பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்
பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (Mutual legal assistance treaty) (சுருக்கமாக:MLAT) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே பொது அல்லது குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சியில் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும். ஒரு பரஸ்பர சட்ட உதவி கோரிக்கை பொதுவாக ஒரு குற்றவியல் வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் போது, அவரை தடுப்புக் காவலில் எடுத்து முறையாக விசாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
சுருக்கம்
தொகுபரஸ்பர சட்ட உதவி ஒப்பதத்தால், நாடுகளுக்கிடையே குற்றவியல் விசாரணைகள் மற்றும் குற்ற வழக்குகளுக்கு ஆதாரங்களைக் கோருவதற்கும், பெறுவதற்கும் வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. சாட்சி அறிக்கைகள் அல்லது ஆவணங்களின் சேவை போன்ற சான்றுகள் அல்லது பிற வகையான சட்ட உதவிகள், ஒரு வெளிநாட்டு இறையாண்மையிடமிருந்து தேவைப்படும்போது, நாடுகள் அந்தந்த காவல்துறை முகமைகள் மூலம் முறைசாரா முறையில் ஒத்துழைக்க முயற்சி செய்யலாம் அல்லது அதற்கு மாற்றாக, பொதுவான கோரிக்கைகள் என குறிப்பிடப்படுவதை நாடலாம்.[1] நாடுகள் பரஸ்பர சட்ட உதவி கோரிக்கைகளை நேரடியாக ஒவ்வொருவருக்குள்ளும் நியமிக்கப்பட்ட மத்திய காவல் முகமையிடம் ஒப்படைப்பது மிகவும் பொதுவானது. இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் நாடுகளுக்கு பரஸ்பர சட்ட உதவி வழங்குவதைக் கட்டாயப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் குற்ற வழக்கில் உள்ள நபர்கள், இடங்கள் மற்றும் பொருட்களை ஆய்வு செய்தல் மற்றும் அடையாளம் காண்பது, குற்றச் செயல்பாட்டின் கருவிகளை அசையாமைக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.
அரசியல் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக அல்லது இரு நாடுகளிலும் சமமான தண்டனைக்குரிய குற்றவியல் சட்டம் இல்லையெனில், உதவியை இரு நாடுகளும் (ஒப்பந்த விவரங்களின்படி) மறுக்கலாம். சில ஒப்பந்தங்கள் மற்ற நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான சட்ட உதவியை ஊக்குவிக்கலாம்.
இரு நாடுகளிலும் உள்ள சட்ட அமலாக்கத்தினரிடையே கூட்டு விசாரணைகள், அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகள், கடிதங்கள் போன்றவற்றின் மூலம், ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, பல நாடுகள் தங்கள் நீதி அமைச்சகங்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு பரஸ்பர சட்ட உதவிகளை வழங்க முடியும்.
இந்தியாவில்
தொகுஇந்தியா 39 நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.[2]இந்தியாவைப் பொறுத்த வரை உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நடுவண் புலனாய்வுச் செயலகம் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்ததிற்கான முகமையாக செயல்படுகிறது.