பரோலி கோயில்கள்
பரோலி கோயில்கள் (Badoli temples) என்றும் அழைக்கப்படும் பரோலி கோயில் வளாகம் இந்திய மாநிலமான ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் ராவத்பாட்டா நகரிலுள்ள பரோலி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரே சுவர்களுக்கும் எட்டு கோயில்களின் வளாகம் அமைந்துள்ளது; கூடுதலாக 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் ஒரு கோயில் அமைந்துள்ளது. பொ.ச.பத்தாம் நூற்றாண்டு தேதியிட்ட கூர்ஜர பிரதிகார பாணியிலான கோயில் கட்டிடக்கலையில் இவை கட்டப்பட்டுள்ளன [1] ஒன்பது கோயில்களும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பரோலி கோயில் வளாகம் | |
---|---|
கடேசுவரர் மகாதேவன் கோயில், பரோலி கோயில் வளாகம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ராஜஸ்தான் |
மாவட்டம்: | ராவத்பாட்டா நகரம், சித்தோர்கர் |
அமைவு: | பரோலி |
ஆள்கூறுகள்: | 24°57′29″N 75°35′37″E / 24.95806°N 75.59361°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு |
அமைவிடம்
தொகுராவத்பாட்டா நகரத்தின் வெளிப்புற எல்லையில் கோட்டாவின் தென்கிழக்கில் 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவில் உள்ள சம்பல் ஆற்றின் பாறைக் கரைக்கு அருகில் இந்த வளாகம் அமைந்துள்ளது. ஒரு இயற்கை நீரூற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட இவை அரச, கடம்ப, மாம்பழ, நாவல் மரங்கள் அடங்கிய காடுகளின் நடுவில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
வரலாறு
தொகுபரோலி கோயில்களின் வரலாறு மிகவும் தெளிவாக இல்லை என்றாலும், இவை கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் காலத்தில் பொ.ச.10 முதல் 11ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை ராஜஸ்தானின் ஆரம்பகால கோயில் வளாகங்களில் ஒன்றாகும். [1] நடராசரின் செதுக்கப்பட்ட கல் உருவம் பரோலி கோயில் வளாகத்திலிருந்து 1998 இல் திருடப்பட்டது. இது இலண்டனில் ஒரு தனிச் சேகரிப்பாளரிடம் கண்டுபிடிக்கப்பட்டு, சிலை இப்போது மீட்கப்பட்டுள்ளது. [2]
அம்சங்கள்
தொகுகோயில்கள்
தொகுகடேசுவர மகாதேவர் கோயில்
தொகுகடேசுவரர் மகாதேவர் கோயில் இந்த வளாகத்தில் மிக முக்கியமானதும் மிகப்பெரியதும் ஆகும். பிரதான கோயில் கட்டமைப்பில் கர்ப்பக்கிருகமும், முக மண்டபமும் அடங்கும். [1] 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இது ஒரு முழுமையான அமைப்பாக இருந்துள்ளது. இது சிவனை ஐந்து இலிங்கங்களின் வடிவத்தில் சித்தரிக்கிறது. ஒரு இலிங்கம் தலைகீழாக வைக்கப்பட்டுள்ள ஒரு கடத்தைப் (பானை) போல தோன்றுவதால், "கடேசுவரர் கோயில்" என அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் "மகாதேவன்" என்பது சிவனுடைய ம்ற்றொரு சொல். கருவறை ஒரு பெரிய மலரும் தாமரையின் வடிவத்தில் உச்சியைக் கொண்டுள்ளது. இந்த கோவிலில் கருவறைக்கு மேலே நேர்த்தியாக செதுக்கப்பட்ட விமானமும் உள்ளது.
பிள்ளையார் கோயில்
தொகுயானைத் தலைக் கடவுளான பிள்ளையாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதான கோயில் அமைப்பு கற்களால் கட்டப்பட்டாலும், விமானத்தின் மேலதிக அமைப்பு செங்கல்லால் ஆனது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்தில் கருவறையின் கதவுகளில் எந்த அலங்காரமும் இல்லாமல் உள்ளது. விநாயகர் உருவத்தின் கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இசுலாமிய படையெடுப்புக் காலத்தில் இது நடந்திருக்கலாம். [3]
கோயிலின் குளத்திலுள்ள சிவ ஆலயம்
தொகு10 ஆம் நூற்றாண்டில் தேதியிடப்பட்ட இந்த சிவன் கோயில், புனிதக் குளத்தின் நடுவில் ஒரு இலிங்க வடிவில் அமைந்துள்ளது. பஞ்சரத பாணியில் கட்டப்பட்ட இது கிழக்கு நோக்கி உள்ளது. கருவறைக்கு முன்னால் உள்ள வாயில், தூண்களால் கட்டப்பட்ட ஒற்றை வழியாக உள்ளது. [4]
வாமனாவதாரக் கோயில்
தொகு10 வது நூற்றாண்டைச் சேர்ந்த வாமனவதாரக் கோவில் நான்கு கைகளுடன் கூடிய வாமனருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாமனாவதாரம் என்பது விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமாகும். கருவறை ஒரு தட்டையான கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஒரு நுழைவாயில் இருக்கிறது. ஆனால் உச்சியில் எவ்வித வடிவமைப்புமில்லை. [1] [5]
திரிமூர்த்திக் கோயில்
தொகு10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திரிமூர்த்திக் கோயில் ஓரளவு சேதமடைந்துள்ளது. இது கோயில் வளாகத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. நடைமுறையில் கட்டமைப்புகள், கட்டிடக்கலை கூர்ஜர-பிரதிகாரப் பாணியில், ஒரு நேர்த்தியான விமானம், முகமண்டபம், பஞ்சரத பாணி கருவறை ஆகியவற்றை கொண்டிருக்கும் இந்துக் கோயில் கட்டிடக்கலை அமைப்பாகும். இருப்பினும், முக மண்டபம் சேதமடைந்துள்ளது. கருவறையின் நுழைவாயிலின் மேல்பகுதில் நடராசரின் பிம்பம் உள்ளது. இந்தக் கருவறையில் மூன்று தலை சிவன் அல்லது மகேச-மூர்த்தி மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. [6]
அஷ்டமாதா கோயில்
தொகுசப்தகன்னியர் கோவில், மேலும், மகிஷாசுரமர்த்தினி கோவில் என்றழைக்கப்படும் இது கடேசுவரர் மகாதேவன் கோவில் தெற்கே அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சன்னதி 10ஆம் நூற்றாண்டில் பிரதிகாரா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. கல்லில் கட்டப்பட்ட இந்த கோயில் கருவறை, அந்தராளம் முகமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது . [1] [6]
சேசாசியன் கோயில்
தொகுசேசாசியன் கோயில் சேதமடைந்த நிலையில் உள்ள ஒரு கல் கோயிலாகும். இது 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. செவ்வக திட்டத்தில் ஒரு கருவறை உள்ளது. கருவறையின் நுழைவாயிலில் அலங்காரங்கள் எதுவும் இல்லை. [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Ghateshwar Temple". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- ↑ "Natesa sandidol returns to India".
- ↑ "Ganesh Temple". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- ↑ "Shiv Temple and Kund". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- ↑ "Vamanavtar Temple". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- ↑ 6.0 6.1 "Trimurti Temple". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
- ↑ "Sheshashyan Temple, Badoli". Archaeological Survey of India. Archived from the original on 31 July 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.
நூலியல்
தொகு- Lindsay Brown; Amelia Thomas (2008). Rajasthan, Delhi & Agra. Lonely Planet. pp. 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-690-8. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.