பவானி (நடிகை)

இந்திய நடிகை

பவானி (Bhavani) ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்தற்காக அறியப்படுபவர்.[1]

பவானி
பிறப்புசென்னை, இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1974 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரெகு குமார் (காலமானார்)
பிள்ளைகள்பவிதா, பாவனா

சொந்த வாழ்க்கை

தொகு

சென்னையில் பிறந்த இவர் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான ரெகு குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ரெகு குமார் "தலவட்டம்" மற்றும் ஹலோ மை டியர் ராங் நம்பர் போன்ற படங்களின் மூலம் அறியப்படுபவர்.[2] இவர்களுக்கு பவிதா மற்றும் பாவனா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள்.[3] "தாண்டவம்" என்ற மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த இவர் தற்போது தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.[4]

தொழில்

தொகு

பவானி 1974 இல் கன்னடத்தில் வெளிவந்த "பூட்டய்யன மக அய்யு" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இது இவருக்கு சிறந்த நடிகை விருது பெற்றுத் தந்தது. மேலும் அதே படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற புகழ் பெற்ற நடிகையும், தாய்வழிப் பாட்டியும், இவரது வழிகாட்டியுமான "ருஷ்யேந்திரமணி"யுடன் நடிப்பினை பகிர்ந்து கொண்டார். 1970களில் பவானி தனது நீண்ட திரை வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 75 படங்களில் நடித்து ஒரு முக்கிய நடிகையாக கருதப்பட்டார். மேலும் இவர் முன்னணி நடிகர்களான பிரேம் நசீர், ஜெயன், மற்றும்சுகுமாரன் போன்றவர்களுடன் மலையாளம், விஷ்ணுவர்த்தன், லோகேஷ், அம்பரீஷ், துவாகீஷ், மற்றும் ரசினிகாந்த், ஆர். முத்துராமன், போன்ற நடிகர்களுடன் கன்னடத்திலும் ,ஜெய்சங்கர், ம. கோ. இராமச்சந்திரன், மற்றும் சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நடிகர்களுடன் தமிழிலும், மற்றும் என். டி. ராமராவ், சந்திரமோகன், நந்தமூரி பாலகிருஷ்ணா, மற்றும் ஸ்ரீதர் போன்றவர்களுடன் தெலுங்கிலும் நடித்துள்ளார். 1978 இல் வெளிவந்த "லிசா" என்ற மலையாளப் படத்தின் மூலம் நன்கு அறியப்படுபவர். தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் எதிர்மறைப் பாத்திரங்கள், தாய் வேடம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_(நடிகை)&oldid=4114241" இலிருந்து மீள்விக்கப்பட்டது