பாதரசம் தெலூரைடு
பாதரசம் தெலூரைடு (Mercury telluride) என்பது HgTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் தெலூரியம் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் குறைக்கடத்திப் பொருட்களின் II-VI குழுவுடன் தொடர்புடைய ஓர் அரை உலோகமாகக் கருதப்படுகிறது. மெர்க்குரிக் தெலூரைடு, மெர்க்குரி(II) தெலூரைடு, பாதரச(II) தெலூரைடு என்ற வேறு பெயர்களாலும் பாதரச தெலூரைடு அடையாளப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
பாதரச தெலூரைடு | |
வேறு பெயர்கள்
பாதரச தெலூரைடு, பாதரசம்(II) தெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
12068-90-5 | |
EC number | 235-108-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82914 |
| |
பண்புகள் | |
HgTe | |
வாய்ப்பாட்டு எடை | 328.19 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற கனசதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 8.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 670°செல்சியசு |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சுபேலரைட்டு, cF8 |
புறவெளித் தொகுதி | F43m, No. 216 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
HgTe இயற்கையில் கொலராடோயிட்டு என்ற கனிம வடிவமாக தோன்றுகிறது.
பண்புகள்
தொகுவேறுவிதமாகக் கூறப்படாவிட்டால் அனைத்து பண்புகளும் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இருக்கும். அணிக்கோவை அளவுரு கனசதுர படிக வடிவத்தில் சுமார் 0.646 நானோமீட்டர் ஆகும். பரும குணகம் சுமார் 42.1 கிகா பாசுக்கல், வெப்ப விரிவாக்க குணகம் சுமார் 5.2×10−6/கெல்வின், நிலையான மின்கடத்தா மாறிலி 20.8, மாறும் மின்கடத்தா மாறிலி மதிப்பு 15.1, வெப்ப கடத்துத்திறன் குறைவாக 2.7 வாட்டு·மீ2/(மீ·கெல்வின்) என்ற இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. HgTe பிணைப்புகள் பலவீனமானவை என்பதால் குறைந்த கடினத்தன்மை மதிப்பு 2.7×107 கிலோ/மீ2. அளவில் உள்ளது.[1][2][3]
மாசிடல்
தொகுஎன்-வகை மாசு உடைய சேர்மத்தை போரான், அலுமினியம், காலியம் அல்லது இண்டியம் போன்ற தனிமங்களைக் கொண்டு அடையலாம். அயோடினும் இரும்பும் கூட என்-வகை கலப்பு சேர்மத்தை உருவாக்கும். பாதரசக் காலியிடங்கள் காரணமாக HgTe இயற்கையாகவே பி-வகை மாசுச் சேர்மமாகும். பி-வகை மாசு சேர்மத்தை துத்தநாகம், தாமிரம், வெள்ளி அல்லது தங்கத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அடையலாம். [1][2]
இடத்தியல் மின்காப்பி
தொகுபாதரசம் தெலூரைடு 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடத்தியல் மின்காப்பியாகும். இடத்தியல் மின்காப்பிகள் மொத்தமாக மின்சாரத்தை ஆதரிக்க முடியாது, ஆனால் மேற்பரப்பில் வரையறுக்கப்பட்ட மின்னணு நிலைகள் மின்சுமை கடத்திகளாகச் செயல்படும்..[5]
வேதியியல்
தொகுHgTe பிணைப்புகள் பலவீனமாக உள்ளன. இவற்றின் உருவாதல் என்தால்பி −32கிலோயூல்/மோல் ஆகும். இது தொடர்புடைய சேர்மமான காட்மியம் தெலூரைடுக்கான மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. ஐதரோபுரோமிக் அமிலம் போன்ற அமிலங்களால் HgTe எளிதில் அரிக்கும்.[1][2]
வளர்ச்சி
தொகுபாதரசம் மற்றும் தெலூரியம் அதிக பாதரச நீராவி அழுத்தத்தின் முன்னிலையில் அதிக அளவிலான வளர்ச்சி ஏற்படுகிறது. HgTe சேர்மத்தை புறவளர்ச்சியாகவும் வளர்க்கலாம். உலோகக்கரிம ஆவி-கட்டப் புறவளர்ச்சி முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1][2]
பாதரச தெலூரைடின் நானோ துகள்கள் காட்மியம் தெலூரைடு நானோதட்டணுக்களிலிருந்து நேர்மின் அயனிப் பரிமாற்றம் மூலம் பெறலாம்.[6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Brice, J. and Capper, P. (eds.) (1987) Properties of mercury cadmium telluride, EMIS datareview, INSPEC, IEE, London, UK.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Capper, P. (ed.) (1994) Properties of Narrow-Gap Cadmium-Based Compounds. INSPEC, IEE, London, UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85296-880-9
- ↑ Boctor, N.Z.; Kullerud, G. (1986). "Mercury selenide stoichiometry and phase relations in the mercury-selenium system". Journal of Solid State Chemistry 62 (2): 177. doi:10.1016/0022-4596(86)90229-X. Bibcode: 1986JSSCh..62..177B.
- ↑ Spencer, Joseph; Nesbitt, John; Trewhitt, Harrison; Kashtiban, Reza; Bell, Gavin; Ivanov, Victor; Faulques, Eric; Smith, David (2014). "Raman Spectroscopy of Optical Transitions and Vibrational Energies of ~1 nm HgTe Extreme Nanowires within Single Walled Carbon Nanotubes". ACS Nano 8 (9): 9044–52. doi:10.1021/nn5023632. பப்மெட்:25163005. https://eprints.soton.ac.uk/401309/1/HgTe%2540SWNT_ACSNano_Final.pdf.
- ↑ König, M; Wiedmann, S; Brüne, C; Roth, A; Buhmann, H; Molenkamp, L. W.; Qi, X. L.; Zhang, S. C. (2007). "Quantum Spin Hall Insulator State in HgTe Quantum Wells". Science 318 (5851): 766–770. doi:10.1126/science.1148047. பப்மெட்:17885096. Bibcode: 2007Sci...318..766K.
- ↑ Izquierdo, Eva; Robin, Adrien; Keuleyan, Sean; Lequeux, Nicolas; Lhuillier, Emmanuel; Ithurria, Sandrine (2016-08-12). "Strongly Confined HgTe 2D Nanoplatelets as Narrow Near-Infrared Emitters". Journal of the American Chemical Society 138 (33): 10496–10501. doi:10.1021/jacs.6b04429. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:27487074. https://pubs.acs.org/doi/full/10.1021/jacs.6b04429.