பல்மினேட்டு

பல்மினேட்டு (Fulminat) என்பது பல்மினேட்டு அயனியைக் கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். மின்சுமை மற்றும் வினைத்திறன் போன்ற பண்புகளில் பல்மினேட்டு அயனி ஆலசனைப் போலச் செயல்படுகிறது. இதனால் இவற்றை போலி உப்பீனிகள் என்று அழைக்கிறார்கள். அயனியின் இத்தகைய நிலைப்புத்தன்மை இன்மை காரணத்தால் பல்மினேட்டு உப்புகள் உராய்வுணர் வெடிபொருட்களாக உள்ளன, பாதரச(II) பல்மினேட்டு என்ற பாதரச உப்பு நன்கறியப்பட்ட ஒரு உதாரணமாகும். மற்ற வெடிபொருட்களை வெடிக்கத்தூண்டும் முதல்நிலை வெடிபொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி (தனிமம்) , பாதரசம் போன்ற தனிமங்களை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து எத்தனாலுடன் வினைப்படுத்துவதன் மூலம் பல்மினேட்டுகளைத் தயாரிக்கவியலும். இச்சேர்மத்தில் பலவீனமான தனி நைட்ரசன் – ஆக்சிசன் பிணைப்புகள் காணப்படுவதால் இது நிலைப்புத்தன்மையற்றுக் காணப்படுகிறது. நைட்ரசன் மற்றொரு நைட்ரசன் அணுவுடன் மிக எளிமையாகச் சேர்ந்து நிலைப்புத்தன்மை கொண்ட முப்பிணைப்பை உருவாக்கிக் கொண்டு வளிமமாக உருவாகிவிடுகிறது.

பல்மினேட்டு அயனியின் அமைப்பு வாய்ப்பாடு

பல்மினேட்டு ஆங்கில உச்சரிப்பு

வரலாறு

தொகு

பல்மினேட்டுகளை 1800 ஆம் ஆண்டில் எட்வர்டு சார்லசு ஓவார்டு கண்டறிந்தார்[1][2][3]. சுடுகலன்களில் இசுக்காட்லாந்து அமைச்சர் ஏ.யெ.பார்சித் முதன்முதலாக பல்மினேட்டை வெடிபொருளாக உபயோகிக்கும் செய்முறையை செய்துக்காட்டினார். ஒரு சிறிய கொள்கலனில் பாதரச பல்மினேட்டை நிரப்பி வைத்துக்கொள்ளும் அமைப்பான இத்தகைய தன்னுடைய கைத்துப்பாக்கிக்கு 1807 ஆம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார்[4][5]. பின்னர், யோசுவா சாவ் இதனுடைய பயன்பாட்டை உலோகப் பெட்டகங்களில் அடைத்து வெடிக்கும் கருவியாக உருவாக்கினார். ஆனால் இவர் 1822 ஆம் ஆண்டுவரை அதற்கு காப்புரிமையைப் பெறவில்லை.

1820 ஆம் ஆண்டில் கரிம வேதியியலாளர் யசுடசு இலைபிக் வெள்ளி பல்மினேட்டையும் (Ag-CNO) பிரெடரிக் வோலர் வெள்ளி சயனேட்டையும் (Ag-OCN) கண்டறிந்தனர். இவ்விரு சேர்மங்களின் பகுதிப்பொருட்களும் ஒன்றாகவே இருப்பதால் காரசாரமான சர்ச்சைகள் அப்பொழுது நிகழ்ந்தன. யோன்சு யாக்கப் பெர்சிலியசு மாற்றியன்கள் என்ற கருத்தை முன்வைக்கும் வரை இச்சர்ச்சை நீடித்தது[6].

சேர்மங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Edward Howard (1991). "On a New Fulminating Mercury". அரச கழகத்தின் மெய்யியல் இதழ் 90 (1): 204–238. doi:10.1098/rstl.1800.0012. 
  2. F. Kurzer (1999). "The Life and Work of Edward Charles Howard". Annals of Science 56 (2): 113–141. doi:10.1080/000337999296445. https://archive.org/details/sim_annals-of-science_1999-04_56_2/page/113. 
  3. "Edward Charles Howard (1774-1816), Scientist and sugar refiner". National Portrait Gallery. 2005-01-05. Archived from the original on 2006-09-25. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
  4. Alexander Forsyth in Encyclopædia Britannica
  5. "Rifled Breech Loader". Globalsecurity.org.
  6. Greenberg, Arthur (2000). A Chemical History Tour. யோன் வில்லி அன் சன்ஸ். pp. 198–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-35408-2.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்மினேட்டு&oldid=3581797" இலிருந்து மீள்விக்கப்பட்டது