பழங்குடியினர் கலைவிழா

பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக பழங்குடியினர் கலைவிழா 2011ம் ஆண்டு பெப்ரவரி 19, மற்றும் 20ம் ஆகிய தேதிகளில் பேச்சிப்பாறை வள்ளக்கடவு பகுதியில் நடந்தது. பேச்சிப்பாறை, கடையாலுமூடு, பொன்மனை பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தினர். கோத்தகிரி, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தோடர்கள், குறும்பர்கள், போர்ட்டர்கள், ஒட்டர்கள், வடுகர் இன பழங்குடி இன மக்களும் இக் கலை நிகழ்வில் கலந்துகொண்டார்கள்். இங்கு கணியான் கூத்து, சேவையாட்டம், குறவன் குறத்தியாட்டம், மரவுரியாட்டம், விளக்குகெட்டு, காட்டுப்புறப் பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியின் முதல் நாள் தெப்ப போட்டி, உறியடி, ஈட்டி எறிதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இரண்டாம் நாளன்று காலை கபடி, வடம் இழுத்தல், வில் அம்பு போட்டிகள் நடத்தப்பட்டது.