பல்லவி தானி

பல்லவி தானி (Pallavi Dani) ஓர் இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் லூசியானாவின் பேடன் ரூஜில் உள்ள லூசியானா மாநில பல்கலைக்கழகத்தில் கணிதத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார். இவரது ஆராய்ச்சி பகுதி வடிவியல் குழு கோட்பாடு குறிப்பாக, குலம் அரையளவு-சம அளவை மாறுபாடு குறித்ததாகும்.

கல்வியும் பணியும்

தொகு

தானி இந்தியாவின் மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 2001-இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 2005-இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டத்தினை "முடிவற்ற குழுவில் உள்ள தனிமங்களின் புள்ளியியல் பண்புகள்" எனும் பொருண்மையில் பென்சன் பார்ப் ஆராய்ச்சி வழிகாட்டுதலில் கீழ் முடித்தார்.

முனைவர் பட்ட ஆய்வினை முடித்த பிறகு. சிக்காகோ பல்கலைக்கழகத்தில், தானி நார்மன் , ஓக்லஹோமாவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பதவிகளை வகித்தார். தானி 2009-இல் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் பணிக்கால தொகுதி ஆசிரியப் பணியில் சேர்ந்தார். இவர் தற்போது லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார்.[1]:{{{3}}}

சூன் 2015-இல் கலிபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கணித அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வடிவியல் குழுக் கோட்பாடு குறித்த விரிவுரைகளைத் தானி வழங்கினார்.[2]:{{{3}}}

இவர் 2015 முதல் 2017 வரை அமெரிக்கக் கணித சங்கம் - சைமன்சு பயண நிதியின் குழுவில் பணியாற்றினார்.[3]:{{{3}}}

அங்கீகாரம்

தொகு

2016ஆம் ஆண்டில், கணிதத்தில் பெண்களுக்கான சங்கம் தானிக்கு ரூத் I. மிக்லர் நினைவுப் பரிசை வழங்கியது. சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற இணைப் பேராசிரியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த பரிசு, நியூ யோர்க்கின் இத்தாக்காவில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஒரு பருவத்தினை கற்பிக்காமல் செலவிட அனுமதிக்கிறது. தானி 2017 வசந்த கால பருவத்தினை கோர்னலில் கழித்தார். இங்கு இவர் திம் ரிலேயுடன் பணிபுரிந்தார். மற்ற கோர்னெல் ஆசிரிய உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டார்.[4]

தேசிய அறிவியல் அறக்கட்டளையின் மானியங்களால் தானியின் ஆராய்ச்சி ஆதரிக்கப்பட்டது.[5]:{{{3}}} 2016 முதல் 2018 வரையிலான இவரது ஆராய்ச்சிக்கு சைமன்சு அறக்கட்டளை நிதி ஒத்துழைப்பினை நல்கியது.[6]:{{{3}}}[7]:{{{3}}}

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு
  • Abrams, Aaron; Brady, Noel; Dani, Pallavi; Young, Robert (2013). "Homological and homotopical Dehn functions are different". Proc. Natl. Acad. Sci. USA 110 (48): 19206–19212. doi:10.1073/pnas.1207377110. Bibcode: 2013PNAS..11019206A. 
  • Dani, Pallavi; Thomas, Anne (2014). "Divergence in right-angled Coxeter groups". Trans. Amer. Math. Soc. 367 (5): 3549–3577. doi:10.1090/S0002-9947-2014-06218-1. 

மேற்கோள்கள்

தொகு
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 கணித மரபியல் திட்டத்தில் பல்லவி தானி
  2. இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 "Mathematical Sciences Research Institute". MSRI. 27 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  3. இங்கு மேலே தாவவும்: 3.0 3.1 "AMS Committees". American Mathematical Society. 26 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  4. இங்கு மேலே தாவவும்: 4.0 4.1 "Ruth I. Michler Prize 2016-2017". awm-math.org. Assocication for Women in Mathematics. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  5. இங்கு மேலே தாவவும்: 5.0 5.1 "Federal Grant Support LSU Math Department: NSF, NSA, Air Force, Army". LSU Math. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  6. இங்கு மேலே தாவவும்: 6.0 6.1 "Pallavi Dani". Simons Foundation. 13 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  7. இங்கு மேலே தாவவும்: 7.0 7.1 "2016 Simons Foundation Collaboration Grants for Pallavi Dani and Phuc Nguyen". LSU Math. 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_தானி&oldid=3888423" இலிருந்து மீள்விக்கப்பட்டது