பல்லடம் மாணிக்கம்

பல்லடம் மாணிக்கம் (Palladam Manickam, பிறப்பு: 23 நவம்பர் 1936) தமிழறிஞரும், புலவரும், இதழாசிரியரும் ஆவார். இவர் தமிழ்நூல் காப்பகத்தை நிறுவி பல்லாயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வருகிறார்.[1][2]

பல்லடம் மாணிக்கம்
பிறப்பு23 நவம்பர் 1936 (1936-11-23) (அகவை 87)
பல்லடம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
இருப்பிடம்விருத்தாசலம்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (புலவர்)
பணிதமிழாசிரியர்
அறியப்படுவதுதமிழ்நூல் காப்பகம் நிறுவனர்
பெற்றோர்சாமியப்பா, வள்ளியம்மா
வாழ்க்கைத்
துணை
திலகவதி
பிள்ளைகள்2

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கோயம்புத்தூரை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் கல்விப் பின்னணி ஏதுமில்லாத சாதாரண விவசாயக் குடும்பத்தில்[3] சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோருக்கு 1936 நவம்பர் 23 இல் பிறந்தவர் பல்லடம் மாணிக்கம். பிறந்த ஊரிலேயே தொடக்கக் கல்வியை முடித்து, பின்னர் பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்து 1962 இல் புலவர் பட்டம் பெற்றார். ஆயிரம் பூ என்ற இவரது கவிதைத் தொகுதி பாரதிதாசன், கா. அப்பாத்துரை ஆகியோரின் வாழ்த்துப் பெற்றது. படிக்கும் காலத்திலேயே நல்ல தமிழ் நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகிக் கொண்டார்.[1]

சென்னையில் தமிழாசிரியராக 1962 முதல் 1975 வரை பணியாற்றினார். 1972-இல் விருத்தாசலத்தில் திலகவதி என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.[1]

திரைப்படப் பாடலாசிரியர்

தொகு

1968 இல் வெளிவந்த தேவி திரைப்படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதிப் புகழ்பெற்றவர். வி. தட்சணாமூர்த்தியின் இசையில் இப்பாடல்கள் அனைத்தும் பெரிதும் புகழ் பெற்றன. இவர் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதவில்லை.[1] பல மெல்லிசைப் பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழ்நூல் காப்பகம்

தொகு

தமிழாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மை ஆகிய தொழில்களில் ஈடுபட்டார். தாம் படித்த நூல்களைப் பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என்ற நல்நோக்கத்தில் பல நூல்களை வாங்கிச் சேகரித்து அவற்றைப் பராமரிக்க தமிழ்நூல் காப்பகத்தை விருத்தாசலத்தில் நிறுவினார்.[1][2] 'நிறங்கள் எனும் கலை' என்ற சமூக அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார்.[2] [4]வள்ளுவம் என்ற இதழை வண்ண அச்சில் வெளியிட்டு வந்தார்.[1][2] ரோஜா முத்தையா நூலகத்திற்கும் ஆலோகராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "தமிழ் நூல் காப்பக தந்தை பல்லடம் மாணிக்கம்". முனைவர் மு. இளங்கோவன். 7 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2024.
  2. 2.0 2.1 2.2 2.3 "A Man with a Tamil literary mission". கே. ஆர். ஏ. நரசய்யா (Madras Musings). 1-15 அக்டோபர் 2007. https://madrasmusings.com/older-archives/Vol%2017/Vol%20XVII%20-%20No%2012.pdf. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2024. 
  3. "நான் என்ன படிக்கிறேன்? - பல்லடம் மாணிக்கம்". தமிழ் இந்து. 16 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2024.
  4. "Tamil Nool Kaapagam, Virudhachalam". பொதுநூலக இயக்கம். https://tamilnadupubliclibraries.org/tamil-nool-kaapagam-virudhachalam/. பார்த்த நாள்: 5 October 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லடம்_மாணிக்கம்&oldid=4121176" இலிருந்து மீள்விக்கப்பட்டது