பாட்டு (தொல்காப்பிய விளக்கம்)

(பாட்டு, தொல்காப்பிய விளக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொல்காப்பியம் மொழிநடையை யாப்பு எனக் குறிப்பிட்டு அதன் ஏழு வகைகளில் ஒன்றாகப் பாட்டைக் குறிப்பிடுகிறது.

ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றை அது பா என்கிறது. [1] மருட்பா என்பது இவை கலந்து வரும் பா [2] எனவே பா என்பது நான்கு வகை.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவை தொல்காப்பியம் குறிப்பிடும் பாட்டுக்கு இலக்கியங்களாகக் கொள்ளத்தக்கவை.

பாட்டின் உறுப்புகள் 26, பாட்டின் அமைதிகள் 8 ஆகிய 34 கூறுகளும் பாட்டில் அமைந்திருக்கும்.

அடிக்குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம் செய்யுளியல் 77, 78, 79, 80
  2. தொல்காப்பியம் செய்யுளியல் 81