பாஃபின் தீவு
கனடாவின் ஒரு தீவு
பாஃபின் தீவு (Baffin Island, இனுக்ரிருற் மொழி:ᕿᑭᖅᑖᓗᒃ, Qikiqtaaluk, பிரெஞ்சு மொழி: Île de Baffin or Terre de Baffin), கனடாவின் நூனவுட் ஆட்புலத்திலுள்ளது. இது கனடாவின் மிகப் பெரும் தீவாகவும் உலகில் ஐந்தாவது பெரிய தீவாகவும் விளங்குகின்றது. இதன் பரப்பளவு 507,451 கிமீ2 (195,928 சது மை). இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 11,000 (2007 மதிப்பீடு). இது 65.4215 வ, 70.9654 மே ஆட்கூற்றில் அமைந்துள்ளது. ஆங்கில தேடலியலாளர் வில்லியம் பாஃபின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது,[2] இத்தீவு கொலம்பியக் காலத்திற்கு முன்னரே அறியப்பட்டிருக்கக் கூடும். கிறீன்லாந்து, ஐசுலாந்து தீவுகளிலிருந்து எசுக்காண்டினாவிய தேடலியலாளர்கள் இங்கு வந்திருக்கலாம். ஐசுலாந்திய தொன்மைக் கதைகளில் இத்தீவின் அமைவிடம் எல்லுலாந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் பெயர்: ᕿᑭᖅᑖᓗᒃ (Qikiqtaaluk) | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வடக்குக் கனடா |
ஆள்கூறுகள் | 69°N 72°W / 69°N 72°W |
தீவுக்கூட்டம் | கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் |
பரப்பளவு | 507,451 km2 (195,928 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 5th |
உயர்ந்த ஏற்றம் | 2,147 m (7,044 ft) |
உயர்ந்த புள்ளி | ஓடின் மலை |
நிர்வாகம் | |
ஆட்புலம் | நூனவுட் |
பெரிய குடியிருப்பு | இக்காலுயிட் (மக். 6,699) |
மக்கள் | |
மக்கள்தொகை | 10,745 (2006) |
அடர்த்தி | 0.02 /km2 (0.05 /sq mi) |
இனக்குழுக்கள் | இனுவிட்டு (72.7%), பழங்குடி அல்லாதோர் (25.3%), முதல் நாட்டினர் (0.7%), மெத்தீசு (0.5%)[1] |
காட்சியகம்
தொகு-
பாஃபின் தீவின் இடவமைப்பு
-
வடகிழக்கு பாஃபின் தீவில் சாம் ஃபோர்டு இடுக்கேரியில் தொலைவிட மூவலந்தீவு
-
பாஃபின் தீவின் தென்முனை.
-
தோர் மலை, பாஃபின் தீவிலுள்ள பெரிய செங்குத்துப் பாறை
-
தோர் மலை
-
பாங்னிர்துங்
மேற்கோள்கள்
தொகு- ↑ 2006 Aboriginal Population Profile for Nunavut communities.
- ↑ Quinn, Joyce A.; Woodward, Susan L. (31 January 2015). Earth's Landscape: An Encyclopedia of the World's Geographic Features. ABC-CLIO. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-446-9.