பாக்கித்தான் பிலிப் மோரிசு

பாக்கித்தான் நாட்டிலுள்ள புகையிலைத் தொழிசாலை

பாக்கித்தான் பிலிப் மோரிசு (Philip Morris Pakistan) பாக்கித்தான் நாட்டிலுள்ள ஒரு புகையிலை உற்பத்தி நிறுவனமாகும். இது பன்னாட்டு பிலிப் மோரிசு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதன் தலைமையகம் பாக்கித்தானின் கராச்சியில் உள்ளது. இந்நிறுவனம் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. [2]

பாக்கித்தான் பிலிப் மோரிசு
Philip Morris Pakistan
வகைபொதுத்துறை
நிறுவுகை1969; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1969)[1]
தலைமையகம்கராச்சி, பாக்கித்தான்
தொழில்துறைபுகையிலைத் தொழில்
உற்பத்திகள்சிகரெட்டு
தாய் நிறுவனம்பன்னாட்டு பிலிப் மோரிசு நிறுவனம்
இணையத்தளம்www.pmi.com/markets/pakistan/en/about-us/overview

இந்நிறுவனம் பாக்கித்தான் புகையிலை நிறுவனத்திற்குப் பிறகு பாக்கித்தானில் உள்ள இரண்டாவது பெரிய புகையிலை நிறுவனமாகும். [3]

வரலாறு தொகு

பிலிப் மோரிசு நிறுவனம் 1969 ஆம் ஆண்டில் இலக்சன் புகையிலை என்ற பெயரில் நிறுவப்பட்டது. [2]

2007 ஆம் ஆண்டில், பன்னாட்டு பிலிப் மோரிசு நிறுவனம் இதன் பங்குகளை 97 சதவீதமாக அதிகரித்து நிறுவனத்தை வாங்கியது. [4]

2015 ஆம் ஆண்டில், இராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள மந்த்ராவில் உள்ள ஆலையை இந்நிறுவனம் மூடியது. விலைவாசி உயர்வு மற்றும் பாக்கித்தானில் புகையிலை கடத்தல் போன்றவை இதற்கு காரணமாயின. [5] இதனால் 141 ஊழியர்கள் வேலை இழந்தனர். [6]

2019 ஆம் ஆண்டில், நிறுவனம் தங்கள் நிதியை மறுசீரமைப்பதற்காக கோட்ரி ஆலையை மூடுவதாக அறிவித்தது. [7] இதனால் 193 ஊழியர்கள் வேலை இழந்தனர். [7]

தொழிற்சாலைகள் தொகு

கடந்த காலத்தில், இந்நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டது, ஆனால் கடத்தல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மூன்று இடங்களில் தொழிற்சாலைகளை மூடியது. [8] பிலிப் மோரிசு நிறுவனம் தற்போது பின்வரும் நகரங்களில் மட்டும் இரண்டு தொழிற்சாலைகளை இயக்குகிறது:

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "PMI takes over Lakson Tobacco". DAWN.COM. March 10, 2007.
  2. 2.0 2.1 "Philip Morris (Pakistan) Limited – Business Recorder".
  3. "PMI buys 50.21pc stakes in Lakson: Rs20.62 billion deal".
  4. "Philip Morris acquires Pakistan's Lakson Tobacco". https://www.reuters.com/article/businesspro-pakistan-morris-dc-idUSISL13794220070309. 
  5. "Philip Morris shuts cigarette production unit in Pindi". February 17, 2015.
  6. "After closing plant Philip Morris now fires 141 employees". November 23, 2015.
  7. 7.0 7.1 7.2 7.3 "Philip Morris shuts down tobacco manufacturing facility".
  8. "Philip Morris investment blows up in smoke".