பரிவிராஜக வம்சம்

பரிவிராஜக வம்சம் (Parivrājaka dynasty) பரத கண்டத்தின் தற்கால மத்தியப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிகளை, கி பி ஐந்து முதல் ஆறாம் நூற்றாண்டு முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும். பரிவிராஜக வம்ச மன்னர்கள் குப்தப் பேரரசில் குறுநில மன்னர்களாக விளங்கியவர்கள். [1]

பரிவிராஜக வம்சம் is located in இந்தியா
பரிவிராஜக வம்சம்
பரிவிராஜக வம்சம்
பரிவிராஜக வம்சம்
பரிவிராஜக வம்சம்
பரிவிராஜக வம்சம்
இந்திய வரைபடத்தில் பரிவிராஜக வம்சத்தின் ஆட்சிப் பகுதிகள்

கி பி 475 முதல் கி பி 518 முடிய இப்பகுதியை ஆண்ட பரிவிராஜக வம்சத்தின் இறுதி இரண்டு மன்னர்களான ஹஸ்தின் மற்றும் சம்க்சோபன் பெயர்கள் சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. [2]

பெயர்க் காரணம்

தொகு

பரிவிராஜக எனும் சமசுகிருத சொல்லிற்கு துறவிகள் எனப்படும். பாரத்துவாசர் முனிவரின் கோத்திரத்தில் தோன்றிய இவ்வம்சத்தினரின் சில முன்னோர்கள் துறவிகளாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [3] [4]

பரிவிராஜக வம்ச ஆட்சியாளர்கள்

தொகு

பரிவிராஜக வம்சத்தின் ஆட்சியாளர்கள் பின்வருமாறு::[5]

  • சுசர்மன்
  • தேவாத்தியன்
  • பிரபஞ்சனன்
  • தாமோதரன்
  • ஹஸ்தின் கி பி 475-517
  • சம்க்சோபன் கி பி 518-528

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவிராஜக_வம்சம்&oldid=3563516" இலிருந்து மீள்விக்கப்பட்டது