பானு பிரகாஷ் மிர்தா
இந்திய அரசியல்வாதி
பானு பிரகாஷ் மிர்தா (Bhanu Prakash Mirdha, பிறப்பு 27 மார்ச் 1953) என்பவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌரைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் 11வது மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1997 இல் நடந்த 11வது மக்களவைக்கான இடைத்தேர்தலில் நாகௌர் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தனது மாமா ராம் நிவாஸ் மிர்தா என்பவரை தோற்கடித்தார்.[1]
பானு பிரகாஷ் மிர்தா | |
---|---|
உறுப்பினர் பதினொராவது மக்களவை | |
பின்னவர் | சாம் ரகுநாத் சௌத்ரி |
தொகுதி | நாகௌர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 மார்ச்சு 1953 நாகௌர், இராசத்தான் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | ராதுராம் மிர்தா (தந்தை) |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇவர் 27 மார்ச் 1953 அன்று இராத்தானின் நாகௌர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் நாதுராம் மிர்தா. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை பயின்றார்.விவசாயத் தொழிலை தொழில்முறையாக செய்த இவருக்கு இந்திரா மிர்தா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Sketch". 2007-09-26. Archived from the original on 26 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
- பரணிடப்பட்டது 13 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம்