பாதரச(I) சல்பேட்டு

பாதரச(I) சல்பேட் (Mercury(I) sulfate), பொதுவாக மெர்குரஸ் சல்பேட் என அழைக்கப்படுகிறது, இது Hg2 SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும் .[2] பாதரச(I) சல்பேட் என்பது ஒரு உலோக கலவை, இது வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது பழுப்புநிறத்துாள் போன்ற உலோகச் சேர்மம் ஆகும்.[3] இது ஹைட்ரஜன் அணுக்கள் இரண்டையும் பாதரசம்(I) உடன் இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் உருவாகும் கந்தக அமிலத்தின் உலோக உப்பு ஆகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது; சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்டாலோ, உட்கொண்டாலோ அல்லது தோலால் உறிஞ்சப்பட்டாலோ அது மரணத்தை விளைவிக்கும் அளவு ஆபத்தானது.

பாதரச(I) சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) சல்பேட்டு
வேறு பெயர்கள்
மெர்க்குரஸ் சல்பேட்டு
இனங்காட்டிகள்
7783-36-0 Y
ChemSpider 22951 N
EC number 231-993-0
InChI
  • InChI=1S/2Hg.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 N
    Key: MINVSWONZWKMDC-UHFFFAOYSA-L N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24545
  • [O-]S(=O)(=O)[O-].[Hg+].[Hg+]
பண்புகள்
Hg2SO4
வாய்ப்பாட்டு எடை 497.24 கி/மோல்
தோற்றம் வெண்மை கலந்த மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி 7.56 கி/செமீm3
0.051 கி/100 மிலி (25 °செல்சியசு)
0.09 கி/100 மிலி (100 °செல்சியசு)
கரைதிறன் நைட்ரிக் அமிலத்தில் கரையும்,நீரில் கரையாது, சூடான கந்தக அமிலத்தில் கரையும்.
−123.0·10−6 cm3/mol
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
ஒற்றைச்சாய்வு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-743.1 kJ·mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
200.7 J·mol−1·K−1
வெப்பக் கொண்மை, C 132 J·mol−1·K−1[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச(I) புளோரைடு
பாதரச(I) குளோரைடு
பாதரச(I) புரோமைடு
பாதரச(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பாதரச(II) சல்பேட்டு
காட்மியம் சல்பேட்டு
தாலியம்(I) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமைப்பு

தொகு

பாதரச(!) சல்பேட்டின் படிக அமைப்பு Hg22+ ஆன இரட்டை மணி வடிவத்தையும் மற்றும் SO42− எதிரயனிகளால் முதன்மை அடிப்படை அலகுகளாலும் ஆனது. Hg22+ இரட்டை மணி நான்கு ஆக்ஸிஜன் அணுக்களில் Hg₋O தூரம் 2.23 முதல் 2.93Å வரையான துாரத்தில் சூழப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Hg-Hg அணுக்களிடை தூரம் சுமார் 2.500Å ஆகும்.[4] பாதரசம் (I) சல்பேட்டு பாதரச அணுக்களை 2.500Å என்ற பிணைப்பு நீளத்துடன் இரட்டைகளாக அமைத்து வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலோக அணு இரட்டையர்கள் ஒரு அலகு கலத்தில் ஒரு அச்சுக்கு இணையாக அமைந்திருக்கும். பாதரச அணு இரட்டைகளானவை எல்லையற்ற சங்கிலியான SO 4 - Hg - Hg - SO 4 - Hg - Hg - என்பதன் பகுதியை உருவாக்குகின்றன. Hg - Hg - O பிணைப்பு கோணமானது 165° ± 1 ஆகும். இந்தச் சங்கிலி அலகு கலத்தை குறுக்காக கடக்கிறது. பாதரச சல்பேட்டின் அமைப்பானது பலவீனமான Hg-O இடைவினைகளால் இணைப்பில் வைக்கப்பட்டுள்ளது. SO4 ஒற்றை எதிரயனியாக செயல்படாது, மாறாக பாதரச உலோகத்துடன் அணைவுப் பிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.[5]

தயாரிப்பு

தொகு

பாதரசம்(I) சல்பேட்டு தயாரிப்பதற்கான ஒரு வழியானது, பாதரசம் (I) நைட்ரேட்டின் அமிலக் கரைசலை 1 முதல் 6 கந்தக அமிலக் கரைசலுடன் கலப்பது ஆகும்.[6][7]

Hg 2 (NO 3 ) 2 + H 2 SO 4 → Hg 2 SO 4 + 2 HNO 3

அடர் கந்தக அமிலத்துடன் அதிகப்படியான பாதரசத்தை வினைபுரியச் செய்வதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்:[6]

2 Hg + 2 H 2 SO 4 → Hg 2 SO 4 + 2 H 2 O + SO 2

மின் வேதியியல் கலங்களில் பயன்பாடு

தொகு

பாதரச(I) சல்பேட் பெரும்பாலும் மின் வேதியியல் கலங்களில் பயன்படுத்தப்படுகிறது.[8][9][10] இது முதன்முதலில் மின்வேதியியல் கலங்களில் லாடிமர் கிளார்க்கால் 1872 இல் அறிமுகப்படுத்தப்பட்டது,[11] பின்னர் 1911 ஆம் ஆண்டில் இது ஜார்ஜ் அகஸ்டஸ் ஹுலெட் தயாரித்த வெஸ்டன் கலங்களில் மாற்றாக பயன்படுத்தப்பட்டது. 100° செல்சியசிற்கு மேல் அதிக வெப்பநிலையில் இது வெள்ளி சல்பேட்டுடன் ஒரு நல்ல மின்முனையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது;[12] பாதரச(I) சல்பேட்டு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிதைவுச் செயல்முறை வெப்பங்கொள் வினையாகும். இது 335 முதல் 500 வரையிலான வெப்பநிலையில் நிகழ்கிறது. பாதரச(I) சல்பேட்டு திட்ட மின்கலங்களைச் சாத்தியப்படுத்தும் அளவிற்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மிகக்குறைவான அளவு கரைதிறனையே (லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவிலேயே) கொண்டிருப்பதாலும், அதாவது எதிர்மின்முனையிலிருந்து பரவுவது அதிகமாக இல்லாமல் இருப்பதாலும், பாதரச மின்முனையில் ஒரு பெரிய ஆற்றலைக் கொடுப்பதற்கு இது போதுமானதாக இருக்கிறது.[13] பாதரச(I) சல்பேட் மின்வாய்கள் குளோரைடு அற்ற மின்கலன்கள் தேவைப்படும் நேர்வில் பயன்படுத்தப்படுகின்றன. இது குறிப்பாக, காரீய-அமில மின்கலங்கள் பயன்படுத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 5–19, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Intermediate Inorganic Chemistry by J. W. Mellor, published by Longmans, Green and Company, London, 1941, page 388
  3. http://www.chemicalbook.com/ChemicalProductProperty_EN_CB0259783.htm
  4. Preparation and Characterization of Dimercury(I)Monofluorophosphate(V), Hg2PO3F: Crystal Structure, Thermal Behavior, Vibrational Spectra, and Solid-State 31P and 19F NMR Spectra by Matthias Weil, Michael Puchberger, and Enrique J. Baran, published by Inorg. Chem. 2004, 43. pages 8330-8335
  5. Dorm, E. 1969. Structural studies on mercury(I) compounds. VI. Crystal structure of mercury(I) sulfate and selenate. Acta Chemica Scandinavica (1947-1973) 23:1607–15.
  6. 6.0 6.1 Google Books result, accessed 11 December 2010
  7. Mercurous Sulphate, cadmium sulphate, and the cadmium cell. by Hulett G. A. The physical review.1907. p.19.
  8. Influence of Microstucture on the Charge Storage Properties of Chemically Synthesized Manganese Dioxide by Mathieu Toupin, Thiery Brousse, and Daniel Belanger. Chem. Mater. 2002, 14, 3945-3952
  9. Electromotive Force Studies of Cell, CdxHgy | CdSO4,(m) I Hg2SO4, Hg, in Dioxane-Water Media by Somesh Chakrabarti and Sukumar Aditya. Journal of Chemical and Engineering Data, Vol.17, No. 1, 1972
  10. Characterization of Lithium Sulfate as an Unsymmetrical-Valence Salt Bridge for the Minimization of Liquid Junction Potentials in Aqueous - Organic Solvent Mixtures by Cristiana L. faverio, Patrizia R. Mussini, and Torquato Mussini. Anal. Chem. 1998, 70, 2589-2595
  11. GEORGE AUGUSTUS HULETT: FROM LIQUID CRYSTALS TO STANDARD CELL by John T. Stock. Bull. Hist. Chem. VOLUME 25, Number 2, 2000, p.91-98
  12. The Behavior of the Silver—Silver Sulfate and the Mercury—Mercurous Sulfate Electrodes at High Temperatures by M. H. Lietzke and R. W. Stoughton. J. Am. Chem. Soc., 1953, 75 (21), pp 5226–5227 DOI: 10.1021/ja01117a024
  13. Sulphates of Mercury and Standard Cells. by Elliott, R. B. and Hulett, G. A. The Journal of Physical Chemistry 36.7 (1932): 2083-2086.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(I)_சல்பேட்டு&oldid=2867845" இலிருந்து மீள்விக்கப்பட்டது