பிசுவநாத் தாசு
பிசுவநாத் தாசு (Bishwanath Das)(8 மார்ச் 1889-2 சூன் 1984) என்பவர் இந்திய அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் 1937-39 பிரித்தானிய இந்தியாவின் ஒடிசா மாகாணத்தின் பிரதமராகவும், 1962-67 உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராகவும், பின்னர் 1971-72 ஒடிசாவின் முதலமைச்சராகவும் இருந்தார்.
பிசுவநாத் தாசு | |
---|---|
ବିଶ୍ଵନାଥ ଦାସ | |
பிசுவநாத் தாசு | |
ஒடிசாவின் 7ஆவது முதல்மைச்சர் | |
பதவியில் 3 ஏப்ரல் 1971 – 14 சூன் 1972 | |
ஆளுநர் | சாகுத்துல்லா சாகா அன்சாரி சர்தார் ஜோகிந்திர சிங் (பொறுப்பு) |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | நந்தினி சத்பதி |
உத்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 16 ஏப்ரல் 1962 – 30 ஏப்ரல் 1967 | |
முன்னையவர் | புர்குல ராமகிருஷ்ண ராவ் |
பின்னவர் | பேஜவாடா கோபால் ரெட்டி |
ஒடிசா முதலமைச்சர் | |
பதவியில் 19 சூலை 1937 – 4 நவம்பர் 1939 | |
முன்னையவர் | கிருஷ்ண சந்திர கஜபதி |
பின்னவர் | ஆளுநர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெலகான், கஞ்சாம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 8 மார்ச்சு 1889
இறப்பு | 2 சூன் 1984 கட்டக், ஒடிசா, இந்தியா | (அகவை 95)
அரசியல் கட்சி | ஒருங்கிணைந்த முன்னணி |
வாழிடம்(s) | காஜீ சந்தை, கட்டக் |
கல்வி | பி.ஏ. பி. எல்., |
முன்னாள் கல்லூரி | ராவின்சா கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள பழைய சென்னை மாகாணத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெல்கான் கிராமத்தில் 8 மார்ச் 1889 அன்று பிறந்தார். கட்டக்கில் உள்ள ராவன்ஷா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகுபிசுவநாத் தாசு ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1921 முதல் 1930 வரை சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஒடியா மொழி பேசும் மக்களுக்கான தனி மாநிலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். ஏப்ரல் 1, 1936-ல் ஒடிசா பிரிந்த பிறகு, இவர் 19 சூலை 1937-ல் அதன் பிரதமரானார். இவர் 1946-ல் ஒரிசாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய அரசியலமைப்பு சபையில் உறுப்பினரானார். இவர் 16 ஏப்ரல் 1962 முதல் 30 ஏப்ரல் 1967 வரை உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.[2] 1966-ல், -வர் மக்கள் சங்கத்தின் (லாலா லஜபதி ராய் நிறுவிய லோக் சேவக் மண்டல்) தலைவராக நியமிக்கப்பட்டார். 1971ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, உத்கல் காங்கிரசு, சுதந்திராக் கட்சி மற்றும் ஜார்கண்ட் கட்சி ஆகியவை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி, ஒடிசாவில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முதலமைச்சரானார். இவர் 3 ஏப்ரல் 1971 முதல் 14 சூன் 1972 வரை பதவியிலிருந்தார்
மேற்கோள்கள்
தொகு- ↑ Das, B.; Rath, S.N. (1990). Bishwanath Das, a tribute: published on the occasion of Bishwanath Das Birth Centenary Celebration held under the auspices of the Utkal University. Dept. of Political Science, Utkal University. p. 19. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
- ↑ Bureau, OB (2019-11-26). "Know Odisha Greats Who Helped Frame India's Constitution - ODISHA BYTES". ODISHA BYTES. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
As members of the Constituent Assembly, several eminent personalities from Odisha too had made seminal contributions to the historic event on November 26, 1949. These included Bishwanath Das, Bichitrananda Das, Sarangadhar Das,...
வெளி இணைப்புகள்
தொகு- ஒரிசா ரிவ்யூ, ஜனவரி 2006 இல் குருகல்யாண் மஹாபத்ராவின் சிறு வாழ்க்கை வரலாறு .
- உத்தரபிரதேச கவர்னர் ஸ்ரீ பிஷ்வநாத் தாஸ் பற்றி .
- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிவநாத் கட்ஜு.