இதாக்கா, நியூ யோர்க்

இத்தாக்கா (Ithaca, /ˈɪθəkə/ ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் விரல் ஏரிகள் (பிங்கர் லேக்சு)பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். கல்லூரி நகரமான இத்தாக்கா டாம்ப்கின்ஸ் கவுன்ட்டியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இப்பகுதியில் இத்தாக்கா டவுன், கயுகா ஐட்ஸ் சிற்றூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இத்தாக்கா என்ற கிரேக்கத் தீவின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது.[2] இந்த நகரம் கயுகா ஏரியின் தென்கரையில் சிராகூசிற்கு தென்மேற்கில் 45 மைல்கள் (72 km) தொலைவில் உள்ளது. தவிரவும், பஃபலோவிற்குதென்கிழக்கே 124 மைல்கள் (200 km) தொலைவிலும் தொராண்டோவிற்கு தென்கிழக்கே 247 மைல்கள் (398 km) தொலைவிலும் நியூயார்க் நகரத்திலிருந்து வடமேற்கே 223 மைல்கள் (359 km) தொலைவிலும், கிளீவ்லாந்திலிருந்து350 மைல் தொலைவிலும் பாஸ்டனிலிருந்து 360 மைல் தொலைவிலும் வாசிங்டன், டி. சி.யிலிருந்து 325 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்தாக்கா
நகரம்
இத்தாக்கா is located in the United States
இத்தாக்கா
இத்தாக்கா
ஐக்கிய அமெரிக்க நாட்டில் அமைவிடம்
இத்தாக்கா is located in New York
இத்தாக்கா
இத்தாக்கா
இத்தாக்கா (New York)
ஆள்கூறுகள்: 42°26′36″N 76°30′0″W / 42.44333°N 76.50000°W / 42.44333; -76.50000
நாடு United States
மாநிலம் நியூ யோர்க் மாநிலம்
கவுன்ட்டிடாம்ப்கின்சு
நிறுவனம்1790
நிறுவனம்1888
பெயர்ச்சூட்டுஇத்தாக்கா
அரசு
 • வகைமேயர்-நகரவை
 • நிர்வாகம்நகரவை
 • நகரத்தந்தைஇசுவாந்தே மைரிக் (D)
பரப்பளவு
 • நகரம்6.07 sq mi (15.72 km2)
 • நிலம்5.39 sq mi (13.96 km2)
 • நீர்0.68 sq mi (1.77 km2)
 • நகர்ப்புறம்
24.581 sq mi (63.66 km2)
 • மாநகரம்
474.649 sq mi (1,229.34 km2)
ஏற்றம்
404 ft (123 m)
மக்கள்தொகை
 (2020 கணக்கெடுப்பு)  † நகரப்பகுதி மட்டும்.
 • நகரம்32,108
 • அடர்த்தி5,956.96/sq mi (2,300/km2)
 • நகர்ப்புறம்
53,661
 • நகர்ப்புற அடர்த்தி2,200/sq mi (840/km2)
 • பெருநகர்
1,05,740
 • பெருநகர் அடர்த்தி220/sq mi (86/km2)
இனம்இத்தாக்கர்
நேர வலயம்ஒசநே−5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (EDT)
சிப் குறியீடுகள்
14850, 14851, 14852, & 14853
இடக் குறியீடு607
FIPS குறியீடு36-38077
GNIS feature IDs970238, 979099
இணையதளம்www.cityofithaca.org

இத்தாக்கா ஐவி லீக்பள்ளிகளில் ஒன்றான கோர்னெல் பல்கலைக்கத்தின் இருப்பிடம் ஆகும். இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் 20,000க்கும் மேலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.[3] தவிர இங்கு 7,000 மாணவர்களைக் கொண்ட தனியார் கலைக்கல்லூரி, இத்தாக்கா கல்லூரி, நகரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. டாம்ப்கின்ஸ் கார்ட்லாந்து சமூக கல்லூரியும் அண்மித்து உள்ளது[4]. இதனால் இங்கு "கல்லூரி நகர" சூழல் நிலவுகிறது. 2020 கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 32,108.

மேற்கோள்கள்

தொகு
  1. "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 27, 2020.
  2. Gannett, Henry (1905). The Origin of Certain Place Names in the United States. Govt. Print. Off. p. 167.
  3. Carol Kammen. "History of Ithaca and Tompkins County". City of Ithaca. Archived from the original on September 27, 2007. பார்க்கப்பட்ட நாள் August 16, 2007.
  4. "TC3 – Tompkins Cortland Community College". Tc3.edu. பார்க்கப்பட்ட நாள் April 30, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதாக்கா,_நியூ_யோர்க்&oldid=4042278" இலிருந்து மீள்விக்கப்பட்டது