பல்மினிக் அமிலம்
பல்மினிக் அமிலம் (Fulminic acid ) என்பது HCNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். எட்வார்டு சார்லசு ஓவார்டு என்பவர் 1800 ஆம் ஆண்டில் இதனுடைய முதலாவது வெள்ளி உப்பைக் கண்டறிந்தார். பின்னர் 1824 ஆம் ஆண்டில் வோன் இலைபிக் இதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். கரிம வேதியியல் அமிலமான பல்மினிக் அமிலம் சமசயனிக் அமிலத்தினுடைய ஒரு மாற்றியன் ஆகும். ஓராண்டிற்குப் பின்னர் இதனுடைய வெள்ளி உப்பை பிரெடரிக் வோலர்[1][2] கண்டறிந்தார். 1966 ஆம் ஆண்டில்தான் தனி பல்மினிக் அமிலம் தனித்துப் பிரிக்கப்பட்டது[3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஆக்சிடோவசானியமைலிடின்மீத்தேன்
Oxidoazaniumylidynemethane | |
இனங்காட்டிகள் | |
506-85-4 | |
ChEBI | CHEBI:29813 |
ChEMBL | ChEMBL185198 |
ChemSpider | 454715 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 521293 |
| |
பண்புகள் | |
HCNO | |
வாய்ப்பாட்டு எடை | 43.02 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பல்மினிக் அமிலமும் இதனுடைய பல்மினேட்டு உப்புகளும், உதாரணமாக பாதரச பல்மினேட்டு மிகவும் அபாயகரமான சேர்மங்களாகும். பெரும்பாலும் மற்ற வெடிபொருட்களை வெடிக்கத் தூண்டும் தொடக்கநிலை வெடிபொருள்களாக இவை பயன்படுத்தப்படுகின்றன. பல்மினிக் அமிலத்தின் ஆவியும் மிகுந்த நச்சுத்தன்மை மிக்கது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ F. Kurzer (2000). "Fulminic Acid in the History of Organic Chemistry". J. Chem. Educ. 77 (7): 851–857. doi:10.1021/ed077p851. http://jchemed.chem.wisc.edu/journal/Issues/2000/Jul/abs851.html. பார்த்த நாள்: 2015-07-29.
- ↑ F. Kurzer (1999). "The Life and Work of Edward Charles Howard". Annals of Science 56 (2): 113–141. doi:10.1080/000337999296445. https://archive.org/details/sim_annals-of-science_1999-04_56_2/page/113.
- ↑ Beck, W. and Feldl, K. (1966), The Structure of Fulminic Acid, HCNO. Angew. Chem. Int. Ed. Engl., 5: 722–723. எஆசு:10.1002/anie.196607221