பழிவாங்கும் பேய்

பழிவாங்குவதற்காக மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையிலிருந்து திரும்பும் ஒரு இறந்த நபரின் ஆவி

பழிவாங்கும் பேய் ( Vengeful ghost ) அல்லது பழிவாங்கும் ஆவி ( vengeful spirit ) என்பது தொன்மங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் தோன்றும் ஒரு கொடூரமான, இயற்கைக்கு மாறான அல்லது நியாயமற்ற மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக வாழ்க்கைக்கு பிறகு திரும்பும் ஒரு இறந்த நபரின் ஆவி என்று கூறப்படுகிறது. இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் அல்லது தகனச் சடங்குகள் முக்கியமான சில கலாச்சாரங்களில், இத்தகைய பழிவாங்கும் ஆவிகள் சரியான இறுதிச் சடங்கு செய்யப்படாத நபர்களின் மகிழ்ச்சியற்ற பேய்களாகவும் கருதப்படலாம்.[1]

பழிவாங்கும் பேய்
(பழிவாங்கும் ஆவி)
பாதிரியார் ரைகோவின் ஆவி பிளேக் நோயாக திரும்பி வந்து மிய் கோயிலை அழிக்கிறது. டி. யோசிதோசி என்பவரது ஓவியம், கி.பி. 1891
குழுதொன்மக் கதைகளில் தோன்றும் ஒரு உயிரினம்
உப குழுஆவி,
பிரதேசம்அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா
கர்ப்பிணி மனைவி கொடூரமாகக் கொல்லப்பட்டப் பின்னர் அவளது கணவனுக்கு ஆவியாகத் தோன்றி, அவளது குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறது. தான் கொலை செய்யப்பட்ட விதத்தை அவனிடம் கூறுகிறாள். அவளது மரணத்திற்கு பழிவாங்கும் போது அவனுக்கு உதவுகிறாள். உடகாவா குனியோசி என்பவரின் ஓவியம் கி.பி. 1845

கலாச்சார பின்னணி

தொகு

ஒரு பழிவாங்கும் பேய் ஒரு உயிருள்ள நபராக இருக்கும்போது தான் சந்தித்த தீங்குகளுக்கு பழிவாங்கும் என்பது பண்டைய காலத்திருந்தே கூறப்படுகிறது. மேலும், இது பல கலாச்சாரங்களின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறது. இத்தகைய புனைவுகள் மற்றும் நம்பிக்கைகளின்படி, அவர்கள் அமைதியற்ற ஆவிகளாக வாழும் உலகில் சுற்றித் திரிகிறார்கள். தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறார்கள். மேலும் அவர்கள் தங்களை கொலைசெய்தவர்களையோ அல்லது தங்களை துன்புறுத்தியவர்களையோ தண்டிப்பதில் வெற்றி பெறும் வரை திருப்தி அடைய மாட்டார்கள்.[2]

சில கலாச்சாரங்களில் பழிவாங்கும் பேய்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றன. அவர்கள் யுஇர்வாந்தபோது அநியாயமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்தகைய பெண்கள் அல்லது சிறுமிகள் விரக்தியில் இறந்திருக்கலாம் அல்லது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் அவர்கள் அனுபவித்த வரம்பு மீறல் அல்லது சித்திரவதை காரணமாக சிறுவயதிலேயே மரணத்தில் முடிந்திருக்கலாம்.[3][4]

பேயோட்டுதல் மற்றும் சமாதானப்படுத்துதல் ஆகியவை பழிவாங்கும் பேய் தொடர்பாக பல்வேறு கலாச்சாரங்களால் பின்பற்றப்படும் மத மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். பராகுவேயில் உள்ள வடக்கு ஆச்சே மக்கள் குழு வயதானவர்களை அடக்கம் செய்வதற்குப் பதிலாக ஆபத்தான பழிவாங்கும் ஆவிகளை அடைக்க நினைத்தார்கள்.[5] ஒரு நபர் கொல்லப்பட்டு, உடல் சடங்கு சம்பிரதாயமின்றி அப்புறப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், ஆவியை சாந்தப்படுத்துவதற்காக, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, முறையான இறுதி சடங்குகள் செய்து மீண்டும் புதைக்கப்படுகிறது. சில சடங்குகளில் சடலத்தின் மீது உப்பு தூவுவதோ, சடலத்தின் எச்சங்களை (எலும்புகளை) எரிக்கவோ செய்வர்.

சில எடுத்துக்காட்டுகள்

தொகு

ஆப்பிரிக்கா

தொகு
  • மேடம் கோய் கோய், ஆப்பிரிக்க நகர்ப்புறக் கதைகளில் கூறப்படும் ஒரு பெண் பள்ளி ஆசிரியை சில மாணவர்களால் கொல்லப்பட்டதால் தனது மரணத்திற்கு காரணமான பள்ளிகளை வேட்டையாடுவார்.

பண்டைய உரோம்

தொகு
  • உரோமானிய புராணங்களில் கூறப்படும் லெமுர்ஸ் என்பது சரியான அடக்கம், இறுதி சடங்குகள் அல்லது உயிருள்ளவர்களால் முறையான வழிபாட்டு முறைகள் கடைபிடிக்காததால் அலைந்து திரியும் மற்றும் பழிவாங்கும் ஆவிகள் ஆகும்.[6]

பண்டைய கிரேக்கம்

தொகு

ஐக்கிய இராச்சியம்

தொகு
  • தி க்ரீன் லேடி, என்பது ஒரு அமைதியற்ற பெண் ஆவியாகும். இசுக்கொட்லாந்தின் கிராத்தெசு கோட்டை, நாக் கோட்டை, அசின்துலி கோட்டை போன்ற சில இடங்களில் இந்த ஆவி வேட்டையாடுவதாகக் கூறப்படுகிறது. சில கதைகளில் இவள் பச்சை நிற உடையில் கொலை செய்யப்படுகிறாள். பின்னர் ஒரு வேலைக்காரனால் புகைபோக்கியில் சடங்குகள் ஏதும் செய்யாமல் அடைக்கப்படுகிறாள். அவள் சோகத்துடன் கோட்டையில் நடக்கும்போது அவளுடைய காலடிச் சத்தம் இன்றும் கேட்கிறது என்று கூறப்படுகிறது.[8]

இந்தியா

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kwon, Heonik (2008). Ghosts of War in Vietnam. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-88061-9.
  2. Jerrold E. Hogle (4 December 2014). The Cambridge Companion to the Modern Gothic. Cambridge University Press. pp. 216–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-316-19435-5.
  3. Henry Whitehead (bishop), The Village Gods of South India, Asian Educational Services, New Delhi 1988 (First ed. 1921), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120601376
  4. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom, Barcelona 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
  5. Pierre Clastres, Chronique des indiens Guayaki. Ce que savent les Aché, chasseurs nomades du Paraguay. Plon. Paris, 1972
  6. St. Augustine, The City of God, 11.
  7. Hesiod, Theogony 211, translated by Hugh G. Evelyn-White
  8. Crathes Castle
  9. Janet Chawla (1994). Child-bearing and culture: women centered revisioning of the traditional midwife : the dai as a ritual practitioner. Indian Social Institute. p. 15.
  10. Cheung, Theresa (2006). The Element Encyclopedia of the Psychic World. Harper Element. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-721148-7.
  11. Fane, Hannah (1975). "The Female Element in Indian Culture". Asian Folklore Studies 34 (1): 100. doi:10.2307/1177740. 
  12. Bane, Theresa (2010). "Chedipe". Encyclopedia of Vampire Mythology. McFarland. pp. 47–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-4452-6.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vengeful ghosts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழிவாங்கும்_பேய்&oldid=4142987" இலிருந்து மீள்விக்கப்பட்டது