பாசியா வின் விரிவாக்கம் நான்கு A மற்றும் Z அடையாளங்காணும் அணி வரிசை என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.   

பாசியா இலச்சினை

பாசியா (Fazia) என்னும் திட்டம் மின்னூட்டத்துகள்களுக்காக ஒரு புதிய 4 துகளை கண்டுபிடித்து உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பெர்மி ஆற்றலைச் சுற்றி தூண்டப்பட்ட கன அயனிகளின் வினைகளில் செயல்படுகிறது. இந்த திட்டம் அணுக்கரு இயற்பியலில் உள்ள உலகளாவிய பத்து நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது .

இத்திட்டம் 2013-2014 இல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. கதிரியக்க அணுக்கரு கற்றைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயர் செறிவு கொண்ட துகள் முடுக்கிகளின் வருகையும் இத்திட்டத்துடன் ஒத்துப்போனது. தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எண்முறை மின்னணுவியல் மற்றும் துடிப்பு வடிவ பகுப்பாய்வை மேம்படுத்தும் முயற்சியை உள்ளடக்கியது. மேலும் பல்வேறு புலங்களிலும் உள்ள நிறை மற்றும் மின்னூட்டங்களைக் கண்டறிகின்ற, தாழ்நிலை ஆற்றல் எல்லைகளைக் கண்டறிகின்ற மின் துகள் கண்டுபிடிப்புக் கருவிகளில் மேம்பட்ட ஆற்றல்சார் கோணப்பிரிகை போன்றவற்றைக் கண்டறியும்  திறமையை மேம்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசியா&oldid=4054179" இலிருந்து மீள்விக்கப்பட்டது