பரேஷ் மைத்தி
பரேஷ் மைத்தி (Paresh Maity) (பிறப்பு 1965) ஓர் இந்திய ஓவியராவார்.[1] இவர் ஒரு குறுகிய கால தொழில் வாழ்க்கையில் ஒரு சிறந்த ஓவியராக இருந்தார்.[2]
பரேஷ் மைத்தி | |
---|---|
பிறப்பு | 1965 (அகவை 59–60) தம்லக், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அறியப்படுவது | ஓவியர், சிற்பி, புகைப்படக்காரர், திரைப்படத் தயாரிப்பாளர் |
விருதுகள் | பத்மசிறீ (2014) |
வலைத்தளம் | |
pareshmaity |
2014 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபரேஷ் மைத்தி, மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள தம்லக்கில் பிறந்தார். கொல்கத்தாவின் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் நுண்கலைகளில் பட்டம் பெற்ற இவர், புது தில்லி, கலைக் கல்லூரியில் முதுநிலை நுண்கலைகளுடன் தனது வகுப்பில் முதலிடம் பெற்றார்.[4]
இவர், 850 அடிக்கு மேல் நீளமுள்ள இந்தியாவில் மிக நீளமான ஓவியத்தை வரைந்துள்ளார். [5] ஆகஸ்ட் 2010 இல், கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் கடைசி 15 கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட நீர் வண்ண ஓவியங்களுடன் இவரது 55வது தனி நிகழ்ச்சி, ஷேஷ் லேகா (கடைசி எழுத்துக்கள், 1941) , புது தில்லியின் தேசிய கலைக்கூடத்தில் திறக்கப்பட்டது. [6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் கலைஞர் ஜெயசிறீ பர்மனை மணந்தார். தற்போது, புதுதில்லியில் வசித்து வருகிறார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jehangir Art Gallery opens doors for Maity show". http://economictimes.indiatimes.com/opinion/interviews/Jehangir-Art-Gallery-opens-doors-for-Maity-show/articleshow/5187176.cms.
- ↑ www.outlookindia.com | Oarsman's Palette
- ↑ "Padma Awards Announced". Press Information Bureau, Ministry of Home Affairs. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ 4.0 4.1 Profile: Paresh Maity Official Site பரணிடப்பட்டது 27 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Nag, Ashoke. "Painter Paresh Maity's colourful Odyssey at new New Delhi International Airport – The Economic Times". The Times of India. http://economictimes.indiatimes.com/features/the-sunday-et/special-report/Painter-Paresh-Maitys-colourful-Odyssey-at-new-New-Delhi-International-Airport/articleshow/6126110.cms.
- ↑ "Paresh Maity's 55th solo show opens at Delhi's National Gallery of Modern Art". http://articles.economictimes.indiatimes.com/2011-08-17/news/29896716_1_paresh-maity-watercolour-poems.
வெளி இணைப்புகள்
தொகு- Official site பரணிடப்பட்டது 2021-07-16 at the வந்தவழி இயந்திரம்
- World of Paresh Maity, The Tribune, September 10, 2006
- Star power, The Telegraph, April 8, 2006