பானி பூசண் சக்ரவர்த்தி
பானி பூசண் சக்ரவர்த்தி (Phani Bhusan Chakravartti) (1898 - 8 மே 1981) என்பவர்கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய மற்றும் பெங்காலி நிரந்தர தலைமை நீதிபதி ஆவார்.[1][2]
பானி பூசண் சக்ரவர்த்தி | |
---|---|
4ஆவது மேற்கு வங்காள ஆளுநர்l | |
பதவியில் 8 ஆகத்து 1956 – 3 நவம்பர் 1956 | |
முன்னையவர் | அரேந்திர கூமர் முகர்சி |
பின்னவர் | பத்மசா நாயுடு |
தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1952–1958 | |
முன்னையவர் | ஆர்தர் திரிவோர் ஹாரிசு |
பின்னவர் | குல்லாடா சரன் தாசு குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1898 |
இறப்பு | மே 8, 1981 | (அகவை 82–83)
பணி
தொகுசக்ரவர்த்தி பிரித்தானிய இந்தியாவில் டாக்காவில் பிறந்தார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சேருவதற்கு முன், கொல்கத்தா ஜெகன்னாத் கல்லூரி மற்றும் ரிப்பன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் (1920-1926). 1945ல் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சக்கரவர்த்தி 1952-ல் சர் ஆர்தர் ட்ரெவர் ஹாரிஸுக்குப் பிறகு கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.[3] 1956ஆம் ஆண்டு அரேந்திர குமார் முகர்சியின் திடீர் மறைவுக்குப் பிறகு, இவர் சில மாதங்களுக்கு மேற்கு வங்காளத்தின் தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். சக்கரவர்த்தி 1958-ல் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
புத்தக வெளியீடு
தொகுசக்கரவர்த்தி மார்னிங் ப்ளாசம்ஸ் என்ற ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Chief Justices". calcuttahighcourt.nic.in. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
- ↑ "Office of the Official Liquidator". olkolkata.in. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
- ↑ "FORMER CHIEF JUSTICES" (PDF). Archived from the original (PDF) on 22 August 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
- ↑ Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0.Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 322. ISBN 81-85626-65-0.