வாருங்கள்!

வாருங்கள், Prsamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


ராமசாமி தமிழ் விக்கிபீடியாவிற்கு நல்வரவு: தொகு

உங்களின் பங்களிப்புடன் த.வி. மேலும் சிறப்புடன் வளரும். பாஹாய் சமயம் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் நிறைய தகவல்களும் படங்களும் உள்ளன, கவனித்தீர்களா? ஏதும் உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் இயன்றவரை உதவுவோம். --Natkeeran 15:57, 31 மார்ச் 2006 (UTC)

மோசஸ் எதிர் மோசே தொகு

இங்கு மோசே என்பதே சரியானது எபிரேயரான மோசேயின் பெயர் அவர் பேசிய மொழியான எபிரேய மொழியில் מֹשֶׁה என்றவாறு எழுதப்படும் இதன் உச்சரிப்பு ஆங்கிலத்தில் எழுதினால் கிட்டத்தட்ட Moshe என்றவாறு வெரும் இதற்க்கொத்த தமிழ் மோசே என்பதாகும் மேலும் இதையே கிறித்தவ விவிலியத்தில் பயன்படுத்தி வருகின்றார்கள். இசுரேல் என்பது இவ்வாறே இவற்றில் கிரந்த எழுத்துக்களை புகுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்படும்.--Terrance \பேச்சு 04:06, 15 மே 2008 (UTC)Reply

பேச்சுப் பக்கங்களில் கையொப்பம் இட தொகு

இராமசாமி, நீங்கள் பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட, தொகுப்புப் பக்கத்திலே உள்ள பொத்தான்களில் நடுவே 10 ஆவதாக உள்ள   என்னும் பொத்தானை அமுக்கலாம். அல்லது, டில்டா ~ என்னும் நெளிக் குறியை நான்குமுறை இட்டாலும் உங்கள் ஒப்பம் பதிவாகும் (நேரக் குறிப்புகளுடன்).--செல்வா 12:57, 16 மே 2008 (UTC)Reply

கட்டுரைகள் வேண்டல் தொகு

இராமசாமி, உங்களுக்கு மலேசியா நாட்டைப் பற்றியும், கெமேர் மொழி, மலாய் மொழிகள் பற்றியும் தெரியும் என்பதால், அருள்கூர்ந்து அவை பற்றிய கட்டுரைகள் எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் முதல் ஆர்வம் பஃகாய் ஆக இருப்பது உணரக்கூடியதாக உள்ளது. அது பற்றி ஓரளவிற்கு எழுதிய பின்பு, மற்றவற்றைப் பற்றியும் எழுதி உதவுவீர்கள் என நம்புகிறேன். --செல்வா 13:06, 16 மே 2008 (UTC)Reply

நன்றி செல்வா. கம்போடியா குறித்து சிறிது எழுதினேன். ஆனால் இதற்கான திறன் எனக்கு இருக்கின்றதா என தெரியவில்லை. இங்கு சென்று பார்க்கவும்: http://prsamy.blogspot.com/ --prsamy 09:49, 20 மே 2008 (UTC)Reply

நன்றி இராமசாமி. அவ் வலைப்பதிவில் உள்ள சில செய்திகளை இங்கும் இடலாம் (காப்புரிமம் விலக்கித்தர ஒப்புதல் இருந்தால்). கெமேர் மொழியைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களே இங்கு பயன் தருவதாக இருக்கும். அகரவரிசை, முக்கியமான சில சொற்கள், மொழியமைப்பு என்று சில குறிப்புகளை இணைத்து சிறு கட்டுரையாவது எழுதலாம். கெமேர் மொழியில் உள்ள புகழ்பெற்ற இலக்கியம் முதலியன பற்றியும் எழுதலாம். அதாவது கெமேர் மொழி பற்றி ஓரளவிற்கு அறிமுகம் ஆனவர்கள் எழுதுவது நல்லது என்னும் நோக்கில்தான் இவ்வேண்டுகோள். அறிமுகம் இல்லாதவர்களாகிய என்னைப்போல் உள்ளவர்களும், இங்கும் அங்கும் படித்து சில எழுதலாம்தான், ஆனால், அதனைவிட ஓரளவிற்காவது அறிமுகம் உள்ளவர், ஓரளவிற்காவது தொடர்புடையவர் எழுதுவது நல்ல வழிமுறை என்று நினைக்கிறேன். வலைப்பதிவை சுட்டித்தந்தமைக்கு நன்றி.--செல்வா 14:01, 20 மே 2008 (UTC)Reply

செல்வா அவர்களுக்கு, வேண்டியதை அவ்வலைப்பதிவிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினையில்லை. மேற்கொண்டு ஏதாவது விஷயங்கள் தேவைப்பட்டால் தெரியப்படுத்தவும். கெமேர் மொழியைப் பற்றி எழுதலாம் ஆனால் மொழியியல் முறையில் முடியாது. அத்தகுதி எனக்குக் கிடையாது. இவ்விஷயம் குறித்த துணைத் தலைப்புக்களைப் பரிந்துரைத்தால் அவற்றை முடிந்த வரை விரிவுபடுத்த முயலுகிறேன்.--prsamy 09:10, 21 மே 2008 (UTC)Reply

பஹாவுல்லா தொகு

நண்பார் இராமசாமி அவர்களுக்கு, நீங்கள் பேச்சு:பஹாய் சமயம்/முன்வரைவு இல் பஹாவுல்லா பற்றித் தந்த அறிமுகத்தை தனியே பஹாவுல்லா கட்டுரையில் இட்டிருக்கிறேன். இக்கட்டுரையில் இன்னும் தகவல்கள் இணைக்கப்பட வேண்டியிருக்கிறது. நன்றி.--Kanags \பேச்சு 12:13, 28 மே 2008 (UTC)Reply

நண்பரே, சற்று வேலையாய் இருக்கின்றேன். விரைவில் என் பங்கிற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன். --prsamy 12:07, 2 ஜூலை 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prsamy&oldid=284822" இலிருந்து மீள்விக்கப்பட்டது