பள்ளிப் பிரார்த்தனை

பள்ளிப் பிரார்த்தனை அல்லது இறைவணக்கக் கூட்டம் (School prayer) என்பது சமயச் சுதந்திரத்தின் பின்னணியில், பொது அல்லது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது கட்டாய பிரார்த்தனை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். நாடு மற்றும் பள்ளியின் வகையைப் பொறுத்து, அரசானது பிரார்த்தனைக் கூட்டங்கல், அனுமதிக்கப்படலாம் அல்லது தடைசெய்யப்படலாம். பள்ளிப் பிரார்த்தனைக் கூட்டங்களை தடை விதிக்கும் நாடுகளுடையே பல்வேறு காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில், ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின் படி மாணவர்களிடம் பள்ளிப் பிரார்த்தனை அவசியமற்றது. இது பொதுப் பள்ளிகளில் கடுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் பள்ளிப் பிரார்த்தனைகள் நடைபெறுவது அவர்களின் தனி விருப்பத்திற்குட்பட்டது. கனடாவில், உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றிய கனடிய சாசனத்தின்படி ,சிந்தனைச் சுதந்திரம் என்ற கருத்தின் கீழ் பள்ளிப் பிரார்த்தனை அனுமதிக்கப்படவில்லை. மதச்சார்பற்ற பிரான்சில் பள்ளிப் பிரார்த்தனை அனுமதிக்கப்படவில்லை. கிரேக்கம், சவூதி அரேபியா, ஈரான் மற்றும் ஆத்திரேலியாஆகிய நாடுகளில் பள்ளிப் பிரார்த்தனைகள் நடைபெற அனுமதியளிக்கும் நாடுகளின் பட்டியலில் அடங்கும்.  ஐக்கிய இராச்சியத்தில் அலுவல்பூர்வமாக பிரார்த்தனை என்பது தேவையான ஒன்று என்றபோதிலும் அதைச் செயல்படுத்தவில்லை.[1]

பிரிட்டிசு கொலம்பியா தொகு

1944 க்கு முன், பிரிட்டிசு கொலம்பியாவில், பொதுப் பள்ளிகள் சட்டம் (1872) பள்ளி ஆரம்பிக்கும் சமயத்திலும் பள்ளி நிரைவடையும் சமயத்திலும் இறைவனின் பிரார்த்தனையைப் பயன்படுத்த அனுமதித்தது. 1944 ஆம் ஆண்டில், பிரிட்டிசு கொலம்பியாவின் அரசாங்கம் பொதுப் பள்ளிகள் சட்டத்தில் 167ஆவது பிரிவில் திருத்தம் செய்து, பள்ளி நாள் தொடங்கும் போது கட்டாயமாக விவிலிய வாசிப்பை வழங்கவும், அதைத் தொடர்ந்து இறைவனின் பிரார்த்தனையை கட்டாயமாக மேற்கொள்ளவும் வழிவகை செய்தது. [2]

இந்தியா தொகு

மதச்சார்பற்ற நாடாக இருப்பதால், அரசுப் பள்ளிகளில் மத அறிவுறுத்தல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, எனவே பள்ளிகளில் மத ரீதியிலானப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்தியச் சட்டம் இசுலாமிய மற்றும் பிற சிறுபான்மை மதப் பள்ளிகளுக்கு இந்திய மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பகுதியளவு நிதியுதவியைப் பெறவும், மத போதனைகளை வழங்கவும் அனுமதிக்கிறது, பள்ளி நிர்வாகம் விரும்பினால், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரார்த்தனைகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கலாம்.எனவே பள்ளி எந்த மாணவரையும் மதம், இனம் அல்லது பிற அடிப்படையில் பாகுபாடு காட்டாது என்று வலியுறுத்துகிறது. [3]

விவாதம் தொகு

பள்ளி பிரார்த்தனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்றுவரும் வாதங்கள் தொகு

கனடா, அமெரிக்கா , உருசியா மற்றும் போலந்து போன்ற பல்வேறு நீதிமன்றங்களில் அரசாங்க அரங்கங்களில் மத மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் வழக்குகளில் பள்ளிப் பிரார்த்தனை என்பது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. சில வாதங்கள் பள்ளிகளில் மதம் ஒரு பயனுள்ள சமூகவியல் கருவியாகவும் [4] [5] மற்றும் உளவியல் உறுதித் தன்மைக்கு மதிப்புமிக்க வழிமுறையாகவும் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். [6] ஆனால்,பெரும்பான்மையினர் இருக்கும் இடத்தில் சிறுபான்மையினர் விரும்பும் மதத்திற்கு இடமளிக்காமல் போகும் நிலை உள்ளதால் பள்ளிப் பிரார்த்தனை கூடாது என எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர். [7]மேலும் அரசே தனி நபர் விருப்பத்தில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.[8]

சான்றுகள் தொகு

  1. "Schools 'not providing worship'" (in en-GB). BBC News. 2011-09-06 இம் மூலத்தில் இருந்து 2020-05-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200530043811/https://www.bbc.com/news/uk-england-14794472. 
  2. "BCCLA Position Paper Religion in public schools, 1969" பரணிடப்பட்டது 2010-01-10 at the வந்தவழி இயந்திரம் Retrieved December 04,2006
  3. Rajagopalan, Swarna (2003). "Secularism in India: Accepted Principle, Contentious Interpretation". in William Safran. The Secular and the Sacred: Nation, Religion, and Politics. Psychology Press. பக். 241–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7146-5368-6. https://books.google.com/books?id=U9gONC5qDfwC&pg=PA241. பார்த்த நாள்: 2021-03-24. 
  4. There Should Be Prayer and Bible Study in Public Schools. (2009). In B. Rosenthal (Ed.), Opposing Viewpoints. Atheism. Detroit: Greenhaven Press.
  5. "The U.S. Supreme Court Should Not Limit the Role of Religion in Public Life" by Robert Bork. The U.S. Supreme Court. Margaret Haerens, Ed. Opposing Viewpoints Series. Greenhaven Press, 2010. Robert Bork, Coercing Virtue: The Worldwide Rule of Judges. Washington, DC: The AEI Press, 2003
  6. Francis, Leslie J.; Robbins, Mandy; Lewis, Christopher Alan; Barnes, L. Philip (2008). "Prayer and psychological health: A study among sixth-form pupils attending Catholic and Protestant schools in Northern Ireland". Mental Health, Religion & Culture 11 (1): 85–92. doi:10.1080/13674670701709055. http://wrap.warwick.ac.uk/2894/1/WRAP_Francis_0673558-ie-170210-prayer_and_psychological_health.pdf. பார்த்த நாள்: 2019-08-17. 
  7. "Charter section 2(a) cases" பரணிடப்பட்டது 2007-07-15 at the வந்தவழி இயந்திரம் Retrieved December 04, 2006
  8. Dierenfield, Bruce J. (2007). "'The Most Hated Woman in America': Madalyn Murray and the Crusade against School Prayer". Journal of Supreme Court History 32 (1): 62–84. doi:10.1111/j.1540-5818.2007.00150.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிப்_பிரார்த்தனை&oldid=3600583" இலிருந்து மீள்விக்கப்பட்டது