பாசுபரசு மூவாக்சைடு
பாஸ்பரஸ் மூவாக்சைடு என்பது ஓர் வேதிச்சேர்மம். இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு P4O6 ஆகும். இது டெட்ராபாசுபரசுஎக்சாக்சைடாக இருந்த போதிலும் இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாட்டை வைத்து பாசுபரசு மூவாக்சைடு என்றே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது நிறமற்ற திடப்பொருள். இது பாசுபரசு அமிலத்தின் (H3PO3) நீரிலியாக இருப்பினும், பாஸ்பரஸ் அமிலத்திலிருந்து நீர்நீக்கி பெற முடியாது. இது மெழுகுபோன்ற வெண்மை நிறப் படிகம். இது அதிக நச்சுத்தன்மைக் கொண்டது.[1]
பாசுபரசு ஆரஞ்சு நிறத்திலும், ஆக்சிசன் சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபரசு(III) ஆக்சைடு
பாசுபரசு செசுகியுவாக்சைடு பாசுபரசு ஆக்சைடு பாசுபரசு நீரிலி டெட்ராபாசுபரசு எக்சாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1314-24-5 | |
ChEBI | CHEBI:37372 |
ChemSpider | 109897 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123290 |
| |
பண்புகள் | |
P4O6 | |
வாய்ப்பாட்டு எடை | 219.88 g mol−1 |
தோற்றம் | நிறமற்ற ஒற்றைச்சாய்வு படிகம் அல்லது திரவம் |
அடர்த்தி | 2.135 கி/செமீ3 |
உருகுநிலை | 23.8 °C (74.8 °F; 296.9 K) |
கொதிநிலை | 173.1 °C (343.6 °F; 446.2 K) |
வினைபுரிகிறது | |
காடித்தன்மை எண் (pKa) | 9.4 |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பாசுபரசு மூசல்பைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இருநைட்ரசன் மூவாக்சைடு ஆர்சனிக் மூவாக்சைடு ஆண்டிமனி(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇச்சேர்மமானது பாசுபரசை மிகக்குறைந்த வெப்பநிலையில் மிகக்குறைந்த அளவிலான காற்றினைப் பயன்படுத்தி எரிதலுக்குட்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
- P4 + 3 O2 → P4O6
சிவப்பு பாசுபரசு உபாக்சைடையும் உள்ளடக்கிய துணை விளைபொருட்கள் கிடைக்கின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 A. F. Holleman; Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Boston: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.