பரமேக்காவு பகவதி கோயில்

கேரளாவிலுள்ள இந்துக் கோயில்

பரமேக்காவு பகவதி கோவில் (Paramekkavu Bagavathi Temple) என்பது கேரளாவின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய பகவதி கோவில்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவிலும் கேரளாவிலும் மிகப் பெரிய திருவிழாவான திருச்சூர் பூரத்திற்காக சக்தன் தம்புரான் கோயில்களை "பரமேக்காவு பக்கம்", "திருவம்பாடி பக்கம்" என்று இரண்டு குழுக்களாக நியமித்தார். திருச்சூர் சுவராஜ் சுற்றிலுள்ள பரமேக்காவு பகவதி கோயிலும், சொரனூர் சாலையில் உள்ள திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோயிலும் முதன்மை பங்கேற்பாளர்களால் இந்த இரண்டு குழுக்களுக்கும் தலைமை தாங்கப்படுகிறது. இரண்டு கோவில்களும் கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவில் உள்ளன. திருச்சூர் பூரத்தில் பங்கேற்கும் இரு குழுக்களில் திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோயிலும் ஒன்று. கூடூர் அருகே பரமேக்காவு கோயில் தேவசுவம் வாரியத்திற்குச் சொந்தமான பரமேக்காவு வித்யா மந்திர் என்ற பள்ளி ஒன்று உள்ளது. [1]

பரமேக்காவு பகவதி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
அமைவு:திருச்சூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளம்

சான்றுகள்

தொகு
  1. "Paramekkavu Bhagavathy Temple Thrissur". Guruvayur Online. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-04.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேக்காவு_பகவதி_கோயில்&oldid=3621687" இலிருந்து மீள்விக்கப்பட்டது