பாசிர் கூடாங்-பெர்மாஸ் ஜெயா நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 35


பாசிர் கூடாங்-பெர்மாஸ் ஜெயா நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 35 (ஆங்கிலம்: Malaysia Federal Route 35; அல்லது Permas Jaya-Pasir Gudang Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 35 அல்லது Lebuhraya Permas Jaya-Pasir Gudang) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் உள்ள ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். [1]

மலேசிய கூட்டரசு சாலை 35
Malaysia Federal Route 35
Laluan Persekutuan Malaysia 35

பாசிர் கூடாங்-பெர்மாஸ் ஜெயா நெடுஞ்சாலை
Permas Jaya-Pasir Gudang Highway
Lebuhraya Permas Jaya-Pasir Gudang

வழித்தட தகவல்கள்
நீளம்:13.4 km (8.3 mi)
பயன்பாட்டு
காலம்:
2008 –
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:ஜொகூர் பாரு; கம்போங் பாக்கார் பத்து
 J5 ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரைச் சாலை

J14 AH2 ஜொகூர் பாரு கிழக்கு

பெர்மாஸ் உத்தாரா சாலை
பெர்மாஸ் செலாத்தான் சாலை

17 பாசிர் கூடாங் நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:பாசிர் கூடாங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பெர்மாஸ் ஜெயா; Taman Rinting
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலை ஒரு கட்டணமில்லா நெடுஞ்சாலை; மற்றும் இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயா (Bandar Baru Permas Jaya) மற்றும் தாமான் ரிந்திங் (Taman Rinting) வழியாகச் செல்லும் இந்த 13.4 கிமீ (8.3 மைல்) நெடுஞ்சாலை, ஜொகூர் பாரு மாநகரின் மையத்தில் உள்ள பாக்கார் பத்து புறநகர்ப் பகுதியை பாசிர் கூடாங் நகரத்துடன் இணைக்கிறது.

பொது

தொகு

பாசிர் கூடாங்-பெர்மாஸ் ஜெயா நெடுஞ்சாலை, பெர்மாஸ் ஜெயா பாலம் வழியாகவும் செல்கிறது; மற்றும் பாசிர் கூடாங்கிற்கான மாற்று வழியாகவும் அமைகிறது.

பாசிர் கூடாங் நெடுஞ்சாலை (Pasir Gudang Highway), இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையின்   (Second Link Expressway) பொந்தியான்-ஜொகூர் பாரு இணைப்பு (Pontian–Johor Bahru Link); மற்றும் செனாய்-தெசாரு விரைவுச்சாலைக்குப் (Senai–Desaru Expressway) பிறகு, இசுகந்தர் மலேசியா பகுதியில் நான்காவது கிழக்கு-மேற்கு விரைவுச்சாலை ஆகும்.

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; ஜொகூர் பாரு மாநகரத்தின் பாக்கார் பத்து பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை பார்க்வே (Johor Bahru East Coast Parkway) எனும் பெயரில் இருந்த இந்த நெடுஞ்சாலை, 2014-ஆம் ஆண்டில், மலேசிய கூட்டரசு சாலை 35 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

சாலைத் தரம்

தொகு

இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு