பரட்டாங்கு

(பரட்டாங்கு தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரட்டாங்கு (Baratang), அல்லது பரட்டாங்கு தீவு (Baratang Island), இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு அண்ணளவாக 297.6 கிமீ². பெரும் அந்தமான் தீவுக்கூட்டத்தின் முக்கிய தீவுகளில் ஒன்றான இத்தீவின் வடக்கே நடு அந்தமான் தீவு, தெற்கே தெற்கு அந்தமான் தீவு ஆகிய அமைந்துள்ளன. ரிட்ச்சி தீவுக்கூட்டம் கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் இத்தீவின் தெற்கே 100 கிமீ தொலைவில் உள்ளது.

பரட்டாங்கு தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு298 km2 (115 sq mi)
நீளம்28 km (17.4 mi)
அகலம்11 km (6.8 mi)
உயர்ந்த ஏற்றம்76 m (249 ft)
நிர்வாகம்
இந்தியா
ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
பெரிய குடியிருப்புஅடாசிக் (மக். 1,000)
மக்கள்
மக்கள்தொகை4600 (2012)
இனக்குழுக்கள்அந்தமானியர்
பரட்டாங்கில் புதைசேற்று எரிமலை

இந்தியாவிலேயே புதைசேற்று எரிமலைகள் இங்கு தான் உள்ளன. இந்த சேற்று எரிமலைகள் கடைசியாக 2005 ஆம் ஆண்டில் வெடித்தன. அதற்கு முன்னர் 2003 பெப்ரவரி 18 இல் வெடித்தது. உள்ளூரில் எவ்வெரிமலைகளை "ஜால்கி" என அழைக்கின்றனர்.

தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு செயல்முறை எரிமலையான பாரென் தீவு, மற்றும் நார்க்கொண்டம் ஆகிய எரிமலைகள் இங்குள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பரட்டாங்கு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரட்டாங்கு&oldid=3219806" இலிருந்து மீள்விக்கப்பட்டது