பாத்திமா லோதி

பாத்திமா லோதி (Fatima Lodhi) [1] (பிறப்பு 29 செப்டம்பர் 1989) ஒரு சமூக ஆர்வலர் ஆவார். பாக்கித்தானின் முதல் நிற எதிர்ப்பு பிரச்சாரமான'டார்க் இஸ் திவைன் என்ற திட்டத்தை தொடங்கியதன் காரணமாக இவர் "பன்முகத்தன்மையின் வாகையாளர்" என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் & யங் வுமன் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. [2] பாத்திமா லோதி "நிறவாதத்திற்கு " எதிரான நிலைப்பாட்டை எடுத்த முதல் பாக்கித்தானியர் ஆவார். [3]

பாத்திமா லோதி
பிறப்புசெப்டம்பர் 29, 1989 (1989-09-29) (அகவை 34)
கராச்சி, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானி
பணிசமூக செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

லோதி முன்னாள் சர்வதேச துடுப்பாட்ட வீரரும், கராச்சி துடுப்பாட்ட அணியின் தேர்வாளருமான அப்பாஸ் கான் லோதியின் பேத்தி ஆவார். இவர் கராச்சியில் பிறந்து இஸ்லாமாபாத்தில் வளர்ந்தார்.

கராச்சியில் உள்ள புனித பேட்ரிக் பள்ளியில், [4] தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார் , தி சிட்டி பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளியையும், இஸ்லாமாபாத்தில் இருந்து சர்வதேச உறவுகள் பிரிவில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றார். லோதி யுனைடெட் ஸ்டேட்ஸ் பீஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் மற்றும் நேஷனல் அசோசியேசன் ஆஃப் சோசியசல் ஒர்க்கர்சு ஆகியவற்றில் இருந்து பல சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார்.

சொற்பொழிவு தொகு

லோதி ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் ஆவார். இவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பொது மன்றங்களிலும் பேசியுள்ளார்.

இவர் 2014ஆம் ஆண்டில் டெட் மாநாட்டில் ஒரு உரையை நிகழ்த்தினார் மற்றும் 2015 இல் "சர்வதேச பெண்கள் அதிகாரமளித்தல் மாநாட்டில்" ஒரு குழு விவாதத்திலும் கலந்து கொண்டார்.

நிறவாதம் குறித்த கருத்துக்களை வழங்க "பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கில்" இவர் அழைக்கப்பட்டார்.

பிடிவி தொலைக்காட்சியில் உலக சமத்துவ நாள் அன்று விருந்தினர் சொற்பொழிவாக கலந்துகொள்ள இவர் அழைக்கப்பட்டார்.

நிறவாதம் பற்றி பேச தேசிய வானொலி அலைவரிசையான FM-100 மூலம் விருந்தினராக அழைக்கப்பட்டார்.

நிறாவாதம் குறித்து விவாதிக்க தேசிய தொலைக்காட்சி ஒன்று இவரை அழைத்தது.

அங்கீகாரம், நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் தொகு

உலகெங்கிலும் உள்ள பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் லோதி நேர்காணல் செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டு "டார்க் இஸ் திவைன்" என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பரப்பினார். ஓர் இதழில் அறிவிக்கப்பட்ட 50 சக்திவாய்ந்த பெண்களில் இவரும் ஒருவர்.[சான்று தேவை]

தி ரோட்டேரியன் பத்திரிகை நேர்காணலில் கலந்து கொண்டார். [5]

பிபிசி தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டார்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வானொலி நிறுவனம் வுமன் ஆஃப் தி வீக் என்று கௌரவிக்கப்பட்டார். பிரத்தியேகமாக ஆப்கான் வாய்ஸ் ரேடியோ எனும் வானொலியால் நேர்காணல் செய்யப்பட்டார்.

உமன் வாய்சஸ் நவ் -நேர்காணல். [6] "பிரவுன் கேர்ள் இதழில்" "பாத்திமா லோதியின்" நிறவாதத்தினை எதிர்த்துப் போராடும் கதை இடம்பெற்றது. [7]

தெ நியூஸ் என்பதில் இவர் பற்றிய குறிப்பு இடம்பெற்றது. [8]

டான் செய்தித்தாளில் இவரது கட்டுரை இடம்பெற்றது. [9]

இவரைப் பற்றிய கட்டுரை இலங்கையின் செய்தித்தாளான தி நேஷனில் வெளியிடப்பட்டது. [10]

இவரது கட்டுரைகள் ஆப்கன் குரல் வானொலியின் இணையதளத்தில், இந்தியாவின் ஊடக தளமான யூத் கி ஆவாஸில் , இந்தியாவின் ஆன்லைன் செய்தி இணையதளமான பஞ்சாப் கபரில் மற்றும் என்ஆர்ஐ நியூஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. [3] [11][12][13]

ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவரது நேர்காணல் நடைபெற்றது. [14]

உமன்ஸ் ஓன் மேகசினில் நேர்காணல்.

கபர்பீட்- நேர்காணல்.

சான்றுகள் தொகு

  1. "Vote for Fatima Lodhi – The News Women". Women.thenews.com.pk. Archived from the original on 2017-09-10. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  2. "PUAN-IWEC 2015 on Twitter". Twitter.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  3. 3.0 3.1 "AV RADIO – ARTICLES – SOCIAL – Dark is Divine". Afghanvoice.org.uk. Archived from the original on 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  4. Syed Muhammed Khurram Reaz. "St. Patrick's High School, Karachi, Pakistan". Stpats.edu.pk. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  6. "Women's Voices Now: The WVoice". Womensvoicesnow.org. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  7. "The 'Dark is Divine' Campaign Battles Intra-Racism in the South Asian Subcontinent – Brown Girl Magazine". Brown Girl Magazine. Archived from the original on 2015-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  8. "Searching for the 'white' path". Thenews.com.pk. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  9. "Anti-colour discrimination drive wants to change mindsets - ePaper - DAWN.COM". Dawn.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  10. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Why I Started 'Dark Is Divine' To Fight Against 'Colourism' And Beauty Perceptions In Asia". Youthkiawaaz.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  12. "September Issue 2014 – Women's Own Magazine – Facebook". Facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  13. ""Dark is Divine" Voice of the Victims of Colorism – NRI News 24x7". Nrinews24x7.com. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
  14. "Pakistani youths enamoured by city's food, say borders don't matter". Hindustantimes.com. Archived from the original on October 2, 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_லோதி&oldid=3700640" இலிருந்து மீள்விக்கப்பட்டது