பாசுதேப் தாஸ்

பெங்காலி பௌல் நாட்டுப்புற பாடகர் மற்றும் இசைக்கலைஞர்

பாசுதேப் தாஸ் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த பெங்காலி பௌல் நாட்டுப்புற பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்; [1] காமாக், எக்தாரா, மற்றும் தோதாரா போன்றவற்றையும் துணையாக வாசிக்கிறார். [2] [3] அவர் சர்வதேச இசைக் காட்சியில் பாரம்பரிய பௌல் இசைக்கு முன்னோடியாக அறியப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் திரைப்படமான தி வெயிட்டிங் சிட்டிக்கான இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றினார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வங்காளதேசத் திரைப்படமான "ஹவா" அவரது சொந்தக் குரலில் "அட்டா பஜே டெரி கோரிஸ் நா" என்ற புகழ்பெற்ற பாடலைக் கொண்டிருந்தது. [4]

பாசுதேப் தாஸ்
பாசுதேப் தாஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்বাসুদেব দাস
இயற்பெயர்பாசுதேப் தாஸ்
பிறப்புபோல்பூர், பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்கம், இந்தியா
பிறப்பிடம்மேற்கு வங்கம்
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பாசுதேப் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதனில் இருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்கோரியா என்ற கிராமத்தில் வளர்ந்து வந்தார். [2] அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சாந்திநிகேதனில் கழித்ததாலும். பாசுதேப் சாந்தி தேப் கோஷ், பிரபாத் முகர்ஜி மற்றும் பபன் தாஸ் பால் உட்பட பல பாடகர்களுடன் நட்பு பாராட்டி இசைப்புலமையை வளர்த்துக்கொண்டார். [2] அவர் தனது பதின்மூன்றாவது வயதிலிருந்தே பௌல் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். [2]

ஷ்வபன் சட்டர்ஜி, தீனாநாத் தாஸ் பால், நரண் தாஸ், பகா ஷாம் தாஸ் மற்றும் பிஷ்வநாத் தாஸ் போன்ற பல வழிகாட்டிகளிடமிருந்து பாசுதேப் பௌல் இசைப்பாடங்களைக் கற்றுக்கொண்டார். 2004 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா ஜாஸ் விழாவில் டான்மோய் போஸுடன் இணைந்து பணியாற்றினார். [5] அவர் டாக்கா சர்வதேச நாட்டுப்புற கலைவிழா கச்சேரி, 2017 வங்காளதேசத்தின் டாக்காவில் நிகழ்த்தினார். [2] [6]

2009 இல், பாசுதேப்பின் முதல் தனி ஸ்டுடியோ ஆல்பமான ஆட் குதூரி நோய் டோரோஜா ஃபோக்பிக் மூலம் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பாசுதேப் திருமணமாகி பிர்பூமில் வசிக்கிறார். அவருக்கு அனிதா என்ற மகளும், போலா என்ற மகனும் உள்ளனர்.

இசைப் பதிவுகளுக்கான முழுமையான பட்டியல்

தொகு
ஸ்டுடியோ ஆல்பங்களின் பட்டியல்
தலைப்பு ஆல்பம் விவரங்கள் குறிப்பு(கள்).
ஆட் குதூரி நோய் டோரோஜா
  • வெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2009
  • லேபிள்: ஃபோக்பிக்
  • வடிவங்கள்: குறுவட்டு
[7]

திரைப்படங்கள்

தொகு
  • தி வெயிட்டிங் சிட்டி (2009) - தனிப்பாடலாளர் [4]

கச்சேரிகள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு
  • பௌல் கலைஞர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுதேப்_தாஸ்&oldid=3699965" இலிருந்து மீள்விக்கப்பட்டது