பாக்கித்தான் அரசு
பாக்கித்தான் அரசு (Government of Pakistan, உருது: حکومتِ پاکستان) கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் நாட்டுத் தலைவராகவும் நேரடியாக அல்லாது தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அரசுத் தலைவராகவும் உள்ளனர்.[1]
நாட்டை ஆள வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையைப் பின்பற்றும் இந்த அரசு முதன்மையாக செயலாட்சி, சட்டவாக்கம், நீதித்துறை கிளைகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பின்படி அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றம், தலைமை அமைச்சர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின்பாற் வழங்கப்பட்டுள்ளன.[2] நாடாளுமன்றத்தின் சட்டங்களும் திருத்தங்களும் இந்தக் கிளைகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வை வரையறுத்துள்ளன; இவற்றின் அடுத்த நிலையிலான செயலாட்சியர் அமைப்புக்கள், துறைகள், கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளன.[2] அரசியலமைப்பு அதிகாரத்தின்படி பாக்கித்தான் குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புமையும் அவசரச் சட்டங்களின் அறிவித்தலையும் மேற்கொள்கிறார். இவர் அலங்கார நாட்டுத் தலைவராகவே உள்ளார்; தேர்தல்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை அமைச்சர் செயலாட்சிப் பிரிவின் முதன்மை செயல் அலுவலராக செயல்படுகின்றார்; இவரே கூட்டாட்சியை நடத்தும் பொறுப்பைக் கொண்டவர். இரண்டு அவைகள் கொண்டா நாடாளுமன்றத்தில் கீழவை தேசிய சட்டப்பேரவை என்றும் மேலவை செனட் எனவும் அழைக்கப்படுகின்றன. நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், நான்கு மாகாண உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களும் உள்ளன;தவிர தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம், இசுலாமியச் சட்ட முறைமை நீதிமன்றங்கள், பசுமைத் தீர்ப்பாயங்களும் உள்ளன. அனைத்து நீதி மன்றங்களும் உச்ச நிதிமன்றத்திற்கு கீழானவை. [2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "About Government". Government of Pakistan. Archived from the original on 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-03-05.
- ↑ 2.0 2.1 2.2 Govt. of Pakistan. "Government of Pakistan". Government of Pakistan. Government of Pakistan. பார்க்கப்பட்ட நாள் 18 June 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Web gateway பரணிடப்பட்டது 2011-03-27 at the வந்தவழி இயந்திரம் அலுவல்முறை பாக்கித்தான் அரசு இணையவாயில்
- பாக்கித்தான் அரசு
- பாக்கித்தானின் குடியரசுத் தலைவர் பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்
- பாக்கித்தான் செனட்
- பாக்கித்தானின் தேசிய சட்டப்பேரவை
- பாக்கித்தானின் கூட்டாட்சி சாரியத் நீதிமன்றம்
- பாக்கித்தான் உச்ச நீதிமன்றம் பரணிடப்பட்டது 2013-08-14 at the வந்தவழி இயந்திரம்