமுக்கு வந்து தொல்லைதரும் கரடிகளை தொடர்ந்து கொன்றுவந்தன.1960 மற்றும் 1972 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 200 கரடிகள் கொல்லப்பட்டன.[117] புங்காவிற்கு வருபவர்களுக்கு இப்போது சரியான உணவு சேகரிப்பு முறை பற்றி கற்றுத்தரப்படுகிறது.

நிர்வாகத்தின் வருவாயை அதிகரிக்க, கையௌட்டீ (coyote), நரி, லின்க்ஸ் (lynx), மலைச் சிங்கம் (mountain lion) மற்றும் உல்வரீன் (wolverine) போன்ற வேட்டையாடும் மிருகங்களைக் கொன்று அவற்றின் இழைகளைக் கொண்டு வருவாய் ஈட்டினர்,[118] இப்பழக்கம் 1925 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இருப்பினும் வேட்டையாடும் மிருகங்களைக் கட்டுப்படுத்தல் என்பது தொடர்ந்து வந்தது. 1927 ஆம் ஆண்டு மாகாண சிங்க வேட்டைக்காரரால் யோசெமிட்டி பகுதியில் 43 மலைச் சிங்கங்கள் கொல்லப்பட்டன.[114] கூப்பர்'ஸ் ஹாக் (Cooper's hawk) மற்றும் ஷார்ப் ஷைண்டு ஹாக் (sharp-shinned hawk) ஆகியவை உள்ளூரில் இல்லாதவாறு வேட்டையாடப்பட்டன.[114]

பிக் ஹான் ஷீப் என்னும் ஆட்டினம், வேட்டையாடுவதாலும் நோயினாலும் உள்ளூரில் இல்லாமல் அழிந்து போயின. இவ்வினங்கள் பூங்காவின் கிழக்குப் பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.[50] பார்க் சர்விஸ் நிறுவனமும் யோசெமிட்டி நிதியும் பிரெக்ரின் வல்லூறுகளும் (peregrine falcon) கிரேட் கிரே ஆந்தைகளும் (great gray owl) மீண்டும் பெருக உதவின.[100] கிட்டத்தட்ட இனம் அழிந்துபோகும் அளவிற்கு வேட்டையாடப்பட்டு வந்த டூலே எல்க் (Tule elk) மான்கள், கிழக்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓவன்ஸ் பள்ளத்தாக்கிற்கு நகர்த்தப்படும் முன்பு யோசெமிட்டியின் ஒரு பாதுகாப்பிடத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டன.[117]

குறிப்புகள்

தொகு
  1. NPS 1989, ப. 102.
  2. Wuerthner 1994, ப. 12–13.
  3. [2]
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Wuerthner 1994, ப. 13.
  5. Wuerthner 1994, ப. 14–17.
  6. 6.0 6.1 Greene 1987, ப. 57.
  7. 7.0 7.1 7.2 7.3 Runte 1990, Chapter 1.
  8. Wuerthner 1994, ப. 12.
  9. 9.0 9.1 9.2 Schaffer 1999, ப. 45.
  10. 10.0 10.1 Wuerthner 1994, ப. 14.
  11. 11.0 11.1 Kiver 1999, ப. 214.
  12. 12.0 12.1 12.2 Wuerthner 1994, ப. 17.
  13. Schaffer 1999, ப. 45, 46.
  14. 14.0 14.1 Greene 1987, ப. 156.
  15. YNHA contributors (1949). Yosemite Notes, Volumes 28–30. Yosemite Natural History Association. p. 27. {{cite book}}: |author= has generic name (help)
  16. Greene 1987, ப. 100.
  17. Beck, Warren (May 18, 2008). "California and the Indian Wars: Mariposa Indian War, 1850–1851". The California State Military Museum. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  18. 18.0 18.1 18.2 18.3 Harris 1997, ப. 326.
  19. 19.0 19.1 19.2 Schaffer 1999, ப. 46.
  20. 20.0 20.1 20.2 20.3 Greene 1987, ப. 68.
  21. 21.0 21.1 Bunnell, Lafayette (1911). The Discovery of the Yosemite, and the Indian war of 1851, which led to that event. G. W. Gerlicher. p. 69–70.
  22. Greene 1987, ப. 22.
  23. Beeler, Madison Scott (September 1955). "Yosemite and Tamalpais". Names 55 (3): 185–186. http://www.yosemite.ca.us/library/origin_of_word_yosemite.html#beeler. 
  24. Bunnell, Lafayette (1892). The Discovery of the Yosemite (3rd ed.). New York: F.H. Revell Company.
  25. Wuerthner 1994, ப. 21–22.
  26. 26.0 26.1 26.2 26.3 Schaffer 1999, ப. 47.
  27. 27.0 27.1 NPS 1989, ப. 21.
  28. Hutchings, James M. (1862). "Scenes of Wonder and Curiosity in California".
  29. Roney, Rob (Summer/Fall 2002). Celebrating Yosemite. XXXI. National Park Service. http://www.nps.gov/archive/yose/nature/articles/anniversary.htm. 
  30. Schaffer 1999, ப. 47–48.
  31. 31.0 31.1 31.2 31.3 31.4 Runte 1990, Chapter 2.
  32. Greene 1987, ப. 54.
  33. Greene 1987, ப. 134.
  34. 34.0 34.1 NPS 1989, ப. 21, 29, 115.
  35. Wuerthner 1994, ப. 23.
  36. Muir, John (1912). "The Yosemite". New York: The Century Company. LCCN 12011005. {{cite web}}: |chapter= ignored (help)
  37. Schaffer 1999, ப. 48.
  38. 38.0 38.1 Schaffer 1999, ப. 49.
  39. Hutchings, J. M. (1886). In the Heart of the Sierras: The Yo Semite Valley, both Historical and Descriptive; and Scenes by the Way. Oakland, California: Pacific Press. pp. 162–163.
  40. NPS 1989, ப. 57.
  41. 41.0 41.1 Greene 1987, ப. 33.
  42. NPS 1989, ப. 57, 113.
  43. Greene 1987, ப. 200.
  44. Greene 1987, ப. 230.
  45. NPS 1989, ப. 59.
  46. NPS 1989, ப. 112.
  47. 47.0 47.1 NPS 1989, ப. 58.
  48. Greene 1987, ப. 360.
  49. Greene 1987, ப. 362, 364.
  50. 50.0 50.1 Wuerthner 1994, ப. 40.
  51. Greene 1987, ப. 387.
  52. 52.0 52.1 Wuerthner 1994, ப. 27.
  53. Wuerthner 1994, ப. 29.
  54. 54.0 54.1 54.2 54.3 Harris 1997, ப. 327.
  55. 55.0 55.1 Schaffer 1999, ப. 50.
  56. Greene 1987, ப. 590.
  57. Greene 1987, ப. 591.
  58. Runte 1990, Chapter 5.
  59. 59.0 59.1 59.2 Schaffer 1999, ப. 51.
  60. Greene 1987, ப. 242.
  61. "Yosemite National Park Cautions Poachers". National Park Service. October 14, 2008. பார்க்கப்பட்ட நாள் April 18, 2010.
  62. Runte 1990, Chapter 7.
  63. Greene 1987, ப. 160.
  64. Worster, Donald (2008). A Passion for Nature: The Life of John Muir. Oxford University Press. p. 366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195166825.
  65. Greene 1987, ப. 261.
  66. Kiver 1999, ப. 216.
  67. 67.0 67.1 67.2 67.3 67.4 67.5 67.6 Wuerthner 1994, ப. 35.
  68. 68.0 68.1 Starr, Kevin (1996). Endangered Dreams: The Great Depression in California. Oxford: Oxford University Press. p. 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195118025.
  69. 69.0 69.1 Wuerthner 1994, ப. 36.
  70. Wuerthner 1994, ப. 37.
  71. Engineers, American Society of Civil (1916). Transactions of the American Society of Civil Engineers. Vol. 80. New York: American Society of Civil Engineers. p. 132.
  72. 72.0 72.1 72.2 72.3 Schaffer 1999, ப. 52.
  73. NPS 1989, ப. 113.
  74. Greene 1987, ப. 117.
  75. Greene 1987, ப. 527.
  76. Greene 1987, ப. 52.
  77. Greene 1987, ப. 352.
  78. Greene 1987, ப. 353.
  79. NPS 1989, ப. 117.
  80. 80.0 80.1 NPS 1989, ப. 118.
  81. 81.0 81.1 Yosemite National Park: Water Overview, National Park Service. ஜனவரி 2, 2007 தகவலின்படி.
  82. Anderson, Dan E. (2005). "Pioneer Yosemite History Center Online". Yosemite Online. பார்க்கப்பட்ட நாள் May 9, 2010.
  83. Greene 1987, ப. 479, 483, 595.
  84. Greene 1987, ப. 483.
  85. Orsi 1993, ப. 8.
  86. "Recreational Activities – Wilderness (Inyo National Forest)". USDA Forest Service. பார்க்கப்பட்ட நாள் April 18, 2010.
  87. Greene 1987, ப. 435.
  88. Greene 1987, ப. 131.
  89. O'Brien, Bob R. (1999). Our national parks and the search for sustainability. University of Texas Press. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780292760509.
  90. Orsi 1993, ப. 125.
  91. McDowell, Jeanne (January 14, 1991). "Fighting For Yosemite's Future". Time.
  92. "U.S. Picks Concessionaire for Yosemite Park". New York Times. December 18, 1992. http://www.nytimes.com/1992/12/18/us/us-picks-concessionaire-for-yosemite-park.html. 
  93. "Yosemite suspect confesses to 4 killings". Cable News Network. July 27, 1999. http://edition.cnn.com/US/9907/27/yosemite.murder.01/index.html. 
  94. Wieczorek, Gerald F. (1999). Rock falls from Glacier Point above Camp Curry, Yosemite National Park, California. United States Geological Survey. USGS Open-file Report 99-385. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  95. Wuerthner 1994, ப. 44.
  96. 96.0 96.1 96.2 96.3 Wuerthner 1994, ப. 41.
  97. Schaffer 1999, ப. 54.
  98. "Yosemite Valley Plan: The Story and the Process". National Park Service. பார்க்கப்பட்ட நாள் March 27, 2010.
  99. Schaffer 1999, ப. 43.
  100. 100.0 100.1 100.2 Schaffer 1999, ப. 44.
  101. Schaffer 1999, ப. 52, 54.
  102. Greene 1987, ப. 104.
  103. Greene 1987, ப. 332.
  104. Greene 1987, ப. 348.
  105. Kaiser, James (2007). Yosemite: The Complete Guide. Destination Press. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0967890470.
  106. Muhlfeld, Teige (September 17, 2009). "Rock and Ice Magazine: Coffee's Free at Camp 4". பார்க்கப்பட்ட நாள் November 2, 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  107. "Camp 4". Yosemite National Park. பார்க்கப்பட்ட நாள் May 8, 2010.
  108. Wuerthner 1994, ப. 46.
  109. Misuraca, Karen (2006). Insiders' Guide to Yosemite. Guilford, Connecticut: Morris Book Publishing. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7627-4050-7.
  110. Schaffer, Jeffrey P. (2006). Yosemite National Park: A Complete Hikers Guide. Berkeley, California: Wilderness Press. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780899973838.
  111. Johnston, Verna R. (1994). California Forests and Woodlands: A Natural History. Berkeley, California: University of California Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520202481.
  112. "Forest Pests". National Park Service. பார்க்கப்பட்ட நாள் April 18, 2010.
  113. Greene 1987, ப. 303.
  114. 114.0 114.1 114.2 Wuerthner 1994, ப. 38.
  115. 115.0 115.1 "Invasive Plant Management (Yosemite National Park)". National Park Service. பார்க்கப்பட்ட நாள் April 24, 2010.
  116. "Yosemite Mammals". National Park Service. பார்க்கப்பட்ட நாள் May 9, 2010.
  117. 117.0 117.1 117.2 Wuerthner 1994, ப. 39.
  118. Wuerthner 1994, ப. 37–38.

குறிப்புதவிகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு