கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்
கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் (Canadian Arctic Archipelago) அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் கனடாவின் பெருநிலத்தின் வடக்கே உள்ள தீவுக் கூட்டங்களாகும்.
கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தின் முனைவெறிய நிலப்படம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வடக்கு கனடா |
ஆள்கூறுகள் | 75°N 90°W / 75°N 90°W |
மொத்தத் தீவுகள் | 36,563 |
முக்கிய தீவுகள் | பேஃபின் தீவு, விக்டோரியா தீவு, எல்லெசுமியர் தீவு |
பரப்பளவு | 1,424,500 km2 (550,000 sq mi) |
நிர்வாகம் | |
கனடா | |
ஆட்பகுதிகள் | நூனவுட் வடமேற்கு நிலப்பகுதிகள் |
பெரிய குடியிருப்பு | இக்காலுயிட், நூனவுட் (மக். 6,184) |
மக்கள் | |
மக்கள்தொகை | 14,000 |
அடர்த்தி | 0.01 /km2 (0.03 /sq mi) |
வட அமெரிக்காவின் வடகோடியில் ஆர்க்டிக்கு பெருங்கடலில் ஏறத்தாழ 1,424,500 km2 (550,000 sq mi) பரப்பளவில்அமைந்துள்ள இத்தீவுக்கூட்டத்தில் 36,563 தீவுகள் அடங்கியுள்ளன. வடக்கு கனடாவின் பெரும்பான்மையான நூனவுட் மற்றும் வடமேற்கு நிலப்பகுதிகளின் சில பகுதிகள் இதில் அடங்கியுள்ளன.[1] கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் புவி சூடாதலின் சில விளைவுகளை உணர முடிகின்றது;[2][3] இவை உருகுவதன் காரணமாக 2100ஆம் ஆண்டில் கடல் மட்டங்கள் 3.5 cm (1.4 அங்) உயரும் என சில கணினி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[4]
முதன்மைத் தீவுகள்
தொகுஇந்தத் தீவுக்கூட்டத்தில் bigger than 130 ச.கிமீ விட கூடுதலான பரப்பளவைக் கொண்ட 94 முதன்மைத் தீவுகள் உள்ளன; உலகின் மிகப்பெரிய முதல் பத்துத் தீவுகளில் மூன்று இதில் அடங்கியுள்ளன. இவற்றைத் தவிர 36,469 சிறு தீவுகள் உள்ளன. 10,000 ச.கிமீக்கும் கூடுதலான பரப்பளவுள்ள பெரிய தீவுகளாவன:
பெயர் | அமைவிடம்* | பரப்பு | பரப்புத் தரவரிசை | மக்கள்தொகை (2001) | |
---|---|---|---|---|---|
உலகம் | கனடா | ||||
பாஃபின் தீவு | நூ | 507,451 km2 (195,928 sq mi) | 5 | 1 | 9,563 |
விக்டோரியா தீவு | வமே, நூ | 217,291 km2 (83,897 sq mi) | 9 | 2 | 1,707 |
எல்லெசுமியர் தீவு | நூ | 196,236 km2 (75,767 sq mi) | 10 | 3 | 168 |
பேங்க்சு தீவு | வமே | 70,028 km2 (27,038 sq mi) | 24 | 5 | 114 |
தேவோன் தீவு | நூ | 55,247 km2 (21,331 sq mi) | 27 | 6 | 0 |
அக்செல் எய்பெர்கு தீவு | நூ | 43,178 km2 (16,671 sq mi) | 32 | 7 | 0 |
மெல்வில் தீவு | வமே, நூ | 42,149 km2 (16,274 sq mi) | 33 | 8 | 0 |
சௌதாம்டன் தீவு | நூ | 41,214 km2 (15,913 sq mi) | 34 | 9 | 721 |
வேல்சு இளவரசர் தீவு | நூ | 33,339 km2 (12,872 sq mi) | 40 | 10 | 0 |
சாமெர்செட் தீவு | நூ | 24,786 km2 (9,570 sq mi) | 46 | 12 | 0 |
பாதர்சுட்டு தீவு | நூ | 16,042 km2 (6,194 sq mi) | 54 | 13 | 0 |
இளவரசர் பாட்றிக்கு தீவு | வமே | 15,848 km2 (6,119 sq mi) | 55 | 14 | 0 |
அரசர் வில்லியம் தீவு | நூ | 13,111 km2 (5,062 sq mi) | 61 | 15 | 960 |
எல்லெப் ரிங்னெசு தீவு | நூ | 11,295 km2 (4,361 sq mi) | 69 | 16 | 0 |
பைலோட் தீவு | நூ | 11,067 km2 (4,273 sq mi) | 72 | 17 | 0 |
* வமே = வடமேற்கு நிலப்பகுதிகள், நூ = நூனவுட்
மேற்சான்றுகள்
தொகு- ↑ Marsh, James H., ed. 1988. "Arctic Archipelago பரணிடப்பட்டது 2011-10-09 at the வந்தவழி இயந்திரம்" The Canadian Encyclopedia. Toronto: Hurtig Publishers.
- ↑ Thinning of the Arctic Sea-Ice Cover
- ↑ Arctic sea ice decline: Faster than forecast
- ↑ Wayman, Erin. "Canada's ice shrinking rapidly". Science News.