பானர்ஜி (நடிகர்)

இந்திய நடிகர்

பானர்ஜி (Banerjee) (பிறப்பு மகந்தி வேணு பானர்ஜி )[1] ஓர் இந்திய நடிகராவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். திரைப்படங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல படங்களில் இவர் நாயகனுக்கு எதிரியாகவும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.

பானர்ஜி
பிறப்புமகந்தி வேணு பானர்ஜி
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
எம். சைலஜா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், விசயவாடாவின் கவர்னர்பேட்டையில் பிறந்தார்.[2] கொண்டப்பள்ளி கோட்டீசுவரம்மா நடத்திவந்த மாண்டிசோரி குழந்தைகள் பள்ளியில் படித்தார். இவரது தந்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் தில்லிக்கு மாற்றப்பட்டதால், இவரும் தில்லியில் சிறிது காலம் தங்கினார். குண்டூரில் உள்ள ஏ.சி கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அதன் பிறகு சென்னையில் விடுதி மேலாண்மையில் பட்டம் பெற்றார். பின்னர், இளங்கலை பட்டத்தையும் முடித்தார். பின்னர் விஜயநகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றினார். இவருக்கு சென்னையில் வசிக்கும் ஒரு மூத்த சகோதரி உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

தொழில் தொகு

இவர் ஆரம்பத்தில் உ. விசுவேசுவர ராவ் என்பவருடன் படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. MAA, Stars. "Benerjee". maastars.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  2. HM TV. "Interview with Banerji". YouTube. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானர்ஜி_(நடிகர்)&oldid=3505893" இலிருந்து மீள்விக்கப்பட்டது