பாங்காக் மகா மாரியம்மன் கோயில்

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஓர் அம்மன் கோயில்

மகா மாரியம்மன் கோயில் என்பது தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். கி. பி. 1879 ஆம் ஆண்டு, வைத்திலிங்கம் என்ற வைத்தி படையாட்சி என்பவரால் இக்கோயில் நிறுவப்பட்டது.[1][2][3]

பாங்காக் மகா மாரியம்மன் கோயில்
மகா மாரியம்மன் கோயில், பாங்காக், தாய்லாந்து
பாங்காக் மகா மாரியம்மன் கோயில் is located in தாய்லாந்து
பாங்காக் மகா மாரியம்மன் கோயில்
மகா மாரியம்மன் கோயில், பாங்காக், தாய்லாந்து
அமைவிடம்
நாடு: தாய்லாந்து
அமைவு:பாங்காக், தாய்லாந்து
ஏற்றம்:3.45 m (11 அடி)
ஆள்கூறுகள்:13°43′27″N 100°31′23″E / 13.724251°N 100.522917°E / 13.724251; 100.522917
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
வரலாறு
அமைத்தவர்:வைத்தி படையாச்சி
பாங்காக் மகா மாரியம்மன் கோயில்

அமைவிடம்

தொகு
 
 
பாங்காக் மகா மாரியம்மன் கோயில்
பாங்காக் மகா மாரியம்மன் கோயில் (தாய்லாந்து)

விபரங்கள்

தொகு

தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் தமிழ்க் கடவுளான மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பிற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. உள்ளூர்வாழ் தமிழர்களும், தாய்லாந்து மக்களும் விழாக்காலங்களின்போது வழிபட வருகிறார்கள். நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இதர தெய்வங்கள்

தொகு

சிவன், விஷ்ணு, கிருஷ்ணர், பிரம்மா, இலக்குமி, சரசுவதி, பிள்ளையார், தண்டாயுதபாணி, நடராசர், சிவகாமி, காளி, அனுமன், சப்தகன்னியர், நவக்கிரகம், ஐயனார், மதுரை வீரன், பெரியாச்சி, காத்தவராயன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கும் இதர தெய்வங்களாகும்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Ca Nākarācan̲ (2004). உலக நாடுகளில் தமிழர் பண்பாடு. தமிழ்ப் பல்கலைக்கழகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7090-328-4.
  2. Es Nākarājan̲ (1993). Tāylāntil Tamil̲ppaṇāṭṭuk kūr̲ukaḷ. Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲am.
  3. "Explore Mariamman Temple Bangkok, Bangkok with Dook". www.dookinternational.com. பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.
  4. lightuptemple (4 February 2023). "Bangkok Sri Maha Mariamman Temple, Thailand". lightuptemples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.
  5. "Sri Maha Mariamman Temple". www.tourismthailand.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு