பள்ளூர் வாராகி அம்மன் கோயில்
வாராகி அம்மன் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்திலுள்ள பள்ளூர் என்னும் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தூரத்தில், அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தெற்குத் திசையை நோக்கி அமர்ந்த நிலையில், சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய கோலத்தில் வாராகி அம்மன் அருள்பாலிக்கிறார்.[2]
வாராகி அம்மன் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°57′43″N 79°40′17″E / 12.9620°N 79.6715°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராணிப்பேட்டை |
அமைவிடம்: | பள்ளூர் |
சட்டமன்றத் தொகுதி: | அரக்கோணம் |
மக்களவைத் தொகுதி: | அரக்கோணம் |
ஏற்றம்: | 107.88 m (354 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வாராகி அம்மன் |
தாயார்: | வாராகி அம்மன் |
குளம்: | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 107.88 மீ. உயரத்தில், (12°57′43″N 79°40′17″E / 12.9620°N 79.6715°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி பகுதிக்கு அருகில் பள்ளூர் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ VENBAHARI (2022-05-30). Sri Varahi Malai (in ஆங்கிலம்). Giri Trading Agency Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7950-880-0.
- ↑ கே.எஸ்.கிருஷ்ணவேனி (2024-07-23). "செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் பள்ளூர் அரசாலை அம்மன்!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.
- ↑ தினத்தந்தி (2023-05-10). "பள்ளூர் வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.