பானுமதி தேவி

ஒடிய நடிகை

பானுமதி தேவி ( Bhanumati Devi ) (15 மே 1934 - 4 சனவரி 2013) பர்மிய நாட்டில் பிறந்த இந்தியத் திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார் .

பானுமதி தேவி
பிறப்பு(1934-05-15)15 மே 1934 [1]
சிட்டவே, இராகினி, பிரித்தானிய பர்மா ( தற்போதைய மியான்மர் )
இறப்பு4 சனவரி 2013(2013-01-04) (அகவை 78)
புரி
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட, நாடக நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1953–1987
பெற்றோர்சாரதி பட்நாயக்
பட்டாதேவி
வாழ்க்கைத்
துணை
அரிகர பாண்டே
பிள்ளைகள்சுவர்ணலதா
விருதுகள்ஜெயதேவர் விருது

தேவி பிரித்தானிய பர்மாவில் 15 மே 1934-இல் பிறந்தார் [2] இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து தனது இந்திய குடும்பத்துடன் இந்தியாவின் ஒடிசாவிலுள்ள புரிக்கு குடிபெயர்ந்தார். [3] [4]

நாடகங்கள் தொகு

தேவி, 1942-இல் தனது ஏழு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். [4] லக்யே ஹிரா மற்றும் நபஹு ரதி நாமரு பதி' ஆகிய நாடகங்களில் இவர் சிறந்த மேடைப் பாத்திரங்களை பெற்றார். [4] தேவி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டக்கிலுள்ள அன்னபூர்ணா நாடக நிறுவனத்தில் நடித்து வந்தார்.[5]

திரைப்படங்கள் தொகு

தனது பத்தொன்பது வயதில் 1954 ஆம் ஆண்டு அமரி கன் ஜியா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். குறிப்பாக 1950கள் மற்றும் 1960களில் ஒடிசா திரைப்படத்துறையில் தீவிரமாக இருந்தார். பத்துக்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் தேவி முக்கிய வேடத்தில் நடித்தார். [6] 1966-ஆம் ஆண்டு ஒடியா திரைப்படமான மாத்திரா மனிஷாவில் ஹராபௌ என்ற வேடத்திற்காக தேசிய திரைப்பட விருதை வென்றார் . [5] 1986ஆம் [5] ஆண்டு வெளியான ஜெய்தேவ் இவரது கடைசிப் படமாகும்.

விருது தொகு

தேவிக்கு 1985-இல் சங்கீத நாடக அகாதமி சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்தது.[7] 2005-ஆம் ஆண்டில், ஒடிசா மாநில திரைப்பட விருதுகளில் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜெய்தேவ் விருதைப் பெற்றார்.

இறப்பு தொகு

பானுமதி தேவி தனது 78வது வயதில் 4 சனவரி 2013 அன்று ஒடிசாவின் புரியிலுள்ள செஞ்சிலுவைச் சாலையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

சான்றுகள் தொகு

  1. "Bhanumati leaves the 'stage' | Orissa Post". orissapost.com. 2013. Archived from the original on 16 February 2013. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013. Born May 15, 1934, in Burma, Bhanumati had returned Orissa
  2. "Bhanumati leaves the ‘stage’". Orissa Times. 2013-01-05. http://www.orissapost.com/bhanumati-leaves-the-stage/. 
  3. "Bhanumati Devi cremated in Puri". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-01-06 இம் மூலத்தில் இருந்து 2013-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216074115/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-06/bhubaneswar/36173696_1_bhanumati-devi-odia-cinema. .
  4. 4.0 4.1 4.2 "Bhanumati leaves the ‘stage’". Orissa Times. 2013-01-05. http://www.orissapost.com/bhanumati-leaves-the-stage/. "Bhanumati leaves the 'stage'".
  5. 5.0 5.1 5.2 "Veteran Actor Bhanumati Devi dead". இந்தியன் எக்சுபிரசு. 2013-01-05. http://newindianexpress.com/states/odisha/article1408447.ece. "Veteran Actor Bhanumati Devi dead".
  6. "Veteran Actor Bhanumati Devi dead". 2013-01-05. http://newindianexpress.com/states/odisha/article1408447.ece. "Veteran Actor Bhanumati Devi dead".
  7. "Veteran Actor Bhanumati Devi dead". http://newindianexpress.com/states/odisha/article1408447.ece. "Veteran Actor Bhanumati Devi dead".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுமதி_தேவி&oldid=3510648" இலிருந்து மீள்விக்கப்பட்டது