பல்லவி படேல்

இந்திய அரசியல்வாதி

பல்லவி படேல் (Pallavi Patel) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். படேல் அப்னா தளம் (காமராவாடி) கட்சியின் தலைவர். இவர் அப்னா தளம் கட்சியின் நிறுவனர் சோன் லால் படேலின் மகள் ஆவார்.[1] படேல் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சிராத்து சட்டமன்றத் தொகுதிக்கு 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[2]

பல்லவி படேல்
Pallavi Patel
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்சீதாள பிரசாத்
தொகுதிசிராத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1981
கான்பூர், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி கூட்டணி அப்னா தளம் கட்சியுடன்
துணைவர்பங்கஜ் நிரஞ்சன்
பெற்றோர்சோன் இலால் படேல், கிருஷ்ணா படேல்
வாழிடம்இலக்னோ

அரசியல் வாழ்க்கை

தொகு

2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், அப்னா தளத்தின் (காமராவாடி) தலைவர் மருத்துவர் பல்லவி படேல், சிராத்து சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 7,337 வாக்குகள் வித்தியாசத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவை தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "सोनेलाल पटेल की मौत की सीबीआई जांच की मांग, बेटी पल्‍लवी पटेल बोलीं- कात‍िल हैं ज‍िंंदा, हम हैं शर्म‍िंदा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
  2. "Dr. Pallavi Patel-डॉ. पल्लवी पटेल Sp Candidate Sirathu Election Result 2022" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_படேல்&oldid=3818534" இலிருந்து மீள்விக்கப்பட்டது