முத்தாலங்குறிச்சி காமராசு
வாருங்கள்!
வாருங்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
முத்தாலங்குறிச்சி காமராசு
தொகுபடைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு 1.0 முன்னுரை முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் பல இலக்கிய நூல்கள் படைத்துள்ளார். இதுவரை ஆசிரியரின் நூல்கள் எந்த ஆய்வுக்கும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நான் படைக்கும் இந்த ஆய்வுதான் முதல் ஆய்வு ஆகும். எனவே, ஆசிரியரின் வாழ்க்கை குறிப்பு, இலக்கியப் பணி, சமூகச் சிந்தனைகள், பட்டங்கள், விருதுகள் ஆகியவை இவ்வியலில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 1.1 பிறப்பும் வளர்ப்பும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா, முத்தாலங்குறிச்சி எனும் தாமிரபரணிக்கரைக் கிராமத்தில் திரு. சங்கரசுப்பு& திருமதி சொர்ணம்மாள் தம்பதிக்கு இவர் பிறந்தார். பெற்றோருக்கு இவர் பதின்மூன்றாவது குழந்தையாவார். 1.2 பெயர்க்காரணம் 1967&ல் அப்போதைய முதல்வர் மாண்புமிகு திரு.காமராஜர் அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது இவரது குடும்பத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தனர். எனவே அவரது நினைவாக காமராஜ் என்று பெயர் வைத்தனர்.
1.3 தாமிரபரணிக் கரையில் இருந்து சினிமா வரை தனது துவக்கப் பள்ளிப் படிப்பை முத்தாலங்குறிச்சி புனித வளன் துவக்கப்பள்ளியில் படித்தார். 1978 ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பஸ் கொண்டு வரும் முயற்சியில் இவர் தந்தை ஈடுபட்டார். அந்தச் சமயத்தில் தினமும் 2 டிக்கட் இருந்தால் மட்டும் பஸ் விடுவோம் என்று நிறுவன அதிபர் கூறிய காரணத்தினால் இவரை 6 ஆவது வகுப்பு படிக்க பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்பு 7 முதல் 10 ஆவது வகுப்பு வரை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் இவரது படிப்புத் தொடர்ந்தது. மேற்படிப்புப் படிக்க போதிய வசதி இல்லாதக் காரணத்தினால், பாளையங்கோட்டை சென்று படிக்க இயலாமல் போய்விட்டது. எனவே மேல்நிலைப்பள்ளி படிப்பை கருங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் படித்து முடித்தார். அப்போது தினமும் 6 கிலோ மீட்டர் தாமிபரணி ஆற்றங்கரை வழியாகவும் அடர்ந்த காடு வழியாகவும் நடந்து சென்று கல்வி பயின்றார். 1.4 எழுத்தாளராக அறிமுகம் 6.3.1987& ல் ‘தேவி’ வார இதழில் துணுக்கு எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின் மும்பைக்குச் சென்று வேலைச் செய்தார். அப்போது அங்குள்ள ‘மராத்திய முரசு’, ‘போல்டு இந்தியா’ ஆகிய பத்திரிக்கையில் சிறுகதை எழுதினார்.தொடர்ந்து கிராமத்தில் செங்கல்சூளையில் வேலை பார்க்கும் போது நெல்லை வானொலி வாசகரானார். அதில் நாடக நடிகராக முயற்சி செய்தபோது குரல்வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். விடாமுயற்சியால் நெல்லை வானொலியில் ‘நமக்குள்ளே’ பகுதிக்கு கடிதம் எழுதினார். பின் வாசகராகவே வானொலியில் ஒலிபரப்பாகும் இளையபாரதம் நிகழ்ச்சியில் உரை, சிறுகதை எழுதிப் படித்தார். 3.10.1988 அன்று இவரது ‘குருவை மிஞ்சிய சீடர்’ என்னும் உரை அறிமுகமானது அதன்பின் 15 நிமிட நாடகம் ‘கண்டிசன் கண்டிசன்’ என்ற நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து அரை மணி நேர நாடகம் எழுதி, 1 மணி நேர நாடகம் எழுதும் எழுத்தாளராக உயர்ந்துள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் (27.6.2010) நடந்த போது ‘என்று தணியும் இந்த தாகம்’ என்னும் 1 மணி நேர நாடகம், அனைத்து வானொலியிலும் ஒலிபரப்பானது. இவரது நாடகமான ‘ரோபோ மருமகள்’ என்னும் அறிவியல் நாடகம் 7.10.2009 மும், ‘மனம் சொல்லும் மௌனம்’ என்னும் நாடகமும் ,நாடக விழா நாடகங்களில் நெல்லை வானொலி நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பானது. இவர் ஆரம்பக்காலத்தில் தனியார் மற்றும் அரசுப் பேருந்தில் நடத்துனராக 1988 முதல் 1995 வரை பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ மணிநாடாரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். இவ்வேளையில் கிடைத்த அனுபவத்தின் பிரதிபளிப்பு இவர் நாவல் , சிறுகதை, கட்டுரை மற்றும் நூலில் பல பரிணாமங்களுடன் தொடர்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் தினகரன், தமிழ்முரசு, தினத்தந்தி, தினமலர், மராத்தி முரசு, போல்டு இந்தியா, மும்பைத் தமிழ்டைம்ஸ், வணக்கம் மும்பை, சான்றோர் மலர், ஆல் இந்தியா ரேடியோ, நாடன் குரலோசை, சன்டிவி, வசந்த் டிவி, ஜி தமிழ், தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடகங்களில் சுமார் 2300& க்கு மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். தற்போது செய்துங்கநல்லூரில் பொன்சொர்ணா ஸ்டுடியோ, பொன்சொர்ணா பதிப்பகம் போன்ற தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களுக்கு , செய்துங்கநல்லூர் பகுதி நேர நிருபராக பணியாற்றி வருகிறார். அதோடு தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக பலன், ஆன்மிக மலர், குங்குமம் போன்ற இதழ்களில் எழுதி வருகிறார்.
1.5 நாடகத்துறை
நாடகத்துறை மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம். 2 ஆவது வகுப்பு படிக்கும் போதே முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத்திடலில் இவர் நடித்த நாடகம் அரேங்கேறியது. முதல் நாடகத்தில் ஒரேஒரு வசனம்கூட பேச வெட்கப்பட்டு இடையிலே மேடையைவிட்டு இறங்கியவர். அதனால் ஆசிரியையிடம் குட்டுப்பட்டு பின் எப்படியாவது நாடகத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடக நடிகர் தேர்வுக்குச் சென்றார். அங்கேயும் உச்சரிப்பு சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டப் போது, நாடகம் எழுதினால் என்ன என்று அவருக்கு தோன்றியது. எனவே பல நாடகம் எழுதினார். அந்த நாடகம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள ஆராம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் போன்ற கிராமங்களில் அரங்கேறியுள்ளது. சில நாடகத்தில் கதாநாயகனாகவும் முத்தாலங்குறிச்சியில் நடந்த இரு நாடகத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். வசந்த் டிவியில் திருநெல்வேலி ,தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் ‘நெல்லை மண் பேசும் சரித்திரம்’ என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினார். பின் அந்த அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து தென்பாண்டிச் சீமையிலே பாகம் &1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2 என இரண்டு 1000 பக்கம் நூலை எழுதியவர். இதில் இரண்டாவது நூல் நெல்லை கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் நெல்லை புத்தகக் கண்காட்சியில் 22.6.201& ல் வெளியானது. முதல் நூல் உலகளவில் நடந்த நூல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ஜி தமிழ் டிவியில் ‘நம்பினால் நம்புங்கள்’ போன்ற தொலைக்காட்சித் தொடரில் பணிபுரிந்து வருகிறார். எழுத்துத் துறையில்30&ஆம் ஆண்டை இந்த ஆண்டு கடக்கிறார். இந்த ஆண்டு இவருக்கு 50 வயது. எனவே இந்த ஆண்டு அவரது 50 ஆவது நூலை கடக்கத் திட்டமிட்டுள்ளார். விகடன், சூரியன், சைவசித்தாந்த நூல் பதிப்புக் கழகம், காவ்யா உள்பட முன்னணி பதிப்பகத்தில் இருந்து இவரது நூல் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய தலைத்தாமிரபரணி என்னும் 950 பக்கங்கள் கொண்ட நூல் தாமிரபரணி வரலாற்றில் மிகப்பெரிய எளிய தமிழ் நூல். 1.6 சினிமாத்துறை
கிராமங்களில் நாடகம் நடிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. நடிகரும், செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவருமான டாக்டர் ஏ.வி.ஏ.கஸாலி இவருடைய நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்து வருகிறார். அதற்குமுன்பாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நடிகரும் இயக்குனருமான திரு.சேரன் அவர்கள் தயாரித்து, நடிகை திருமதி ரோகிணி அவர்கள் இயக்கிய ‘அப்பாவின் மீசை’ என்ற திரைப்படத்தில் முதன் முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ளார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் முத்துநகர் இயக்குனர் திரு.கே.எஸ். தங்கசாமி அவர்கள் இயக்கத்தில் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் ‘நெல்லை சீமையிது’ என்ற பாடலில் திருநெல்வேலியின் பெருமையினை பத்தமடை பாயி.... எனத் தொடங்கி...இன்னும் நிறைய விஷயம் சொல்லலை..’ என 12 வரிகளுக்குக் குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வந்து இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
இராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவரது நண்பர் தம்பி இப்ராகிம் அவர்கள் இயக்கிய ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்னும் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்துள்ளார். அந்தப் படமும் வெளி வந்து சிறப்பாக ஓடியது. இவரது இயக்கத்தில் ‘பொருநை சுடர்’ என்ற ஆவணப் படம் வெளிவந்துள்ளது. கௌசானல் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த ஆவணப்படத்தினை திருஇருதய சகோதரர்கள் தயாரித்திருந்தனர். எதிர்காலத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வரலாற்றை முழுமையாகத் தொகுக்க வேண்டும் என்பதே இவரது ஆசை. தற்போது எழுதிய நூல்கள் & 50 தொகுத்த மலர்கள் & 28
நாடகங்கள் & 43
தொடர்கள் & 36 வாங்கிய விருதுகள் & 13 நடித்த திரைப்படங்கள் & 3 இதுவரை இவர் எழுதிய படைப்புகள் & 2300
1.6.1 இலக்கியப் படைப்பு வெளிவருதல் தமிழில் இலக்கிய நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என விரும்பினார். தனது எழுத்தார்வத்தின் காரணமாக பல இலக்கியங்களை படைத்துள்ளார்.
‘கண்ணாடி மாப்பிள்ளை’ ‘என்னுயிரே விட்டுக் கொடு’ ‘கொன்றால் தான் விடியும்’ மற்றும் பல.... 1.6.2 வரலாற்று நகல் ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்பொருள் ஆய்வில் பங்கு கொண்டவர். மேலும் தாமிரபரணி நதியின் முழுமையான வரலாற்றைத் தொகுக்கும் பொருட்டுத் தாமிரபரணி பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறார். ‘திருநெல்வேலி மாவட்டம்’ என்னும் தலைப்பில் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட நூல் எழுதி வருகிறார். 1.6.3 பெண்களுக்கு ஆதரவு பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்கள் பங்குகொள்ள வேண்டும். பெண் உரிமைக்கு எதிராக ஆண்கள் நிற்கக் கூடாது என்ற கருத்தைக் கொண்டவர். 1.7 கலை இலக்கியப்பணி 3.10.1988&ல் ‘குருவை மிஞ்சிய சீடர்’ என்றத் தலைப்பில் நாடகம் எழுதினார். நெல்லை வானொலியின் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சிக்காக அதிகம் எழுத ஆரம்பித்தார். தான் எழுதிய நாடகத்தில் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். ஆராம்பண்ணை கிராமத்தில், 1991--&ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘மாமனின் காதலி’ என்ற நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தயார் செய்து வைத்த நபர் வராததால் அந்த பாத்திரத்தை இவரே ஏற்று நடித்தார். ஜோடியாக நடித்தப் பெண் இவரை பாராட்டினார். நெல்லை தினகரன் நாளிதழில் பகுதி நேர நிருபராகவும், பேருந்து நடத்துனராகவும், வானொலி பேச்சாளராகவும் அவருடைய பணி தொடர்ந்தது. 1.8 சமூகச் சிந்தனை மக்கள் முன்னேற வேண்டும் என்னும் சமூக சிந்தனைக் கொண்ட இவர் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில் எப்போதும் முன் நிற்பார். 1.8.1 பிச்சை எடுத்தல் பிச்சை எடுப்பதால் மக்கள் சோம்பேறிகளாக அலைகிறார்கள் என்பதை உறுதிபடக் கூறுகிறார். ஏனென்றால் மக்களுக்கு இவர்களால் பெரும் இடையூறாக இருப்பதாக சாடுகிறார். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டைப் பிச்சைக்கார நாடு என்று எண்ணிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளார். இவர் எழுதிய ‘கொன்றால் தான் விடியும்’ என்ற நாவலில், ‘இந்திய நலம் விரும்பி’ என்பவர் பிச்சைக்காரர்களை கொல்வதன் மூலம் இந்தக் கருத்தைக் காண முடிகிறது. 1.8.2 லஞ்சத்தை ஒழித்தல் லஞ்சம் வாங்குபவர் நாட்டில் இருக்கக் கூடாது. அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றக் கருத்தைக் கொண்டுள்ளார். இந்த கருத்தை ‘கொன்றால் தான் விடியும்’ நாவலில் லஞ்சம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதன் மூலம் அறியலாம். 1.8.3 விபச்சாரத்தை ஒழித்தல் நாட்டிலுள்ள பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக இன்று விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது. இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களைத் திருத்த வேண்டும் என்றக் கருத்தை இவர் கொண்டுள்ளார். ‘கொன்றால் தான் விடியும்’ நாவலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளப் பெண்ணைப் பொது இடத்தில் கொல்வதன் மூலம் இந்தக் கருத்தை அறிய முடிகிறது. 1.8.4 கல்வி தன்னிடம் வரும் விவரமறியாப் பெற்றோருக்கு, கல்வியின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கத் தூண்டுவார். 1.8.5 இவர் எழுதிய நூல்கள் விவரம் வருமாறு 1.வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள்--& சைவசித்தாந்த நூல் பதிப்பு (நூலகம் ஆணை)
2.கரிசல் காட்டுக் கதைகள், (ஒரு சிறுகதை மட்டும்) புத்தகப் பூங்கா
3. கொன்றால் தான் விடியும் ( நாவல்)
&காவ்யா பதிப்பகம்
4. பொருநைப் பூக்கள் & காவ்யா பதிப்பகம் “” 5. பொதிகை மலை அற்புதங்கள் & காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை& 2 ஆவது பதிப்பு )
6. தாமிரபரணிக் கரையினிலே & விகடன் பிரசுரம்
( இரண்டாவது பதிப்பு)
7. தலைத்தாமிரபரணி ,(950 பக்கம்) & காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை& இரண்டாவது பதிப்பு)
8. என் உயிரே விட்டுக்கொடு, ( நாவல்) & காவ்யா பதிப்பகம்
9. தாமிரபரணிக் கரையில் சித்தர்கள் &
சைவ சித்தாந்தநூல் பதிப்பு ( இரண்டாவது பதிப்பு)
10.என் கிராமத்தின் கதை &
பொன்சொர்ணா பதிப்பகம்
11. நம்ம ஊரு அதிசயம் & பொன் சொர்ணா பதிப்பகம்
(மூவாயிரம் படிகள்)
12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் & காவ்யா பதிப்பகம்
13. நெல்லை வைணவத் தலங்கள் & காவ்யா பதிப்பகம்
14. நெல்லை சைவக்கோயில்கள் & காவ்யா பதிப்பகம் 15. சீவலப்பேரி சுடலை & காவ்யா பதிப்பகம்
(நூலகம் ஆணை & இரண்டாவது பதிப்பு)
16. நெல்லைப் பெண் தெய்வங்கள்( ஒரு கட்டுரை மட்டும்)
& காவ்யா பதிப்பகம்
17. பனி மலையும் அபூர்வக் கண்டமும் &
காவ்யா பதிப்பகம்
18. நெல்லைத் துறைமுகங்கள் & காவ்யா பதிப்பகம்
19. கண்ணாடி மாப்பிள்ளை ( சிறுகதைதொகுதி)
& காவ்யா பதிப்பகம்
20. பாலை வனத்தில் ஒரு பசுஞ் சோலை &
பொன்சொர்ணா பதிப்பகம்
21. தெற்குக்கள்ளிகுளம் பனிமயமாதா &
பொன்சொர்ணா பதிப்பகம்
22. ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள் &
பொன்சொர்ணா பதிப்பகம்
23. ஸ்ரீபெரும்படை சாஸ்தா வரலாறு &
பொன்சொர்ணா பதிப்பகம்
24. தரணிபோற்றும் பரணி நதி &
பொன்சொர்ணா பதிப்பகம்
25. சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகைமலை
& ஆனந்த விகடன் (நூலகம் ஆணை) ( ஆறாவது பதிப்பு)
26. தென்பாண்டிச்சீமையிலே பாகம் &1 & காவ்யா பதிப்பகம் 27. தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2 &
காவ்யா பதிப்பகம்
28. நெல்லை ஜமீன்கள் & ஆனந்த விகடன்
( நான்காவது பதிப்பு)
29. நெல்லை நாட்டுப்புறக்கலைஞர்கள் &
காவ்யா பதிப்பகம்
30. ஸ்ரீகுணவதியம்மன் வரலாறு (தமிழ் & ஆங்கிலம்)
& பொன்சொர்ணா பதிப்பகம்
31. அருட்திரு லூர்து ராஜா அடிகளார் &
பொன்சொர்ணா பதிப்பகம்
32. குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு &
பொன்சொர்ணா பதிப்பகம்
33. செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா &
பொன்சொர்ணா பதிப்பகம்
34. தென்பாண்டிச்சீமை சில சமுதாயக்குறிப்புகள் &
காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை)
35. அத்ரி மலை யாத்திரை &
சூரியன் பதிப்பகம் (இரண்டாவது பதிப்பு)
36. முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்,
( தொகுப்பாசிரியர் பே. சுடலைமணிச்செல்வன்) & காவ்யா பதிப்பகம்
37. தோரணமலை யாத்திரை & ( இரண்டாவது பதிப்பகம்)
பொன்சொர்ணா பதிப்பகம்
38. குளத்தூர் ஜமீன் கதை & காவ்யா பதிப்பகம் 39. சேத்தூர் ஜமீன் கதை & காவ்யா பதிப்பகம் 40 . நெல்லை வரலாற்று சுவடுகள் & காவ்யா பதிப்பகம் 41. எனது பயணங்கள் & காவ்யா பதிப்பகம் 42. சிங்கம்பட்டி ஜமீன் கதை & காவ்யா பதிப்பகம் 43. நெல்லைக்கோயில்கள் & காவ்யா பதிப்பகம் 44. தரணி போற்றும் பரணி நதி & பொன்சொர்ணா பதிப்பகம்
உருவாக்கிய நகர் மலர்கள்
1. 7.6.1999&ல் செய்துங்கநல்லூர் சிறப்பு மலர் & தமிழ்முரசு மாலை நாளிதழ் 2. 11.10.1999 &ல் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய
உள்ளாட்சி மலர் & தினகரன் நாளிதழ்
3. 12.10.1999&ல் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய
உள்ளாட்சி மலர்& தினகரன் நாளிதழ்
4. 27.10.1999&ல் வல்லநாடு சிறப்பு மலர் & தமிழ்முரசு 5. 10.1.2000 &ல் முறப்பநாடு மலர் & தமிழ்முரசு 6. 26.2.2000 &ல் கருங்குளம் நகர சிறப்பு மலர் & தமிழ்முரசு 7. 15.10.2001 &ல் முத்தாலங்குறிச்சி சிறப்பு மலர் & தமிழ்முரசு 8. 4.10.2001 &ல் செய்துங்கநல்லூர் நகர சிறப்பு மலர்& தமிழ் முரசு 9. 27.11.2002 &ல் தூத்துக்குடி மாவட்ட
ஆலயமலர் நூல் & தமிழ்முரசு
10. 28.10.2002 &ல் நெல்லை மாவட்ட
ஆலய மலர் நூல் & தமிழ் முரசு
11. 17.1.2003 &ல் செய்துங்கநல்லூர் சிறப்பு மலர் &2 &
தமிழ் முரசு
12. 12.3.2003 &ல் அம்பை நகர சிறப்பு மலர் & தமிழ் முரசு 13. 14.3.2003 &ல் முதல்வர் ஜெயலலிதா
கால்வாய் கிராமத்துக்கு வருகை சிறப்பு மலர்& தமிழ்முரசு
14. 9.12.2003 &ல் சேரகுளம் &இராமனுஜம்புதூர்
சிறப்பு மலர் & தமிழ் முரசு
15. 16.10.2004 &ல் கருங்குளம் கருட சேவை &
தமிழ் முரசு
16. 7.1.2005 &ல் தமிழ் முரசு பொங்கல் மலர் , 17. 28.2.2005 &ல் செய்துங்கநல்லூர் நகர மலர் &3 &
தமிழ் முரசு
18. 24.6.2005 &ல் சோமசுந்தரவிநாயகர்
கோயில் கும்பாபிஷேக மலர் ,
19. 22.6.2005 &ல் முதல்வர் ஜெயலலிதா
நெல்லை வருகை சிறப்பு மலர்& மக்கள் குரல் நாளிதழ்
20. 24.11.2005 &ல் தீபாவளி மலர்& தமிழ்முரசு 21. 5.8.2011 &ல் கள்ளிகுளம் பனி மலர் & 2011 22. 31.07 &ல் உலகத்தமிழர் மாநாடு & நாகர்கோவில் 23. 25.12.2004 &ல் கிறிஸ்மஸ் மலர் & தினகரன் 24. 10.3.2004 &ல் வல்லநாடு சாது சிதம்பர
சுவாமிகள் வரலாறு &தமிழ்முரசு
25. 13.1.2012 &ல் பொங்கல் மலர் & தமிழ்முரசு 26. சதயவிழா &2010 இராச ராச சோழ தேவேந்திரன்
1025 ஆம் ஆண்டு விழா மலரில் காமராசு கட்டுரை
27. இந்திர விழா 2011 &ல் மலரில் கட்டுரை 28. செய்துங்கநல்லூர் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மலர் 29. ச.வே. சு அவர்களின் சிறப்பு மலர் கட்டுரை
வானொலி மற்றும் மேடை நாடகங்கள்
1. 14.10.1995 &ல் முடிச்சுமேலே முடிச்சு ,
மேடைநாடகம் , வெட்டிக்குளம்
2. 11.12.1996 &ல் கலங்க வேண்டாம்,
ஆல் இந்தியா ரேடியோ
3. 23.5.1996 &ல் வடதுருவம் தென் துருவம் ,
ஆல் இந்தியா ரேடியோ
4. 15.11.1994 &ல் நம்ம பஞ்சாயத்து, 5. 29.4.1997 &ல் பாதை தெரியுது , 6. 16.1.1998 &ல் கண்மணியின் காதலன் , வல்லக்குளம் 7. 17.9.1998 &ல் கட்டபொம்மனும் கவிராயரும்,
ஆல் இந்தியா ரேடியோ (இந்த நாடகம் ஐந்து முறை மறு ஒலிப்பு செய்யப்பட்டுள்ளது. 31.10.2003, 30.11.2001, 8.1.2002, 3.10.2002, 29.5.2002)
8. 30.9.2001 & ல் தங்கையின் வாழ்வு ,
மல்லல் புதுக்குளம் மேடை நாடகம்
9. 12.6.2002 & ல் தெரு முனை நாடகம் ,
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ( கொங்கந்தான் பாறை , தருவை)
10. 4.9.2002 & ல் பெண்ணின் பெருமை ,
மல்லல் புதுக்குளம்
11. 12.12.2003 & ல் சட்டாம் பிள்ளை பேரன் ,
ஆல் இந்தியா ரேடியோ (மறு ஒலிபரப்பு 23.4.2004)
12. 6.9.2006 & ல் எங்க வீட்டு மருமகள் ,
மல்லல் புதுக்குளம்
13. 27.6.2006 & ல் என்று தணியும் இந்த தாகம் ,
ஆல் இந்தியா ரேடியோ
14. 14.1.2009 & ல் ரோபா மருமகள்,
மாவடிப்பண்ணை
15. நவம்பர் 2009 & ல் ரோபா மருமகள்,
சாத்தான்குளம்
16. அக்டோபர் 2008 & ல் ரோபா மருமகள் ,
வேப்பங்காடு
17. 31.8.2005 & ல் கன்னடியன் கால்வாய்,
ஆல் இந்தியா ரேடியோ
18. 14.1.2005 & ல் எங்களுக்கும் காலம் வரும்,
மாவடிப்பண்ணை,
19. 30. & ல் எங்களுக்கும் காலம் வரும் , ஆல் இந்தியா ரேடியோ 20. 16.3. & ல் கடையநல்லூர் , ஆல் இந்திய ரேடியோ 21. 15.8 & ல் நாடகம் பண்டார புரம் 22. 25.5.1992 & ல் கண்டிசன் கண்டிசன்,
ஆல் இந்தியா ரேடியோ
23. 3.8.1990 & ல் மேடை நாடகம்,
ஆராம்பண்ணை
24. 7.1.1991 & ல் மாமனின் காதலி ,
ஆராம்பண்ணை
25. 14.5.1992 & ல் அண்ணி என் தெய்வம்,
வல்லக்குளம்
26. 14.10.1992 & ல் தங்கையின் வாழ்வு ,
புதுக்குளம்
27. 27.7.1992 & ல் உயிர் தியாகம்,
அரசர்குளம்
28. 10.5.1992 & ல் கண்டிசன் கண்டிசன் ,
நேயர் மன்றம்
29. 6.2.1991 & ல் மாமனின் காதலி,
வல்லக்குளம்
30. 16.1.1993 & ல் தொழிலை மதிப்போம்,
ஆல் இந்தியா ரேடியோ
31. 2.4.1991 & ல் கண்டிசன் கண்டிசன் ,
ஆல் இந்தியா ரேடியோ
32. நீதியின் நிழல் , ( கதாநாயகி ) முத்தாலங்குறிச்சி 33. மனிதரில் மாணிக்கம், (கதாநாயகி)
முத்தாலங்குறிச்சி
34. 5.2.1995 & ல் நிறம் மாறும் உறவுகள் ,
ஆல் இந்தியா ரேடியோ
35. 3.2.1995 & ல் மீனுவுக்கு கண் தொறந்தாச்சு ,
ஆல் இந்தியா ரேடியோ
36. 25.3.1995 & ல் மீனுவுக்கு கண் தொறந்தாச்சு,
எம்.எம்.ஸ்கூல்
37. 25.3.1995 & ல் ஆட்டோவில் வந்த வரன் ,
ஆல் இந்தியா ரேடியோ
38. 3.8.1995 & ல் திருந்திய பின் வந்த விளைவு ,
ஆல் இந்தியா ரேடியோ
39. 6.9.2006 & ல் எங்கள் வீட்டு மருமகள்,
புதுக்குளம்
40. 17.3.1906 & ல் முடிச்சு மேலே முடிச்சு,
ஆல் இந்தியா ரேடியோ ( மறு ஒலிபரப்பு &14.1.2006)
41. கஞ்சன் தாதன்குளம்
42. கஞ்சமாமா ஆல் இந்தியா ரேடியோ 43. மனம் சொல்லும் மௌனம் ,
ஆல் இந்தியா ரேடியோ(நாடகவிழா நாடகம்)
பல்வேறு ஊடகங்களில் வெளி வந்த தொடர்கள்
1. 5.5.11 நெல்லை மண்பேசும் சரித்திரம் , 75 வாரம்
வசந்த் டிவி
2. 3.2011 நடராஜரின் பஞ்ச தலங்கள் , 5 மாதம்
ஆன்மிக பலன்(வாரமிருமுறை)
3. ஏப் 2010 நவதிருப்பதி , 9 மாதம்
ஆன்மிகபலன்(வாரமிருமுறை)
4. 15&18.10.2010 நவதிருப்பதி , ஆலயதரிசனம்
வசந்த் டிவி(வாரமிருமுறை)
5. 30&31.10.2010 பொதிகை மலை புலன் விசாரணை,
வசந்த் டிவி(வாரமிருமுறை)
6. 7&8.8.2010 சங்குமுகம் புலன் விசாரணை,
வசந்த் டிவி(வாரமிருமுறை)
7. 4.9.2009 & ல் தாமிரபரணிகரையினிலே, 13 வாரம்
சக்தி விகடன்(மாதமிருமுறை)
8. ஜீலை 2009 நவகயிலாயம் , 9 மாதம்
ஆன்மிகபலன்(மாதமிருமுறை)
9. 18.7.2009 & ல் சொரிமுத்து அய்யனார் , 6 நாள்
கரன்டிவி
10. 29.7.2007 & ல் அரியநாயகி புரம் , 3 வாரம்
வீரகேசரி இலங்கை
11. 6.5.2007 & ல் முக்கூடல் முத்துமாலை , 2 வாரம்
வீரகேசரி இலங்கை
12. 15.7.2007 & ல் தாமிரபரணியில் இராமாயண நிகழ்வு, வீரகேசரி இலங்கை 13. 14.1.2007 & ல் நெல்லை பேஜ்ஸஸ்
தொடர் இன்டர் நெட்
14. 20.3.2005 & ல் தாமிரபரணிக் கரையினிலே
தொடர் , தினகரன் நெட்
15. 25.5.2005 & ல் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர்,
தமிழ் முரசு (இரண்டாம் பாகம்)
16. 31.5.2004 & ல் அதிசயம் நிகழும் அண்டார்டிகா ,
12 வாரம் தமிழ் முரசு
17. 27.8.2008 & ல் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர்,
மும்பைத் தமிழ் டைம்ஸ் 229 வாரம்
18. 3.8.2003 & ல் எப்.எம் அறிவிப்பாளர் , 11 நாள்
தினகரன்
19. 25.7.2003 & ல் எப்.எம் அறிவிப்பாளர் , 2 நாள்
தமிழ் முரசு
20. 30.6.2003 & ல் குறுக்குத்துறை அற்புதங்கள் , 2 நாள்
தமிழ் முரசு
21. 23.6.2003 & ல் பொதிகை மலை அற்புதங்கள், 7 நாள்
தமிழ் முரசு
22. 16.3.2003& ல் நதிக்கரையோரத்து அற்புதங்கள் ,180 வாரம்
தமிழ் முரசு (முதல் பாகம்)
23. 27.5.2001 & ல் கொன்றால் தான் விடியும், 30 வாரம்
தமிழ் முரசு
24. முத்தாலங்குறிச்சி 2 நாள் , புலன்விசாரணை
வசந்த் டிவி
25. அத்ரி மலை , 2 நாள் புலன் விசாரணை
வசந்த் டிவி.
26. 10.5.2012 & ல் பொதிகை மலையாத்திரை 2 நாள்,
‘நம்பினால் நம்புங்கள்’ , ஜி தமிழ் டிவி
27. முத்தாலங்குறிச்சியை ஆட்டி வைக்கும் ஆவிகள் ,நிஜம்
சன் டிவி (ஏற்பாடு மட்டும்)
28. வணக்கம் நெல்லை மாத இதழ் ‘வியக்க வைக்கும் நெல்லைச் சீமை’ 29. சித்தர்கள் வரலாறு , & சித்தன் முரசு 30. அத்ரி மலை யாத்திரை , தினகரன் ஆன்மிக மலர்
50 வாரம்
31. மலை நாட்டுத் திருப்பதி புகைப்படக் கலைஞராக,
தினகரன்
32. நம்ம ஊரு தெய்வம், தினகரன் ஆன்மிக மலர்
( புகைப்படக் கலைஞர்)
32. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும் ,
வணக்கம் மும்பை
33. எனது மலைப் பயணம் , சான்றோர் மலர் 33. பூவே புனிதா , நாடான் குரலோசை 34. நதி வெளிப் பயணம் , பயணி மாத இதழ் 35. பிரபலங்களின் நேர்முகம் , காவ்யா காலாண்டு இதழ் 36. ஜமீன் கோயில்கள் , ஆன்மிக பலன் (மாதமிருமுறை)
வாங்கிய விருதுகள்.
1. 2003 & ல் ‘சமூக சேவகர் விருது’ , பாரதி கலை இலக்கிய மன்றம் ஸ்ரீவை 2. 2003 & ல் ‘சமூக சேவகர் விருது’ & சிவாஜி மன்றம்,
ஸ்ரீவைகுண்டம்
3. 2004 & ல் ‘பொருநை புதல்வன்’ , பட்டம்
மும்பைத் தமிழர் பேரவை
4. 9.1.2005 & ல் ‘தமிழ்மாமணி விருது’ ,
மாருதி வழிபாட்டு கழகம் கன்னியாகுமரி
5. 13.11.2005 & ல் ‘நதிக்கரையோரத்து நாயகன் விருது’ ,
சரத் மன்றம்& செய்துங்கநல்லூர்
6. 22.12.2010 & ல் ‘தமிழ்க்கலைசெல்வர்விருது’ ,
திருவாவடுதுறை ஆதினம்
7. 1.1.2011 & ல் ‘சிறந்த எழுத்தாளர் விருது’ ,
பாரதி கலை இலக்கிய மன்றம்
8. 29.1.2012 & ல் ‘எஸ்.டி. ஆதித்தனார் விருது’ ,
தாமிரபரணி & நெல்லை
9. 29.2.2012 & ல் ‘நாட்டுப்புறவியல் மேதை’ ,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
மற்றும் கலைஞர் சங்கம் செய்துங்கநல்லூர் 10. ‘பொருநை செல்வர்’ ,பட்டம் வழங்கியவர் குறிஞ்சி செல்வர் எழுத்தாளர் கோதண்டம்.
11. 27.5.2012 & ல் ‘பதிவுச்செம்மல்’ ,பொதிகைக் கவிஞர் மன்றம் & நெல்லை
12. ‘தென்பாண்டிச்சீமையிலே பாகம்’-----& 1, என்ற நூல் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11 ஆவது ஆய்வு மாநாட்டில் சிறந்த படைப்பாசிரியர் விருது மற்றும் 5 ஆயிரத்திற்கான பொற்கிழியைப் பெற்றது. மேலும் ‘செந்தமிழ் வேந்தர்’ என்ற பட்டத்தினையும் பெற்றது. நாள்.20.07.2013.
13. 27.04.2014 “அண்ணா விருது” காந்திமதியம்மாள் அறக்கட்டளை சென்னை மயிலாப்பூர் சண்முகநாதன் அரங்கம்.
இது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார். எழுத்தாளர் “முத்தாலங்குறிச்சி காமராசு” அவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் தொன்மை, இந்த மண்ணின் சிறப்புகளை விவரிப்பதாக உள்ளது. மேலும் இவர் திருநெல்வேலி மாவட்டம் என்ற பெயரில் 2 ஆயிரம் பக்கத்தில் மிகப்பெரிய நூலை எழுதி வருகிறார். 1.13 முடிவுரை முத்தலாங்குறிச்சி காமராசுவின் பிறப்பு, வளர்ப்பு, இலக்கியப் பணி, பத்திரிகை துறையில் அவருக்கிருந்த நாட்டம், வரலாறுகளை தேடிப்பிடித்து வெளிக்கொணருவதில் அவருக்கு இருக்கும் ஆர்வம், அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவை இவ்வியலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய படைப்புகளில் பெண்ணியம் பற்றிய சிந்தனைகளைக் காண முடிகிறது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டு, சமாளித்து தீர்வு காண முடியும் என்ற கருத்தை அவர் ஆணித்தரமாக வலியுறுத்தவதையும் உணர முடிகிறது.