பாகபத் பெகெரா
இந்திய அரசியல்வாதி
பாகபத் பெகெரா (Bhagabat Behera) (1940-2002) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பட்நாயக்கின் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும், ஒடிசாவின் முன்னாள் அமைச்சராகவும், ஒடிசா மாநிலத்தில் நயாகட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]
பாகபத் பெகெரா Bhagabat Behera | |
---|---|
நயாகட் மாவட்டத்தில் கண்டப்படா சாலையில் உள்ள பெகெராவின் சிலை | |
வணிகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர், ஒடிசா அரசு | |
பதவியில் 1990–1991 | |
வணிகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் (வான்வழி போக்குவரத்து நீங்கலாக), ஒடிசா அரசு | |
பதவியில் 1991–1993 | |
உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், ஒடிசா அரசு | |
பதவியில் 1993–1995 | |
பள்ளி மற்றும் பொதுக்கல்வித்துறை அமைச்சர், ஒடிசா அரசு | |
பதவியில் 2000–2002 | |
உறுப்பினர்:ஒடிசாவின் சட்டமன்றம் (நயாகட் சட்டமன்றத் தொகுதி) | |
பதவியில் 1974–1977 | |
பதவியில் 1977–1980 | |
பதவியில் 1985–1990 | |
பதவியில் 1990–1995 | |
பதவியில் 2000 – 3 சூன் 2002(மறைவு) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நயாகட், ஒடிசா,(பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்) | சூன் 1, 1940
இறப்பு | 3 சூன் 2002 | (அகவை 62)
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | சோசலிசக் கட்சி (1974–1977), ஜனதா (1977–1980), ஜனதா கட்சி (1985–1990), ஜனதா தளம் (1990–1995), பிஜு ஜனதா தளம் (2000– மறைவு) |
துணைவர் | மந்தாகினி பெகெரா |
பிள்ளைகள் | 4 மகள்கள் |
பெற்றோர் |
|
கல்வி | முதுகலைப்பட்டம், சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபாகபத் பெஹெரா நாராயண் பெஹாராவில் உள்ள யாதவக் குடும்பத்தில் பிறந்தார்.[2]ஒடிசாவின் நாயகட்டின் பிருடா கிராம பஞ்சாயத்தில் பகவத் பெஹெராவின் குடும்பம் வாழ்ந்து வந்தார்கள். அவர் கட்டாக், ரேவன்ஷா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3] தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மற்றும் கலப்பின தற்காப்பு கலைகள் குறித்த வல்லுநர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhagabat Behera". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.
- ↑ Pioneer, The (5 June 2019). "In brief". The Pioneer. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.
- ↑ "MLA Bhagabat Behera Profile – NAYAGARH Constituency". Odisha Helpline- a journey to your roots!. பார்க்கப்பட்ட நாள் 6 August 2020.[தொடர்பிழந்த இணைப்பு]