பரோண்டா சமஸ்தானம்

பரௌந்தா சமஸ்தானம் (Baraundha (also known as Pathar Kachhar), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்னா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1891-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பரௌந்தா இராச்சியம் 904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17,283 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

பரௌந்தா இராச்சியம்
பதர் கச்சார்
बरौंधा रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1169–1950

Coat of arms of பரௌந்தா

சின்னம்

Location of பரௌந்தா
Location of பரௌந்தா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் மத்திய இந்திய முகமை வரைபடத்தில் பரௌந்தா சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1169
 •  இந்திய விடுதலை 1 சனவரி 1950
Population
 •  1891 17,283 
தற்காலத்தில் அங்கம் சத்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
Princely States of India A-J

வரலாறு

தொகு

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது மாகாணத்தின் இது பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் செயல்பட்டது. இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். [1]

மத்திய இந்திய முகமையில் இருந்த பரௌந்தா சமஸ்தானம், 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பரௌந்தா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்னா மாவட்டத்துடன் இணக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Soszynski, Henry. Baraundha. Genealogical Gleanings. Retrieved 2010-05-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோண்டா_சமஸ்தானம்&oldid=3378400" இலிருந்து மீள்விக்கப்பட்டது