பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையம்
பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையம் (Applied Economics Research Centre) என்பது பாக்கித்தான் நாட்டின் கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சிந்து அரசாங்கத்தால் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது போர்டு அறக்கட்டளை இந்நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது. அலிகர் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், புகழ்பெற்ற அறிஞர் ரசீத் அகமது சித்திக்கியின் மகனுமான டாக்டர் எக்சான் ரசீத், பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் முதல் நிறுவன இயக்குனர் ஆவார். பேராசிரியர் முனைவர் சமீனா கலீல் தற்போது நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[1]
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 1973 |
பணிப்பாளர் | பேராசிரியர் முனைவர் சமினா கலீல் |
அமைவிடம் | , , |
வளாகம் | கராச்சி பல்கலைக்கழகம் |
சேர்ப்பு | பாக்கித்தான் உயர் கல்வி ஆணையம் |
இணையதளம் | aerc |
ஆரம்பத்தில் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை பயன்பாட்டு அறிவியல் என்ற முதுநிலை பட்டப் படிப்பு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது முதுநிலை பயன்பாட்டு அறிவியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆகிய படிப்புகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. பாக்கித்தானின் மிகப்பெரிய பொருளாதார ஆராய்ச்சி நூலகம் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பாக்கித்தான் மாநில வங்கி ஆகிய நிறுவனங்களின் முழு வெளியீடுகளும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.