பலோடா பஜார்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நடுவில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட

பலோடா பஜார் (Baloda Bazar), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நடுவில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இராய்ப்பூர் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் சிமெண்ட் ஆலைகளின் மையம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 254 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

பலோடா பஜார்
நகரம்
அடைபெயர்(கள்): பலோடா
பலோடா பஜார் is located in சத்தீசுகர்
பலோடா பஜார்
பலோடா பஜார்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோடா பஜார் நகரத்தின் அமைவிடம்
பலோடா பஜார் is located in இந்தியா
பலோடா பஜார்
பலோடா பஜார்
பலோடா பஜார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°40′N 82°10′E / 21.67°N 82.17°E / 21.67; 82.17
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம் பலோடா பஜார்
ஏற்றம்
254 m (833 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்26,632
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, சத்திசுகரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
493332
வாகனப் பதிவுCG-22
இணையதளம்balodabazar.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 18 வார்டுகளும், 5407 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 26,632 ஆகும். அதில் ஆண்கள் 13,481 மற்றும் பெண்கள் 13,151 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,834 மற்றும் 1,509 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.76%, இசுலாமியர் 5.5%, சமணர்கள் 0.66%, கிறித்தவர்கள் 0.88% மற்றும் பிறர் 0.75% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் இந்தி மொழி மற்றும் சத்திசுகரி மொழிகள் பேசப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

balodabazar.gov.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலோடா_பஜார்&oldid=3514551" இலிருந்து மீள்விக்கப்பட்டது