பரியாயம்
பரியாயம் (Paryaya) என்பது ஒரு மத சடங்காகும். இது ஒவ்வொரு மாற்று ஆண்டிலும் உடுப்பியின் கிருட்டிண மடத்தில் (கிருட்டிணர் கோயில்) நடைபெறுகிறது. கிருட்டிண மடத்தின் பூஜை மற்றும் நிர்வாகம் துவைதத் தத்துவஞானி மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட உடுப்பியின் எட்டு மடங்களின் துறவிகள் மத்தியில் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மடத்திலும் ஒவ்வொரு துறவிக்கும் இரண்டு வருட காலத்திற்கு சுழற்சி மூலம் உடுப்பி கிருட்டிணருக்கு பூஜை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
பரியாயத்தின் போது, கிருட்டிண மடத்தின் ஒரு மடத்தின் துறவியிடமிருந்து மற்றொரு மடத்தின் துறவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொருமுறையும் நடைபெறுகிறது. கடைசியாக 2014 சனவரி 18, அன்று, சோதே மடத்தின் விசுவல்லபட் தீர்த்தரிடமிருந்து கனியூர் மடத்தின் வித்யாவல்லப தீர்த்தருக்கு பூசை மற்றும் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. [1]
பரியாயம் சனவரி 18 அன்று அதிகாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முந்தைய ஆண்டிலிருந்து தொடங்குகின்றன. பொறுப்பேற்கும் தீர்த்தர் தண்டதீர்த்தம் என்ற இடத்திற்குச் சென்று புனித குளத்தில் நீராடி, மரபுப்படி பூசை செய்கிறார். அதிகாலை 3 மணியளவில் அவர் உடுப்பி நகரத்திற்குள் நுழைகிறார். உடுப்பி நகரத்தின் ஜோடுகட்டே என்ற இடத்தில் (வட்ட அலுவலகத்திற்கு அருகில்) இருந்து ஊர்வலம் ஆரம்பிக்கப்படுகிறது. அங்கு பொறுப்பேற்கும் துறவியும் மற்றும் பிற துறவிகளும் கலாச்சார நிகழ்ச்சிகளுடனும், நாடகங்களுடன் பல்லக்கில் கொண்டு செல்லப்படுகிறார்கள். பின்னர் வெளியேறும் துறவியுடன் மடத்திற்குள் நுழைகிறார். அங்கு மடத்தின் நிர்வாகம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. மடத்திற்குள் சர்வஜ்ன பீடத்தில் ஒப்படைக்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளியேரும் துறவி அக்சய பாத்திரம் போன்ற ஒரு பொருளையும், சன்னதியின் சாவியையும் ஒப்படைக்கிறார். ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. பொது மக்களின் நலனுக்காக மடத்தினுள் பொது விழா நடத்தப்படுகிறது. [2]
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 19 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Living Traditions in Contemporary Contexts: The Madhva Matha of Udupi.
வெளி இணைப்புகள்
தொகு- Udupi Paryaya பரணிடப்பட்டது 2012-01-27 at the வந்தவழி இயந்திரம்
- Udupi Shiroor Mutt Paryaya 2010 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Udupi Paryaya 2010 in Times of India பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்
- See South Canara Gazetteer 1894
- Report on Paryaya பரணிடப்பட்டது 2006-05-23 at the வந்தவழி இயந்திரம்
- Paryaya festival[தொடர்பிழந்த இணைப்பு]
- Glimpses of Paryaya பரணிடப்பட்டது 2019-09-13 at the வந்தவழி இயந்திரம்
- The Eight Tulu Monasteries of Udupi